Search

Home / Women Health Tips in Tamil / மார்பக புற்று நோயை தடுப்பதற்கான 8 வழிகள்

மார்பக புற்று நோயை தடுப்பதற்கான 8 வழிகள்

Subhashni Venkatesh | அக்டோபர் 15, 2018

ஒரு பெண்ணின் உடலில் மிக கவர்ச்சியான பாகமாக மார்பகங்கள் திகழ்கின்றன.. தற்காலத்தில், நமக்கு நன்கு அறிந்த யாரேனும் ஒருவருக்காவது மார்பக புற்று நோய் தாக்கப் பட்டிருப்பதாக கேள்வி  படுகிறோம். மிகப் பெரிய முன்னேற்றத்தை மருத்துவ உலகம் அடைந்திருந்தாலும், இது போன்ற நிகழ்வுகள் நடந்துக் கொண்டுதான் இருக்கின்றன.

வயது முதிர்ச்சி, பரம்பரை போன்ற பல்வேறு தவிர்க்க முடியாத காரணங்களுடன் மார்பக புற்றுநோய்கான காரணங்கள் பல உள்ளன. நம் வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை கடைப்பிடித்தால் இந்நோயை தடுக்கலாம்.

இங்கே மார்பக புற்றுநோயின் அபாயத்தை குரைக்ககூடிய சில பயனுள்ள டிப்ஸ் உங்களுக்காக அளிக்கிறோம்:

 

1.உங்கள் எடையின் மீது கவனம் தேவை

உடல் பருமன் மார்பக புற்று நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மாதவிடாய் இறுதி நாட்களுக்குப் பின், பொதுவாக பெண்களின் எடை அதிகரிக்கும். ஆரோக்யமான நீண்ட நாள் வாழ்க்கைக்கு, சரியான எடையை பராமரிப்பது மிக முக்கியம். மேலும் இது மற்ற வகையான புற்றுநோய்களையும் தடுக்கிறது. உடல் பருமனால் இன்சுலின் அளவு அதிகரிப்பதும் புற்றுநோய்க்கு ஒரு காரணமாகும்.

 

2.முறையான உடற்பயிற்சி மிக அவசியம்

தினமும் வியர்வை வழிய ஜிம்மில் சென்றுதான் உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. காலை அல்லது மலை நேர நடைபயிற்சியே போதுமானது. ஆரோக்ய மற்றும் மனித சேவை துறை 150 நிமிட உடல் செயல்பாடு  அல்லது 75 நிமிட கடின உடல் செயல்பாடு ஒரு வாரத்திற்கு தேவை என்று பரிந்துரைக்கிறது. முறையான உடற்பயிற்சி உடல் பருமனை கட்டுப்படுத்தும்.

 

3.மது அருந்துவதை கட்டுப்படுத்தவும்

அதிகமாக மது அருந்துவதால் மார்பக புற்று நோயும், மற்ற வகை புற்று நோய்களும் ஏற்பட வாய்ப்புண்டு. அமெரிக்க புற்று நோய் அமைப்பு மார்பக புற்று நோயின் ஆபத்தை குறைக்க ஒரு நாளைக்கு ஒரு முறைதான் மது அருந்த வேண்டும் என்கிறது. மிதமாக மது அருந்துவது பெரிய தீங்கு விளைவிக்காது என்றாலும், அதிகமாக அருந்துதல் கூடாது.

 

4.புகைப்பிடிப்பதை உடனடியாக நிறுத்தவும்

குறிப்பாக மாதவிடாயின் இறுதி நாட்களுக்கு முன் மார்பக புற்று நோய்க்கும் புகைப்பிடித்தலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக புள்ளியியல் விவரம் கூறுகிறது. புகைப்பிடிப்பதற்கும் 15 வகையான புற்றுநோய்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. ஆரோக்யமான வாழ்விற்கு புகைபிடிப்பதை உடனே  நிறுத்த வேண்டும். மேலும் அது பற்களில் மஞ்சள் கறை, கெட்ட சுவாசம் போன்ற மோசமான பின் விளைவுகளை உண்டாக்குகிறது.

 

5.காய் கனிகளை உண்ணத் தொடங்குங்கள்

மார்பக புற்று நோயை தடுப்பதற்கு காய் கனிகள் பெரிதும் உதவுகின்றன. நீலபெரி, ஸ்ட்ராபெரி, பீச், ப்ளம் போன்ற பழங்களில் புற்று நோயை தடுக்கக்கூடிய தன்மையுடைய கூறுகள் அதிகமாக உள்ளன. காலிப்ளவர், முட்டைகோஸ், ப்ரோகோலி மற்றும் முளைக்கட்டிய தானியங்கள் ஆன்டிஆக்சிடன்ட்ஸ், வைட்டமின் C, E, K போன்ற புற்றுநோயை எதிர்த்து போராடும் சக்தியை அளிக்கின்றன.

 

6. தாய்பாலூட்டுவதால் நீங்கள் காப்பாற்றப் படுகிறீர்கள்

உங்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் கருவியாக இது செயல்படுகிறது. நீங்கள் நீண்ட காலம் பாலூட்டினால் உங்கள் மார்பகங்கள் அதற்கேற்றவாறு வலுவடைகின்றன.  மேலும் அது உங்கள் குழந்தைக்கு பெரிதும் நன்மை அளித்து உங்களையும் மார்பக புற்று நோயிலிருந்து காப்பாற்றுகிறது. இது ஒரு முழுமையான தீர்வு.

 

7.கருத்தடை மாத்திரைகளை தவிர்க்கவும்

கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து உபயோகிப்பவர்களுக்கு மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும் அது மாரடைப்பு, பக்கவாதம் போன்றவைகளையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால் இது கருப்பை, பெருங்குடல், கர்ப்பப்பை புற்றுநோய்களை தடுக்கவும் செய்கிறது. இருந்தாலும் மார்பக புற்றுநோயை தடுக்க கருத்தடை மாத்திரைகளை தவிர்க்கவும்.

 

8.ஹார்மோன் மாற்று சிகிச்சை

ஹார்மோன் மாற்று சிகிச்சை மாதவிடாய் இறுதி நாட்களுக்கான அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் பெரும்பாலும் இந்த சிகிச்சைக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் ப்ரோஜெஸ்டின் சேர்ந்த சிகிச்சை தான் தேவைப் படுகிறது. அது மார்பக புற்றுநோய்க்கு காரணமாக அமைகிறது. அதனால் இச்சிகிச்சைக்கு முன் உங்கள் மருத்தவரை அணுகி இதன் பயன் மற்றும் பின்விளைவுகளைப் பற்றி நன்கு அறிந்துக் கொள்ளவும்.

 

Image Source:  pixabay.com, maxpixel.com, flickr.com, Air Force Medical Service

Subhashni Venkatesh

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன