Search

Home / Top Recipes in Tamil / குழந்தைகளுக்கேற்ற அற்புதமான பதினோரு வகை மதிய உணவுக்குறிப்புகள்:

குழந்தைகளுக்கேற்ற அற்புதமான பதினோரு வகை மதிய உணவுக்குறிப்புகள்:

Nithya Lakshmi | ஜூலை 5, 2018

 

குழந்தைகளுக்கு தாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது குறித்த கவலை இருப்பதில்லை; ஆனால், ஒவ்வொரு தாய்க்கும், குழந்தைகளின் டிபன் பாக்ஸ், சாப்பிடாத மிச்சங்களுடன் திரும்பிவருவதை காண்பது ஒரு கொடுமையான விஷயம்.   குழந்தைகள் தங்கள் உணவை விரும்பி உண்ணவும், மிச்சமின்றி முழுவதும் சாப்பிடச் செய்யும் சில மந்திரக் குறிப்புகள் உள்ளது. கீழ்க்கண்ட பதினோரு குறிப்புகளை பின்பற்றினால், உங்கள் குழந்தைகளின் டிபன் பாக்ஸ் காலியாகவே திரும்பவரும் என்பது உறுதி.  

 

1 வானவில் ரொட்டி:

இந்த ஆரோக்கியமான, கவர்ச்சியான ரொட்டி,  பல காய்கறிகளின் இயற்கை வண்ணங்களுடன் குழந்தைகள் ஆர்வத்துடன் உண்ணும் வகையில் இருக்கும்

 

2.ரொட்டி உப்புமா:

இந்த எளிதாக தயாரிக்கக்கூடிய உணவு, அசாதாரண சுவை மற்றும் அமைப்புடன் உங்கள் குழந்தைகள் இன்னும் வேண்டும் என்று கேட்டு வாங்கி உண்ண வைக்கும்   

 

3.பலாடைக்கட்டி, சப்பாத்தி சுருள் (பன்னீர் டிக்கா கத்தி ரோல்):

வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சப்பாத்தியில், சுவைமிகுந்த பண்டங்களால் நிரப்பி சுருளாக தயாரிக்கும் இந்த உணவு உங்கள் குழந்தைகளை சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும்  

 

4.பாலாடை, கீரை, மக்ரோனி, ரொட்டி லஸக்னா:

மக்ரோனியை கீரை மசியலுடன் கலந்து செய்யப்படும் இந்த உணவு குழந்தைகள் மிகவும் விரும்பும் உணவாகும்  

 

5.பாலாடை சோளக் க்ரோக்வெட்ஸ் கலவை:

சுவைமிகுந்த க்ரோக்வெட்ஸ் பாலாடை மற்றும் சோளம் கலந்து செய்யப்படும்போது, குழந்தைகள் இதை விரும்பி உண்பதை கட்டுப்படுத்த முடியாது   

 

6. வாணலியில் வறுத்தெடுக்கப்பட்ட ரொட்டி பக்கோடா:

ரொட்டியுடன் உருளைக்கிழங்கை சேர்த்து தயாரிக்கப்படும் இந்த எளிய, சுவைமிகுந்த உணவை குழந்தைகள் மிக விரும்புவார்கள்  

 

7.க்வெஸாடில்லா:

ரொட்டி மற்றும் பாலடை கலவையில் தயாரிக்கப்பட்ட க்வெஸாடில்லா என்னும் இந்த உணவு குழந்தைகளுக்கு ஏற்ற முழுமையான உணவாகும்.  

 

8.ரொட்டிப்பைகள்:

காய்கறிகளைக் கொண்டோ அல்லது சிக்கனை வைத்தோ செய்யப்படும் இந்த உணவு வகை குழந்தைகளுக்கு ஏற்ற உணவாகும்

 

9.வெளிப்படையான ரொட்டிகள்

வண்ணமயமான இந்த வெளிப்படையான ரொட்டிகள் உங்கள் குழந்தைகளைக் கவரும்

 

10.பாலாடைக்கட்டி மக்ரோனி லாலிபாப்:

பாலாடைக்கட்டி மற்றும் மக்ரோனியால் செய்யப்படும் இந்த லாலிபாப், குழந்தைகள் விரும்பி உண்ணும் கலவையாகும்   

 

11.பாலேடுகள்  நிறைந்த ரொட்டித்துண்டுகள்:

அழகாகத் தோன்றும் இந்த பாலேடுகள் நிறைந்த ரொட்டித் துண்டுகளை, ஒரு குச்சியில் வைத்து பரிமாறும் போது, குழந்தைகள் மிகவும் இரசித்து உண்பார்கள்   

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன