வீடு / சமையல் குறிப்பு / முருங்கை கீரை சூப்

Photo of Drumstick leaves Soup by Saivardhini Badrinarayanan at BetterButter
522
3
0.0(0)
0

முருங்கை கீரை சூப்

Apr-09-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முருங்கை கீரை சூப் செய்முறை பற்றி

ஆரோக்கியமான மிகவும் சுவையான முருங்கைக்கீரை சூப்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சூப்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முருங்கைக்கீரை 1 கப்
  2. மசூர் தால் 1/2 கப்
  3. பூண்டு 10 பல்
  4. ஜீரகம் 2 மேஜைக்கரண்டி
  5. மிளகு 1 மேஜைக்கரண்டி
  6. சோம்பு 1 மேஜைக்கரண்டி
  7. பட்டை 1
  8. கிராம்பு 2
  9. பிரிஞ்சி இலை 1
  10. கல்பாசி 2 மேஜைக்கரண்டி
  11. கொத்துமல்லி இலை காம்பு 1/2 கப்
  12. பச்சைமிளகாய் 4
  13. சோடா உப்பு 1 சிட்டிகை
  14. உப்பு
  15. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  16. தண்ணீர் 4 கப்

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு குக்கரில் மசூர் தால் 1/2 கப் , 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேகவைக்கவும்.
  2. பின் வேக வைத்த பருப்பில் ஜீரகம், மிளகு, முருங்கைக்காய், கொத்துமல்லி இலை காம்பு, பச்சைமிளகாய், பூண்டு , இஞ்சி , 2 கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு வேக வைக்கவும்.
  3. குக்கர் விசில் போனபின் அதிலிருந்து முருங்கைக்காய் மட்டும் தனியே எடுத்து சூடு ஆறியபின் அதனின் விழுதை மட்டும் எடுத்து வைக்கவும்.
  4. பின் ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதி நிலை வரும்போது சுத்தம் செய்த முருங்கை கீரை மற்றும் சோடா உப்பு சேர்த்து 10 செகண்ட் கழித்து நீரை வடிகட்டி 3 முறை குளிர்ந்த நீரில் அலசவும்.
  5. அலசிய முருங்கைக்கீரையை மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைக்கவும்.
  6. பின் அரைத்த முருங்கைக்கீரை விழுதை வேக வைத்த கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
  7. பின் ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து சோம்பு, பட்டை, கிராம்பு, பிரிஞ்சி இலை, கல்பாசி சேர்த்து நன்கு வறுத்து குக்கரில் சேர்க்கவும்.பின் உப்புசேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  8. பின் சூப் கலவை ஆறியபின் நன்கு மசித்து கொள்ளவும். பின் வடிகட்டியில் நன்கு வடிகட்டி கொள்ளவும்.
  9. பின் லேசாக சூடு செய்து சூப் கிண்ணத்தில் ஊற்றி கொத்துமல்லி இலை தூவி, மிளகு தூள் சேர்த்து வேக வைத்த முருங்கைக்காய் விழுதை சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்