Search

Home / Uncategorized / வீட்டில் கண்டிப்பாக வைக்ககூடாத 10 பொருட்கள்

வீட்டில் கண்டிப்பாக வைக்ககூடாத 10 பொருட்கள்

Nithya Lakshmi | செப்டம்பர் 4, 2018

அழகாக தெரிவதோடு மட்டுமல்லாமல், ஒரு வீடு என்பது அமைதியாக மற்றும் நல்ல சக்தி நிறைந்து இருக்க வேண்டும். அப்பொழுது தான் வீட்டு உறுப்பினர்கள் ஒற்றுமையாக வாழ முடியும். பழங்காலத்தில் இருந்து வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டுவதற்கு அடிப்படை வழிகாட்டியாக இருந்து வருகிறது. இக்காலத்தில் பெங் ஷுய் கூட புகழடைந்து வருகிறது. இரு அறிவியலிலும், சில பொருட்கள் கொடுக்க பட்டு இருக்கின்றன. அவற்றை வீட்டில் வைத்தால், கெட்ட சக்தியை பரப்புவது மட்டுமல்லாமல் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பாதிக்கும்.

அப்படி வீட்டில் இருக்கக்கூடாத 10 பொருட்கள் இங்கே கொடுக்கப்பட்டு இருக்கின்றன:

 

1.மூழ்கும் கப்பல்

மூழ்குகின்ற கப்பலின் படத்தை வீட்டில் வைப்பது வீட்டில் வாழ்பவர்களின் முன்னேற்றத்தில் முட்டுக்கட்டை இருப்பது போல. மூழ்கும் கப்பல் அதன் கடைசி கட்டத்தை எட்டுவது போல, வீட்டில் உள்ளவர்கள் வாழ்வும் அழிந்து விடும் என்பதை குறிக்கின்றது. அப்படி பட்ட படங்கள் வீட்டில் வைத்திருக்க கூடாது.

 

2.அழும் குழந்தையின் படம்

அழுகின்ற அல்லது சோகமான குழந்தையின் படம் வீட்டிற்கு கெட்ட சக்தியை கொண்டு வரும். அப்படி பட்ட படங்களை வீட்டில் வைத்தால், வீட்டில் உள்ள பெண்களுக்கு சற்றும் ஆகாது. வீட்டில் ஒரு மனசோர்வு இருந்து கொண்டே இருக்கும். அதற்கு பதிலாக குழந்தை கிருஷ்ணர் வெண்ணெய் உண்ணும் படத்தை வீட்டில் வைக்கலாம். இது மிகவும் சிறப்பானது.

 

3.போர்க்களத்தின் படம் அல்லது மகாபாரதத்தின் ஏதேனும் ஒரு காட்சி

உங்கள் வீட்டின் சுவர்களை யுத்த காட்சிகள் அல்லது மகாபாரதத்தின் ஏதேனும் ஒரு காட்சி ஆகியவற்றை கொண்டு அலங்கரிக்க கூடாது. அது வீட்டில் போர்க்களம் போன்ற நிலைமையை உண்டாக்கும். அப்படி பட்ட படங்களை வைத்தால் வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படும்.

 

4.உடைந்த சிலைகள்

உங்கள் வீட்டில் உடைந்த சிலைகளை வைத்திருக்க கூடாது. உடைந்த கடவுள் சிலைகள் இருந்தால், அவை ஓடுகின்ற தண்ணீரிலோ அல்லது பச்சை மரத்தின் வேரிலோ வைக்க வேண்டும். உடைந்த சிலைகள் வைப்பது வீட்டில் கேட்ட சக்தியையும் நிறைய பிரச்சனைகளையும் குடும்ப உறுப்பினர்களுக்கு வரவைக்கும்.

 

5.நடராஜரின் படம் அல்லது சிலை

நாட்டியம் ஆடுபவர்களின் வீட்டில் ஆடும் நடராஜர் படம் இருப்பது இயல்பானது. ஆனால் இந்த சிலை அமங்கலமானது. இந்த சிலை ஆடும் சிவபெருமானைக் காட்டுகிறது, ஆனால் இது அழிவையும் ஆரோக்கிய கேட்டையும் குறிக்கின்றது.

 

6.உடைந்த கண்ணாடி

உடைந்த முகம் பார்க்கும் கண்ணாடி அல்லது மற்ற கண்ணாடி அனைத்தையும் தூக்கி எரிந்து விட வேண்டும். அவை கெட்ட சக்தியை வீட்டிற்குள் கொண்டு வருபவை. நிறைய மக்கள் உடைந்த கண்ணாடியை தூக்கி போடாமல் அப்படியே உபயோகப்படுத்துவர். இது வாஸ்து தோஷத்தை ஏற்படுத்தி குடும்ப சொத்துக்களை இழக்க நேரிடும். வீட்டில் உடைந்த கண்ணாடியை வைத்திருக்காதீர்கள். ஒருபோதும் உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்காதீர்கள்.

 

7.காய்ந்த வதங்கிய செடிகள் அல்லது முள்ளுடன் கூடிய செடிகள்

வீட்டின் பலகணியில் அல்லது தோட்டத்தில் செடிகள் வைப்பது நல்லது தான். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் படி, காய்ந்த சருகான, முட்களை உடைய செடிகளை வைக்க கூடாது. நல்ல சக்தி வீட்டில் பரவுவதை அவை தடுக்கின்றன. வீட்டில் செல்வாக்கு மற்றும் செல்வம் பெருகுவதற்கு இவை தடை செய்கின்றன. எப்பொழுதும் காய்ந்த இலைகளை செடியை விட்டு எடுத்து விடுங்கள்.

 

8.ஓடுகின்ற குழாய்.

உங்கள் வீட்டில் ஏதேனும் குழாய் சரியாக மூடாமல் இருந்தால், அதை உடனே சரி செய்யுங்கள். ஒழுகும் தண்ணீரினால் தண்ணீர் மட்டும் குறையாது, உங்கள் செல்வமும் சேர்த்து குறையும். நிறைகுடம் செல்வம் மற்றும் செல்வாக்கின் அடையாளம்.

 

9.சரியில்லாத அழுக்கான நுழைவாயில்

எப்பொழுதும் உங்கள் நுழைவாயிலை சுத்தமாகவும் சரியாகவும் வையுங்கள். நல்ல பெயர்பலகையை கதவில் மாட்டி மற்றும் தோரணங்கள் தொங்கவிட்டால், வீட்டில் நல்ல சக்தி பெருகும். நுழைவாயிலின் முன் அல்லது அருகே குப்பையை வைக்க வேண்டாம். அது வீட்டினுள் கெட்ட சக்தியை கொண்டு வரும்.

 

10.நின்றுபோன கடிகாரம்

ஓடும் கடிகாரம் தான் உபயோகமானது. வாஸ்தின் படி, சக்திகளின் ஓட்டத்தை கடிகாரம் பாதிக்கும். ஓடும் கடிகாரம் நல்ல சக்தியையும் நின்று போன கடிகாரம் கெட்ட சக்தியையும் கொண்டு வரும். செல்வம் மற்றும் செல்வாக்கை பாதுகாக்க, நின்று போன கடிகாரத்தை வீட்டை விட்டு அகற்றுங்கள் அல்லது பேட்டரியை மாற்றுங்கள்.

பட மூலம்: www.pixabay.com, www.pixnio.com, www.PublicDomainPictures.net, flickr, www.Wikipedia.org, alibaba

Nithya Lakshmi

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன