Search

Home / Skincare Tips in Tamil / குளிர்காலத்தில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்!

குளிர்காலத்தில் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்யின் நன்மைகள்!

Team BetterButter | டிசம்பர் 14, 2018

குளிர்காலம் என்றாலே வறண்ட சருமம் மற்றும் வறண்ட முடி. எனினும், நீங்கள் விலையுயர்ந்த எண்ணெய் மற்றும் உங்கள் முடியும் சருமமும் மிருதுவாக இருக்க லோஷன் ஆகியவற்றிற்குள்  ஈடுபடுவதற்குமுன், உங்கள் அலமாரியில் இருக்கும் தேங்காய் எண்ணெய் பாட்டிலை ஒரு இரண்டாம் முறை பாருங்கள். அதிகமாக மிருதுவாக்கும், பல்துறைதிறன் கொண்டது மற்றும் விலை குறைந்தது, இந்த அதிசய எண்ணெய்  உங்கள் சருமம் மற்றும் முடிக்கு அற்புதமாக வேலை செய்யும்.

இந்த குளிருக்கு தேங்காய் எண்ணெய் உங்கள் பிஎப்எப் என்று உறுதிப்படுத்தும் இங்கே சில வழிகள்!

1) கண் கிரீம்

(Source: https://upload.wikimedia.org/wikipedia/commons/7/7a/Woman_applying_sunscreen.jpg)

இரவு தூங்குவதற்கு முன் கொஞ்ச அளவு தேங்காய் எண்ணெயை கண்களை சுற்றியும்  கீழேயும் தேய்த்துவிடுங்கள். அது சேதமடைந்த செல்களை பழுதுபார்க்க உதவும், சுருக்கங்களில் இருந்து காக்கும் மேலும் க்ஷணநேரத்தில் கருவளையங்கள் மற்றும் கண்பைகள் மறையவும் செய்கிறது.

2) சவர கிரீம்

(Source: https://c1.staticflickr.com/3/2882/33604403065_480e9f1286_b.jpg)

ஈரமான பகுதியை சரைக்க வேண்டும். ஒரு மெல்லிய அடுக்கு தேங்காய் எண்ணெய் தடவிய பின் சரைக்கவும். வெதுவெதுப்பான தண்ணீரில் அந்த இடத்தை கழுவவும். தேங்காய் எண்ணெய் சரைத்த எரிச்சலை பாதுகாக்கும், சருமத்தை ஈரப்பதமாகவும் மற்றும் மென்மையாகவும் விட்டுவிடும்.

3) ஒப்பனை நீக்கி

(Source: https://images.pexels.com/photos/275744/pexels-photo-275744.jpeg?cs=srgb&dl=applying-care-cleaning-skin-275744.jpg&fm=jpg)

இரண்டு விதமாக தேங்காய் எண்ணெயை ஒப்பனை நீக்கியாக பயன்படுத்தலாம். ஒரு மெல்லிய தாளில் அல்லது பஞ்சு திண்டில் அதை தடவி மேலும் ஒப்பனையை துடைத்து நீக்குங்கள் அல்லது உங்கள் விரல்நுனியை கொண்டு சிறிது எண்ணெயை ஒப்பனைமீது தேய்த்துவிடுங்கள் மேலும் அதை 2-3 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவுங்கள் மற்றும் மீதமுள்ள ஒப்பனையை ஒரு மெல்லிய தாளில் அல்லது ஒரு பஞ்சு திண்டில் துடைத்து நீக்குங்கள்.

4) பற்பசை

(Source: https://cdn.pixabay.com/photo/2017/04/27/03/10/coconut-oil-2264250_960_720.jpg)

சமபங்கு பேக்கிங் சோடா மற்றும் தேங்காய் எண்ணெயை

சூடு பண்ணுங்கள் மேலும் 20 துளிகள் உங்கள் விருப்பமான அத்தியாவசியமான எண்ணெயை

கலக்கவும். ஒரு கண்ணாடி ஜாடியில் நிரப்பி வைக்கவும். இந்த கலவை சில நேரங்களில் கட்டியாகிவிடும். இதை தினசரி உங்கள் பற்கள் சுத்தமாகவும் மற்றும் வெள்ளையாகவும் பயன்படுத்தவும்.

5) பாத வெடிப்புக்கு ஈரப்பதமூட்டி

(Source: https://www.flickr.com/photos/[email protected]/4870938064)

குளிர்காலங்களில் பாதங்கள் வெடிக்கும். சிறிது தேங்காய் எண்ணெயை சூடாக்கி மேலும் இரவில் வெடிப்புகளில் தேய்க்கவும். காலுறைகளை அணிந்துகொண்டு உறங்குங்கள். இது பாதங்கள் எண்ணெயை உறிஞ்ச அனுமதிக்கும் மேலும் வெடிப்பைத் தவிர்க்கும்.

6) உரிப்பான் (எக்ஸ்போலியேட்டர்)

(Source: https://www.flickr.com/photos/shalommama/8301732424)

சம அளவு நாட்டுச்சக்கரை மற்றும் தேங்காய் எண்ணெய்யை கலந்து பின் ஒரு கண்ணாடி ஜாடியில் போட்டு வைக்கவும். இது ஒரு பிரமாதமான உரிப்பான் (எக்ஸ்போலியேட்டர்) அது மென்மையாக முகத்தில் இருந்தும் உடலில் இருந்தும் இறந்த தோலை உரித்து எடுக்கும். அது உடலை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் விட்டுச்செல்லும்.

7) உதடு சாயத் தைலம்

(Source: https://www.flickr.com/photos/[email protected]/37867605352)

ஒரு சுத்தமான மைக்ரோவேவ்வில் வைக்கக்கூடிய பாதுகாப்பான கிண்ணத்தில் கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ஊற்றவும் மற்றும் ஒரு பழைய லிப்ஸ்டிக்கில் இருந்துகூட மேலே நீங்கள் சீவி எடுத்த ஏதாவது உதடு சாயத்தை போடவும். இவ்விரண்டையும் சூடாக்கி நன்றாக கலக்கவும். ஒரு சில துளிகள் ஆர்கன், ஜோஜோபா மற்றும் அவோகேடோ எண்ணெய் ஆகியவற்றை ஈரப்பத்திற்காக சேர்க்கவும். இதை ஒரு உதட்டு தைலமாக பயன்படுத்தவும். வெவ்வேறு வண்ணத்தைக் கொண்டும் மற்றும் நிறத்தை  கொண்டும் பரிசோதிக்கவும்.

8) மேல்தோல் கிரீம்

(Source: https://www.flickr.com/photos/[email protected]/37641340610)

கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை உங்கள் மேல்தோலில் தடவவும். சிறிது நேரம் அப்படியே விடவும். சரியான மேல்தோலை பெற நீங்கள் சாதாரணமாக செய்வதுபோல் அதை பின் தள்ளவும்.

9) முடியை பதனிடும் பொருள் (ஹேர் கண்டிஷனர்)

(Source: https://www.pexels.com/photo/blond-blonde-hair-conditioner-curly-289829/)

உங்கள் தலையில் தாராளமாக தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்து மேலும் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிடுங்கள் அது உங்கள் முடியில் உள்ள குளிர்கால ஏற்றியை குறைக்கும்.

10) சிரங்கு நிவாரணி

(Source: https://commons.wikimedia.org/wiki/File:Human_hand_with_dermatitis.jpg)

ஐந்து தேக்கரண்டி தேங்காய் எண்ணெயை இரண்டு தேக்கரண்டியில் ஒன்று வைட்டமின் ஈ மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை கலக்கவும் பின் ஒரு பாட்டிலில் ஊற்றி வைக்கவும். விரிவடையும் போதும் மற்றும் தழும்புகள் நாட்பட மறையவும் நிவாரணம் கிடைக்க தினசரி மூன்று முறை சிரங்கு மீது இதை தடவவும்.

11) ஆயில் புல்லர்

ஆயில் புல்லிங்க்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துங்கள். இது உங்கள் பல் மற்றும் வாய்ப்பகுதியில் ஆரோக்கியத்தை சிறப்பாக அதிகரிக்கும். ஒரு தேக்கரண்டி கூடுதல் சுத்தமான தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றவும் மேலும் 15-20 நிமிடங்கள் கொப்பளிக்கவும். இது பிளேக் மற்றும் பல் ஈறு அலர்ஜியை குறைக்கிறது, கிருமிகளை கொள்கிறது மற்றும் துவாரங்களை தடுக்கிறது.

Team BetterButter

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன