உடல் எடை இழப்பு பற்றி பொதுவாக கேட்கப்படும் 5 கேள்விகள்

Spread the love

இன்றைய ஓய்வில்லாத வாழ்க்கை முறையில், தங்கள் உடல் எடையை குறைக்கவோ, சிக்கென்று வைத்துக் கொள்ளவோ ஒருவருக்கும் நேரம் இல்லை. உண்ணும் உணவில் ஏற்படும் சிறு கவனக்குறைவு, நமக்கு அதிகபட்ச உடல் எடையை பரிசாக அளிக்கிறது. சிலசமயங்களில், தினசரி உடற்பயிற்சி , பட்டினி போன்றவற்றால் கூட எடையை குறைக்க முடிவதில்லை. உடல் எடை அதிகரிப்புக்கு, அதிகமாக சாப்பிடுவது மட்டும் காரணமல்ல. மரபியல், ஜீவத்துவ பரிணாம (மெட்டபாலிசம்) காரணங்கள், ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் , உடல்வாகு, வாழ்க்கை முறை போன்ற எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம்.

பல பிரபலங்களும், நிபுணர்களும் உடல் எடை இழப்பு சம்பந்தமாக கொடுத்த குறிப்புகள் , அறிவுரைகள் பற்றி உங்கள்ளுக்கு சந்தேகங்கள் இருக்கலாம். அவ்வாறு ஏற்படும் சில பொதுவான கேள்விகளுக்கான பதில்களை இங்கு காணலாம்:

 

1.தினசரி உடற்பயிற்சியால் மட்டும் ஏன் எடை குறைவதில்லை?

தினசரி உடற்பயிற்சி செய்தால், கண்டிப்பாக உடல் எடை குறையும் என்ற நம்பிக்கையில், புது வருட தீர்மானமாக ஜிம்மில் சேர்ந்து, பல மாத உழைப்பிற்குப் பின்னும்  உடல் எடை குறையவில்லையே என்று வெறுப்படைபவர்கள் இருக்கிறார்கள். நம் உடல் ஆரோக்யத்திற்கு உடற்பயிற்சி இன்றியமையாதது என்பதை அறிவியல் நிரூபித்திருந்தாலும், உடல் எடையை குறைக்க அதுமட்டுமே போதாது. அதற்கு ஒரு சிறு உதாரணம் இதோ:

நீங்கள் ஒரு மணிக்கு 8 கிலோமீட்டர் என்னும் வேகத்தில் ஒரு மணி நேரம் ஓடி, 400  – 500 கலோரிகளை இழக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதேசமயம், 240 கலோரிகளை கொண்ட இரு பீட்சா துண்டுகளை சாப்பிட்டால், ஓடியதன் மூலம் இழந்த கலோரிகளை மீண்டும் பெற்று விடுகிறீர்கள்.

 

2.குறைந்த கலோரி உணவை சாப்பிடுவதன் அவசியம்

நமக்கு தேவையான தினசரி ஆற்றலைத்தரும் ஆரோக்ய உணவு பழக்கத்தை பின்பற்றுவது, உடல் எடையை குறைக்க நாம் கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய ஒன்று. அதிக கலோரிகளை கொண்ட உணவுகளை உட்கொண்டால் உடல் எடை கண்டிப்பாக அதிகரிக்கும். ஒருநாளைக்கு நமக்கு தேவைப்படும் கலோரிகள் 1800 .  அதற்கு மேல் நாம் எடுத்துக்கொள்ளும் கலோரிகள் நம் உடலில் கொழுப்பாக தங்குகிறது. மாறாக நீங்கள் 1,500 கலோரிகள் கொண்ட உணவை எடுத்துக் கொண்டால், மிச்ச 3௦௦ கலோரிகள் உங்கள் உடல் சேமித்து வைத்துள்ள கொழுப்பிலிருந்து எடுத்துகொள்ளப்படுவதால், உடல் எடை குறைகிறது. குறைந்த கலோரிக் கொண்ட உணவுடன் கூடிய இலகுவான உடற்பயிற்சியால் கண்டிப்பாக உடல் எடை குறையும்.

 

3.நீர் அருந்துதல் எவ்வாறு உடல் எடை குறைய உதவுகிறது?

தினமும் 3 லிட்டர் தண்ணீர் அர்ந்துவது நம் உடலுக்கு மிக நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். மற்றும் சில ஆய்வுகளின் கூற்றுப்படி 750 மிலி நீர் அருந்தவதன் மூலம் அடித்தள வளர்சிதை மாற்ற விகிதம் 25-30% அதிகரிகச்செய்கிறது. இது நம் உடல் ஓய்வில் இருக்கும்போது, தேவைப்படும் ஆற்றலின் அளவாகும். நம் உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை தண்ணீர் அதிகரிக்கச் செய்வதால், நீர் அருந்துவது நம் உழைப்பிற்கும், உடற்பயிற்சிக்கும் தேவையான ஆற்றலைத் தந்து உதவுகிறது.

 

4.உடல் எடையை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளை விட, எடையை இழக்க அதிக அளவு ஏன் முயற்சிக்க வேண்டியிருக்கிறது?

உடல் எடையை இழக்க மிக கண்டிப்பான உணவு பழக்கத்தை, உடற்பயிற்சிகளுடன் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. அதிக வேலை பளு உள்ளவர்களுக்கு இதை பின்பற்றுவது மிக கடினம். துரித(ஜங்க்)  உணவுகளை உண்பது, உடல் உழைப்பு தேவைப்படாத வேலை பார்ப்பது போன்றவையும் எடையை அதிகரிக்கச் செய்யும். ஒரு நொடிப்பொழுதில் ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களையும், கோக் போன்ற பானங்களையும் எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடல் பெற்ற அதிகப்பட்ச கலோரிகளை இழப்பதற்கு மிக அதிகமான முயற்சிகள் தேவை.

 

5.உடல் எடை குறைந்த பிறகு , எடையை பராமரிப்பது எப்படி?

காலை உணவை தினமும் தவறாமல் சாப்பிடுவது, உடல் எடையை பராமரிக்க மிகவும் அவசியம் என்று உடற்பயிற்சி நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆரோக்யமான காலை உணவை உண்பது , அன்று முழுவதும் அனாவசியமான தேவையற்ற உணவை உண்ணாமல் நம்மை கட்டுப்படுத்துகிறது. தினசரி உடற்பயிற்சி செய்வது அல்லது ஓடுவதன் மூலம், முந்தைய நாள் நம் உடலில் சேகரிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கலோரிகளை இழக்கலாம். சரியான இடையளவையும், உடல் எடையையும் பராமரிக்க வேண்டும் என்று நம்மை நாமே உற்சாகப்படுத்திக் கொள்ள வேண்டும். வாரத்திற்கொரு முறை உடல் எடையை பார்த்து, குறித்துக் கொள்வதன் மூலம் அவ்வப்பொழுது நம் எடையை சரிபார்த்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன