ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி வர காரணங்களும் அறிகுறிகளும்

Spread the love

ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி என்றால் என்ன?

ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) நோய்க் கிருமியால் ஏற்படும், ஒரு கல்லீரல் தொற்று நோய்தான் ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி). ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி என்ற நோய்க் கிருமியால்(ஹச்சிவி) ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி ஏற்படுகிறது. தொற்று நோய் கல்லீரல் வீக்கத்தை ஏற்படுத்தி அபாயமான கல்லீரல் பாதிப்பை உண்டாக்கி கல்லீரல் நோயையும், கல்லீரல் வடுவையும், இறுதியில் கல்லீரலை செயலிழக்கவும் செய்கிறது. பெரும்பாலும் தொத்திப் பரவக்கூடிய, தொற்று நோய் சுத்தமில்லாத இரத்தத்தில் பரவுகிறது.

ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி இரண்டு வகை உண்டு – ஒன்று கடுமையானது மற்றொன்று நீடித்தது. கடுமையான ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி யின் அறிகுறி தொடங்கி வேகமாகி ஒரு சில நாட்களே நீடிக்கும். இது வயிற்றுப்பகுதியை அசௌகரியப்படுத்தும், களைப்பை கொடுக்கும், வாந்தி மற்றும் காய்ச்சல் உண்டாக்கும்.

மற்றொன்று, நீடித்த  ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி யின் அறிகுறி அவை மெதுவாக பரவுவதால் முதலில் வெளிப்படையாகத் தெரியாது, வழக்கமாக, பல மாதங்களுக்குப் பின்னரே வெளிப்படும். நீடித்த ஹச்சிவி கல்லீரல் புற்றுநோய்க்கு வித்திடலாம்.

ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி வர காரணங்கள்

ஹச்சிவி அடிப்படையில் இரத்தத்தின் மூலமாகவும் மற்றும் சிறிது வேறுஉடல் திரவங்களின் மூலமாகவும் பரவுகிறது. இது பரவுவது:

 • உறுப்பு மாற்றுதல்
 • இரத்த மாற்றங்கள்

 • உடல் குத்திக்கொள்ளுதல் மற்றும் பச்சை குத்திக்கொள்ளுதல்
 • மருந்துகள் மற்றும் ஊசிகளைப் பகிர்ந்து கொள்ளுதல்
 • தனிப்பட்ட பொருட்களான பற்குச்சி மற்றும் சவரக்கத்தி போன்றவற்றை பகிர்ந்து கொள்ளுதல்

 • கர்ப்பஸ்த்ரீகள், ஒரு தாய் பிறக்கப்போகும் தன் குழந்தைக்கு பரப்பலாம்
 • பாலினத் தொடர்பில், முக்கியமாக ஹச்சிவியால் பாதிக்கப்பட்ட ஒரு நபருடன்,  ஏனல் மற்றும் மாதவிடாயின் போது உடலுறவு வைத்துக்கொள்ளும்போது

ஹச்சிவி உணவைப் பகிரும்போது, மூச்சின் நீர்த்துளிகள், பூச்சி மற்றும் கொசுக்கடி அல்லது தாய்ப்பால் கொடுத்தல் போன்ற சாதாரண தொடு நிகழ்வின் மூலம் பரவாது.

அபாய காரணிகள்

கீழ்காணும் மக்களே ஹச்சிவியை மேற்கொள்ளும் பெரிய அபாய கட்டத்தில் உள்ளவர்கள்.

 • கல்லீரல் நோயாளிகள்
 • தற்போதைய அல்லது முன்னாள் சிறைக்கைதிகள்
 • நீண்டநாள் தினசரி மது அருந்துபவர்கள்
 • 1945க்கும் 1965க்கும் இடையில் பிறந்தவர்கள்
 • நீண்டநாள் சிறுநீரக டையாலிசிஸ் செய்யும் நோயாளிகள்
 • 1987க்கும் முன் வேறு இரத்த பொருட்கள் வாங்கியவர்கள்
 • 1992க்கு முன் உறுப்பு மாற்றிய அல்லது இரத்தம் மாற்றிய நோயாளிகள்
 • பாலியல் நோயால்(எஸ்டிடிஸ்) பாதிக்கப்பட்ட நோயாளிகள், முக்கியமாக ஹச்ஐவி

ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி யின் அறிகுறிகள்.

ஹச்சிவி நோயாளிகளில் 70 சதவிகிதம், உறுதியான அறிகுறிகள் ஏதும் இருப்பதில்லை, சில நோயாளிகளில் தோன்றுவதும், பொதுவாக ஒன்று முதல் மூன்று மாதங்கள் நோய்த்தொற்றிக்குப்பின், அவை.  வேறுபடுகிறது. பொதுவாக கடுமையான ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி யின் அறிகுறிகள் உள்ளடக்குவது

 • காய்ச்சல்
 • களைப்பு
 • குமட்டல்
 • வயறுப்பகுதியில் அசௌகரியம்
 • எலும்பு கூடும் இடம் மற்றும் தசைகளில் வலி

மஞ்சள் காமாலை மற்றும் களிமண் நிறத்தில் மலம் ஆகியவை அரிதான அறிகுறிகள்.

நீடித்த ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி நோய்த்தொற்று, மாதங்களுக்கு அறிகுறிகளை வெளிப்படுத்தாது. அதனால்தான் அதை அமைதியான தொற்று நோய் என்று அழைக்கின்றனர்.

 • அரிக்கும் தோல்
 • அடர்ந்த சிறுநீர்
 • எடை குறைதல்
 • வீங்கிய கால்கள்
 • பசியின்மை
 • நிலையான சோர்வு
 • இரத்தப்போக்கு மற்றும் எளிதில் சிராய்ப்பு
 • வயிற்றில் நீர்க்கோவைகள் அல்லது திரவ உருவாக்கம்
 • தோலில் சிலந்தி போன்ற இரத்த நாளங்கள் வெளிப்படுதல்
 • மயக்கம், குழப்பம் மற்றும் குழையும் பேச்சு ஆகியவற்றை கொண்டுள்ள ஈரல் தொற்று நோயால் மூளைச் சிதைவு.

 

ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி யால் தோன்றும் சிக்கல்கள்

நீடித்த ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி நோயாளிகளில் 75இல் இருந்து 85 சதவிகிதம் கல்லீரல் நோய், கல்லீரல் புற்றுநோய், மற்றும் கல்லீரல் செயலிழப்பு அகிய மிக தீவிர சிக்கல்களை உருவாக்குகிறது.

மிகவும் குண்டாக இருத்தல், நீரிழிவு நோய் மற்றும் புகை பிடித்தல் போன்ற நிலைகள் கல்லீரல் வடுவை அதிகரிக்கும்.

ஹெப்படைடிஸ்(கல்லீரல் அழற்சி) சி தொற்று நோய்க்கு தடுப்பு ஊசி ஏதும் இல்லை எனினும், மருந்துகளால் குணப்படுத்தலாம். இருப்பினும், வரும்முன் காப்பது நன்று என்பதால்,  புகை பிடித்தல், மது மற்றும் தடுக்கப்பட்ட மருந்துகள் ஆகியவற்றை நிறுத்துவது, பாதுகாப்பான உடலுறவை பழகுதல், தனிப்பட்ட சுகாதாரப் பொருட்களைப் பகிர்ந்து கொள்வதைத் தவிர்த்தல், சிறந்த எடை பராமரிப்பு, மற்றும் உடலில் குத்துவது மற்றும் பச்சை குத்துவது ஆகிய சமயங்களில் கவனாக இருத்தல் ஆகியவை பரிந்துரைக்கப்படுகிறது.

 

பட மூலம்: Wikimedia Commons and Pixabay

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன