சிறுநீர் தொற்றைத் தவிர்க்க மற்றும் குணப்படுத்த 10 வீட்டு முறைகள்

Spread the love

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலில் உட்காருகிறீர்கள். ஆனால் சிறுநீர் கழிக்க முடியவில்லை. சிறிது அளவு கழித்தாலும், நெருப்பாய் எரிகிறது. இது தன சிறுநீர் தொற்றின் அறிகுறி. நீங்கள் சிறுநீர் பாதை தொற்றினால் அவதி பட்டுக் கொண்டு இருந்தால், சிறுநீர் கழிக்கும் எண்ணமே பெரும் அச்சத்தை தரலாம்.

சிறுநீர் குழாய் தொற்று இப்பொழுது மிகப் பரவலாகக் காணப்படுகிறது. பெண்களில் சிறுநீர் தொற்றின் காரணங்கள் இவை –

  • சிறுநீர் பையை முழுமையாக காலியாகாமை
  • உடல் வறட்சி
  • மாதவிடாய் நாட்களில் உபயோகப்படுத்தும் பொருட்கள்
  • மலச்சிக்கல்
  • சர்க்கரை நோய்
  • சுத்தமில்லாத கழிவறை உபயோகித்தல்
  • உள்ளாடையில் சிறுநீர் தங்குதல்

பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தாவிட்டாலும், சிறுநீர் தோற்று நோயை சரியான காலத்தில் குணப்படுத்த வேண்டும். இல்லாவிடில் இது சிறுநீரகத்தைப் பாதிக்கும்.

சிறுநீர் குழாய் தொற்றின் அறிகுறிகள் இவை –

  • சிறுநீர் கழிக்கும் பொழுது வலித்தல்
  • அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் வருதல்
  • சிறுநீர் கழிக்கும் பொழுது எரிதல்
  • சிறுநீரில் சளி அல்லது ரத்தம் கசிதல்
  • உடலுறவின் போது வலித்தல்
  • கடும் நாற்றத்துடன் சிறுநீர் கழித்தல்
  • கழிவறைக்கு அடிக்கடி செல்லுதல்
  • சிறுநீர் பை அருகே வலித்தல்
  • குளிர் மற்றும் காய்ச்சல்

பொதுவாக மருந்து மற்றும் மாத்திரையின் மூலம் தான் சிறுநீர் தோற்று குணப்படுத்தப் படுகிறது. ஆனால், கீழே உள்ள குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் சிறுநீர் தொற்றைத் தவிர்க்கலாம் மற்றும் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை அகற்றலாம்.

 

1.நீரின்றி உயிரில்லை

முதல் முக்கியமான குறிப்பு நீர் அதிகம் அருந்த வேண்டும். தேவையற்ற நுண்ணுயிரிகளை உடலை விட்டு சிறுநீர் மூலம் வெளியேற்ற தண்ணீர் மிகவும் அவசியம். சிறுநீர் குழாய் தொற்றைத் தவிர்க்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் 6 முதல் 8 குவளை தண்ணீர் அருந்த வேண்டும்.

 

2.சிட்ரஸ் பழங்களை அதிகம் உண்ணவு

பெருநெல்லிக்காய், ஆரஞ்சு, சிறுநெல்லி மற்றும் எலுமிச்சை ஆகிய பழங்கள் வைட்டமின் C மற்றும் சிட்ரிக் அமிலம் நிறைந்தவை. இது நச்சு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை அளிக்க உதவுகின்றன. அமிலத்தன்மை நிறைந்த இடத்தில் நுண்ணுயிரிகள் வாழ முடியாது. அதனால் இந்த பழங்கள் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகின்றன. வைட்டமின் C மாத்திரைகளை உண்ணும் முன் மருத்துவரைக் கேட்டு கொள்ளவும்.

 

3.சிறுநீர் பை எதிரிகளைத் தள்ளி வைக்கவும்

சிறுநீர் குழாய் தொற்றினால் அவதிப் படும் பொழுது காபி, மது மற்றும் கார்பன் உள்ள குளிர்பானங்களை அருந்தாதீர்கள். நோய் தொற்றை வெளியேற்ற உடலுக்கு உதவுங்கள்.

 

4.கழிவறைக்குச் செல்வதைத் தவிர்க்காதீர்கள்

சிறுநீர் தோற்று இருக்கிறதோ இல்லையோ, சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றினால் கழித்து விடுங்கள். அடக்கி வைத்திருந்தால் தான் நுண்ணுயிரிகள் உள்ளே வளர்ந்து தொற்று உண்டாக்கும். சிறுநீர் தொற்று ஏற்பட்டு இருக்கும்பொழுது சிறுநீர் கழித்தால், அந்த நுண்ணுயிரிகளை சிறிதளவு வெளியேற்றுகிறீர்கள் என்று அர்த்தம்.

 

5.உணவில் ப்ரோபயாட்டிக் சேர்த்துங்கள்

தயிர் மற்றும் கடைந்த தயிர் நச்சுப் பொருட்களை வெளியேற்ற பெரிதும் உதவுகின்றன. சிறுநீர் தொற்றின் பொது ஏற்படும் எரிச்சலை மட்டுப் படுத்த ப்ரோபயாட்டிக் உணவு உதவும்.

 

6.ஆர்கனோ எண்ணெய் உபயோகப்படுத்தவும்.

நுண்ணியிரிகள் மற்றும் கிருமிகள் வளர்வதைத் தடுக்கும் ஆற்றல் ஆர்கனோ எண்ணெய்க்கு உண்டு.

 

7.பர்சேலே தண்ணீர் அருந்தவும்

பர்சேலேயில் உள்ள அபிஜெனின், அழற்சியை எதிர்ப்பதற்கு சிறுநீரை பிரிப்பதற்கும் உதவுகின்றது. இந்த குணங்கள் உடலில் உள்ள அதிகப்படி நீரை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது. தொற்றை குணப்படுத்த பார்ஸ்லே தண்ணீரை அருந்துங்கள்.

 

8.வெள்ளரி கடியுங்கள்

வெள்ளரியில் நீர் சத்து அதிகம் உள்ளதால், உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.

 

9.வெப்பம் வையுங்கள்

சிறுநீர் தொற்றின் போது வலி அதிகம் இருக்கும். அடிவயிறு மற்றும் இடுப்பு பகுதியில் வெப்பம் வைத்தால், வழியில் இருந்து சிறிது நிவாரணம் கிடைக்கும்.

 

10. பூண்டு உண்ணுங்கள்

பூண்டைத் தவிர வேறு சிறந்த மருந்து சிறுநீர் தொற்றிற்கு இல்லை. பூண்டில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சியைத் தவிர்க்கும் மற்றும் எதிர்ப்பு சக்தி வளர்க்கும் திறன் சிறுநீர் தொற்றிற்கு சிறந்த சிகிச்சை ஆகும்.

 

பட மூலம் – மெடிசின் ஹெல்த் சர்வீஸ், செகண்ட் விண்ட் வாட்டர் சிஸ்டம், சலோன், டைம்ஸ் ஆப் இந்தியா, ஹெல்த்தி லைப் அண்ட் பியூட்டி, மிஸஸ். வேகாஸ், ஓல்ட் பார்ம்ஸ் அல்மனக், லசாடா பிலிபைன்ஸ், தி கார்டியன் நைஜீரியா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன