அவசரக் கால கருத்தடை எந்த அளவிற்கு பாதுகாப்பானது?  

Spread the love

பாதுகாப்பற்ற உடலுறவிற்கு பின் கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக அவசரக்கால கருத்தடை மாத்திரைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. இது ஒரு கர்ப்பத்தடை வழி முறைகளில் ஒரு வகை ஆகும். இது பொதுவாக காலை பிறகு (morning-after) மாத்திரை எனவும் கூறப்படுகிறது.  மொத்தம் இரண்டு வகைகள் உள்ளன. அவை செப்பு உள்வழி கருவி எனப்படும் உட்புற கருத்தடை சாதனம் – IUD மற்றும் அவசரக்கால கருத்தடை மாத்திரை. இந்த முறைகளைப் பற்றி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை பார்ப்போம்.

ஒட்டு மொத்தமாக ஆய்வுகளும், மருத்துவர்களும் அவசரக்கருத்தடை மாத்திரை பாதுகாப்பானது தான் என்று ஆணித்தரமாக கூறுகின்றனர். இருந்தாலும் ஒவ்வொரு முறையும் அவசரக்கால கருத்தடை மாத்திரைகளை நாடுவது பயனுள்ளதாக இருக்காது என்பதால், மாற்று வழியாக கர்ப்பத்தடை மாத்திரைகளும் வேறு சில வழிமுறைகளும் இருக்கின்றன.  

நீங்கள் இந்த அவசரகால கருத்தடை மாத்திரைகளின் பாதுகாப்பை பற்றி தெரிந்துக் கொள்ளவும், அதை உபயோகிக்கும் முறையையும் இங்கு பார்க்கலாம்.

அவசரக்கால கருத்தடை வழியை பின்பற்றுவதற்கு முன் கருத்தில் கொள்ள வேண்டிய காரணிகள் பல உள்ளன. அவை:

 • உங்கள் உயரம் மற்றும் எடை.
 • உங்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடிய அவசரக்கால கருத்தடை சாதனம் அல்லது கருவி.
 • பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக் கொண்ட நேரம்.
 • நீங்கள் தாய்ப்பால் கொடுக்கக் கூடியவரா?
 • ஏற்கனவே கர்ப்பம் தரித்தவரா?
 • ஒரே வகையான காலை-பிறகு (morning-after) மாத்திரைகளை இரண்டு அல்லது அதற்கு மேல் உட்கொள்ளுவது உங்கள் உடல் நலத்தை பெரிதும் பாதிக்கும். அதனால் ஒன்று போதுமானது.
 • அதே போல், முதல் மாத்திரையை எடுத்துக் கொண்ட பின் சில மணி நேரங்களிலேயே அதே வகையான மற்றொரு மாத்திரையை உபயோகிக்கக் கூடாது. அதிகப்படியான மாத்திரைகள் உங்கள் கர்ப்பத்தை ஒரு போதும் தடுக்காது.
 • நீங்கள் அதிக எடை உள்ளவரா என்பதைப் பற்றி கவலை படாமல் இதை உபயோகிக்கலாம்.
 • இதய பிரச்னைகள் – சில மருத்துவர்கள் இந்த அவசரக்கால கருத்தடை மாத்திரைகள் இதய நோய்கள், பக்கவாதம், ரத்தம் உறைதல் போன்றவற்றை உண்டாக்கும் என்கின்றனர். ஆனால் ஒரு முறை எடுத்துக்கொள்வது உங்களை பாதிக்கப் போவது இல்லை. இருந்தாலும் உபயோகிக்கும் முன் மருத்துவரை கலந்தாலோசிப்பது  நல்லது.
 • கர்ப்பம் தரித்துவிட்டால் இதை உபயோகிக்கவே கூடாது. ஏனெனில் இது கர்ப்பபையில் தொற்று, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மற்றும் அடி வயிறு, இடுப்பு பகுதிகளில் வீக்கம் போன்ற நோய்களை உண்டாக்கும்.
 • சில சமயங்களில், மருத்துவரின் ஆலோசனைப்படி சில கர்ப்பத்தடை மாத்திரைகளை உபயோகிக்கலாம்.

இறுதியாக சொல்லப் போனால், இந்த அவசரக்கால கருத்தடை மாத்திரைகள் உபயோகிக்க எளிதாகவும், மருத்துவ சிக்கல்கள் இன்றியும் இருக்கிறது. ஆனால் இவை மற்ற கர்ப்பத்தடை  வழி முறைகளான IUD, உட்புற கருத்தடை சாதனம், ஆணுறை அளவிற்கு பயன் அளிப்பதில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன