Search

Home / Uncategorized / உங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்

உங்கள் மகள்களுக்கு கற்றுத்தர வேண்டிய ஐந்து வாழ்க்கைப்பாடங்கள்

Nithya Lakshmi | ஜூன் 14, 2018

உங்கள் மகள் எப்போதும் நலமாக இருக்க,  ஒரு தாயாக, அவர்களுடன் சரியான பதத்தில் உரையாடுவதும், சரியான முறையில் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதும் அவசியமாகிறது.  உங்கள் மகள், இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையான உபகரணங்களைத் தேடிக்கொள்வதற்கு நீங்கள் வழிகாட்டுகிறீர்கள். அவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளமிடும் முக்கிய வாழ்க்கை பாடம் உங்களிடம் உள்ளது.  இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஐந்து வாழ்வியல் பாடங்கள், ஒரு அன்பான தாய் தன் அழகான மகளுக்கு சொன்னது.   

 

1.மகளே, நீ எனக்குக் கிடைத்த பரிசு:

எனக்கு பெருமிதந்தரும் நீ எனக்கு கிடைத்த பொக்கிஷம்.  உன்னைச் சிறுமைப்படுத்த இந்த உலகம் ஆயிரமாயிரம் முயற்சிகள் செய்தாலும், உன் பெற்றோர் உன்னைப்பற்றி எப்பொழுதும் பெருமிதமடைவார்கள்.   நீ சந்திக்கும் நபர்கள், உனது தோற்றம் மற்றும் உனது விருப்பங்களைக் கொண்டு உன்னை எடை போடுபவர்களாக இருப்பார்கள். அவர்களை மன்னித்து, மறந்துவிடு !

 

2.உன் சந்தோஷத்திற்கு நீயே காரணம்:

உன்னுடைய சந்தோஷத்திற்காக நீ அடுத்தவரை நம்பியிருக்க வேண்டிய அவசியமில்லை என்பதை முக்கியமாக நீ உணர வேண்டும்.   உன் சந்தோஷம் உன் கையில் உள்ளது. சில நேரங்களில், சிலர் உனது ஒவ்வொரு செயலிலும் குற்றம் காண்பார்கள். அதில் சிக்கி மனம் வருந்தாதே.  மகிழ்ச்சி என்பது நமது முடிவு என்பதை எப்போதும் நினைவில் கொள்.    

 

3.நீ நீயாக இரு:

எப்போதும் உனக்கு நீ உண்மையாக இரு.   அன்பு, காதல், விண்ணப்பம் என்ற பெயரில் உன்னை மாற்ற முற்படுபவர்களின் ஆசையை பூர்த்திசெய்யாதே.   உண்மையான உறவு, எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்காது. உன்னை அப்படியே ஏற்றுக்கொள்ளும். நீ அன்புகாட்டக்கூடாது என்பதல்ல இதன் நோக்கம், நீ உன்னை படிப்படியாக உயர்த்திக்கொள்.   எப்பொழுதும் நல்லதே நினைத்து, சிறப்படைவாய்.

 

4.உறவெனும் பந்தத்தை முறித்துவிடாதே:

கையளவு உலகம் என்ற பழமொழியை நாம் அனைவரும் அறிவோம்.   அதில் ஒவ்வொரு சொல்லும் உண்மையே. எல்லோரிடமும் அன்பு செய். எல்லோரையும் மதித்து நட.   எப்பொழுது, யார் உதவி தேவைப்படும் என்பது உனக்கு தெரியாது. அதனால்,யாரையும் மரியாதைக்குறைவாக நட்த்தாமல், எல்லோரது வரவேற்பையும் பெற்று விளங்கு.  

 

5.எதற்காகவும் சமரசம் செய்துகொள்ளாதே:

பெண்ணாய் பிறந்தால் அடங்கித்தான் நடக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்லக் கேட்டிருப்பாய்.  மனதளவில் அதனை ஏற்காதே. எந்த சூழ்நிலையிலும், யாரும் உன்னை வளைத்துவிட இடம் கொடுக்காமல், தைரியமாக உன் கருத்தைச் சொல்.  நீ பிடிவாதக்காரியாய் இருக்கவேண்டுமென்று அர்த்தமல்ல; உன் மதிப்பைக் குறைக்கும் எந்த விஷயத்தையும் ஏற்காதே..!

 

மூலப்படங்கள் தெ டெய்லி மோஸ், ம்டேய் ஹார்வத் போட்டோ கிராஃபி, பர்வாரிஸ் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது

 

Nithya Lakshmi

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன