ஆரோக்யமான குடலை பெற நீங்கள் உண்ண வேண்டிய 5 புரோபயாடிக் உணவுகள்

Spread the love

உங்கள் வயிற்றையும், வாயையும் இணைக்கும் இடைப்பட்ட தடத்தில்  அடிக்கடி சங்கட உணர்வு ஏற்படுகிறதா? ஆரோக்யமான உணவு முறையை பின்பற்றியும் ஏன் சோர்வாக உணர்கிறோம் என்று ஆச்சரியப் படுகிறீர்களா? இது உங்கள் குடலை சுத்தமாக்குவதற்கான சரியான தருணம். உங்கள் குடலானது நிறைய உணவு பதப்படுத்த உபயோகப்படும் வேதிப் பொருட்கள், தேவையற்ற கொழுப்பு, குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றால் பாதிக்கப் பட்டிருக்கலாம். நீங்கள் உட்கொள்ளும் ஒவ்வொரு உணவிலும் பல வகையான ஆண்டிபயாடிக்ஸ் உட்செலுத்தப்பட்டிருப்பதால், புரோபயாடிக் உணவுகள் கலப்படமாகி விடுகிறது. நீங்கள் நல்ல சருமம், வீக்கமற்ற, குடல் சீர்குலைவு இல்லாத ஆரோக்யமான செரிமான பாதையை பெற விரும்பினால், இரைப்பை பிரச்னைகளிருந்து விடுதலைப் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள புரோபயாடிக் உணவுகளை உண்ண வேண்டும்:

 

1.குளிர்ந்த உருளை கிழங்கு

அதிகமான மாவுச் சத்து உடைய உணவுகளான குளிர்ந்த உருளை கிழங்கு போன்றவை உங்கள் வயிற்றுக்கு சந்தோஷமளிக்க கூடியதாகும். உருளைக்கிழங்குகளை சமைத்து குளிர்விக்கும் பொழுது அவை பின்னோக்கிய இயக்கமடைந்து சாதாரண மாவுச்சத்தானது, எளிதில் செரிமானமடையும் மாவுச்சத்தாகிறது. இதன் மூலம் பழைய உருளை கிழங்குகள் நொதிக்கப்பட்ட இழைகளாகி, குடலுக்கு நன்மை அளிக்கிறது. இந்த குறைந்த கலோரிகளையுடைய எதிர்க்கும் மாவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

குறிப்பு: சமைக்காத உருளைகிழங்கை உங்கள் ஸ்மூதியில் சேர்த்துக் கொள்ளலாம். அல்லது வெந்த சாதத்துடனோ அல்லது உணவின் மேல் தூவியோ சாப்பிடலாம்.

 

2.ஊறுகாய்

தயிர் சாதத்துடன் ஊறுகாய் தந்தால் யாருக்குதான் வேண்டாம் என்று சொல்ல மனசு வரும்! ஊறுகாய் உங்கள் முழு அமைப்பையும் மேம்படுத்தி தொற்றுகளிலிருந்து பாதுகாக்கிறது. வைட்டமின் K, ஊறுகாயில் நிறைய இருந்தாலும் மற்ற புரோபயாடிக் உணவுகளுடன் ஒப்பிடும் பொழுது, இவை அவ்வளவாக நன்மை செய்வதில்லை. இருந்தாலும் ஊறுகாய்கள் கால்ஷியம் மற்றும் மற்ற தாதுக்களை உடல் உள்வாங்கிக் கொள்ள உதவி செய்து மெட்டபாலிசத்தை உயர்த்தி, குடலை பாதுகாத்து உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது.

 

3.கிரேக்க யோகர்ட் (வடிகட்டிய தயிர்)

உங்கள் செரிமான தடத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்? அப்படியென்றால் உங்கள் வீட்டருகில் இருக்கும் கடைகளிலிருந்து சிறிது கிரேக்க யோகர்ட் வாங்கி உண்ணுங்கள். உங்களின் செரிமான அமைப்பை மேம்படுத்தும் ஒரு மிக நல்ல உணவு இந்த கிரேக்க யோகர்ட். அதில் உள்ள லேக்டோபேசில்லஸ்

கூறு,  நல்ல பாக்டீரியா உங்கள் உடலில் உருவாக உதவுகிறது. இந்த நல்ல பாக்டீரியா உங்கள் உடலை தொற்றுகளிளிருந்து பாதுகாக்கிறது.

குறிப்பு: கிரேக்க யோகர்டை அப்படியேவோ அல்லது சாதம் மற்றும் ரொட்டியுடனோ உண்ணலாம்.

 

4.பாலாடைக்கட்டி

உடல் எடை குறைக்கும் தீவிர முயற்சியில் இருப்பவர்களுக்கு பாலாடைக்கட்டி பெரிய எதிரி என்றாலும், உங்கள் குடலை சுத்தம் செய்ய மிக நல்ல வழி இது. பாலாடைக்கட்டியில் நிறைய நல்ல பாக்டீரியா மற்றும் ஏகப்பட்ட கால்ஷியம் இருக்கிறது. இவையிரண்டும் உங்கள் உங்கள் எலும்புகளை திடமாக்க பெரிதும் உதவுகிறது.

குறிப்பு: துருவிய பாலாடைக்கட்டிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். டோஸ்ட் செய்த ப்ரெட் உடனும் உண்ணலாம்.

 

5.ஆப்பிள் சைடர் வினிகர்

இரைப்பை பிரச்னைகளுக்கான மற்றுமொரு நல்ல தேர்வு இந்த அப்பிள் சைடர் வினிகர். ஒவ்வொரு வேலை உணவு உண்ணும் முன் ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை நீரில் கலந்து பருகவும். நீங்கள் உண்ணும் உணவை எளிதில் துகள்களாக்கி செரிமானத்திற்கு வழி வகுக்கிறது. மேலும் இது உங்கள் கல்லீரலையும் இயற்கையாக சுத்தமாக்குகிறது. வினிகரை நீர், எலுமிச்சை சாறு அல்லது தேநீருடன் கலந்து அருந்தலாம்.

 

Image source:  pixabay, wikipedia commons, flickr

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன