வீடு / சமையல் குறிப்பு / மொருமொருப்பான வெண்டைக்காய் குர்குரே

Photo of Crispy Bhindi Kurkure by Hameed Nooh at BetterButter
211
5
0.0(0)
0

மொருமொருப்பான வெண்டைக்காய் குர்குரே

Apr-11-2018
Hameed Nooh
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மொருமொருப்பான வெண்டைக்காய் குர்குரே செய்முறை பற்றி

வெண்டைக்காயை மெலிதாக நறுக்கி மசாலாக்கள் சேர்த்து பொறித்தெடுக்கும் இந்த குர்குரே தேனீரோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் - 200 கிராம்
  2. அரிசிமாவு - 2 மேசைக்கரண்டி
  3. கடலைமாவு - 3 மேசைக்கரண்டி
  4. கார்ன் ப்ளார் - 2 மேசைக்கரண்டி
  5. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  6. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
  8. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
  9. எலுமிச்சை - 1
  10. எண்ணெய் -பொறிக்க
  11. உப்பு - சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. முதலில் வெண்டைக்காயை நீளமாக மற்றும் மெல்லிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு அதனோடு அரிசி மாவு கரம் மசாலா கடலைமாவு கார்ன் ப்ளார் மிளகாய் தூள் மஞ்சள் தூள் சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும்.
  3. எலுமிச்சையை பிழிந்து நன்றாக பிரட்டவும்.
  4. கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரட்டி வைத்த வெண்டைக்காயை உதிர்த்து போட்டு பொன்னிறமாக பொறித்தெடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்