உங்களது இல்லற வாழ்க்கை சிறப்பதற்குக் கடைபிடிக்க வேண்டிய 5 எளிய வாஸ்து குறிப்புகள்

Spread the love

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் ஒரு கட்டத்தில் சோதனை காலம் உண்டு. தொழில் மற்றும் உறவுமுறைகள் பின்னோக்கி போகும் காலமும் உண்டு. உறவுமுறைகளில் சிக்கல் வரும் பொழுது கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று தான் மனிதர்களுக்குத் தோன்றும். ஆனால் அணைத்து துன்பங்களில் இருந்தும் விடுபட உங்கள் வீட்டிலேயே வழி உண்டு என்று நாங்கள்  சொன்னால் நீங்கள் நம்பத் தயாரா?

ஆம், வாஸ்து சாஸ்திரம் தான் உங்களுக்கான பதில். வாஸ்து சாஸ்திரம் என்றால் கட்டுமான அறிவியியல் என்று பொருள். இந்து சமயத்தின் உரையே வாஸ்து சாஸ்திரம் ஆகும். இது வடிவமைப்பு, அளவு மற்றும்  சிறப்பு வடிவியல் ஆகியவற்றை இயற்கையுடன் கலந்து வழங்கும் அறிவியல் ஆகும்.

கீழ்காணும் 5 குறிப்புகளைப் பின்பற்றினால் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கும்:

 

1.படுக்கை அறையின் கதவு

வாஸ்து  சாஸ்திரத்தின் படி, உங்கள் வாழ்க்கை உங்களுக்கு தரவிருக்கும் நன்மைகளின் சின்னம் உங்கள் படுக்கை அறை கதவே ஆகும். இக்கதவு 90 பாகை அளவிற்கு தடையின்றி திறத்தல்  வேண்டும்.அப்பொழுது தான் நன்மைகள் உங்களைத் தேடி உள்ளே வரும். அப்படி 90 பாகை அளவிற்கு திறக்க முடியாவிடில், நன்மைகள் உங்களை அடைய இயலாமல் போய்விடும்.

 

2.படுக்கை அறையின் இருப்பிடம்

உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலை தான் ஆளுமையான இடமாகும். அங்கே தான் வீட்டின் உரிமையாளர் துயில் கொள்ள வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இல்லாவிடில் திருமணமான தம்பதியினர் அங்கே துயில வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இருந்தால் திருமணமான தம்பதியினர் வீட்டின் வடமேற்கு மூலையில் துயிலலாம். தம்பதியினற்குள் நல்ல புரிதலை தென்மேற்கு மூலை உதவும். நல்ல புரிதல் இருந்தால் தான் இன்பமான திருமண வாழ்க்கை அமையும்.

 

3.படுக்கையின் இருப்பிடம்

படுக்கையை அமைப்பதற்கு சிறந்த இடம் அறையின் தென்மேற்கு பக்கம் ஆகும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, படுக்கையின் தலைமாட்டில் சுவர் இருத்தல் வேண்டும். திறந்த ஜன்னல் இருந்தால் கூடாது. தலை பக்கம் சுவர் இருந்தால் தான்  தூங்குபவர் பாதுகாப்பு உணர்வுடன் நிம்மதியான தூங்குவார். கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டிய மற்றுமொரு குறிப்பு என்னவென்றால் படுக்கை கதவின் எதிரே இருத்தல் கூடாது. அது தூங்குபவர்க்கு இடைஞ்சலாக இருக்கும்.

 

4.படுக்கையறையின் அமைப்பு

ஒரு அறைக்கு சரியான வெளிச்சம் மிக அவசியம். அது நமது குணாதிசயங்களை மற்றும் திருமண வாழ்வையும்  பாதிக்கும். அறையில் மிதமான வெளிச்சம் இருந்தால் விரும்பத்தகாதவற்றைத் தவிர்க்கலாம். கண்ணைக் கூசும் படியான விளக்குகளை ஒருபோதும் படுக்கை அறையில் உபயோகிக்கக் கூடாது.

படுக்கை அறையின் சுவர்களுக்கு இதமான வண்ணங்களைப் பூச வேண்டும். நீலம் மற்றும் ஊதா நிறங்கள் படுக்கை அறைக்கு ஏற்றவை. ஊதா நிறம் மனித உணர்ச்சிகளின் நிறமாகும். நீல நிறம் வெள்ளி கிரஹத்தின் நிறம் ஆகும். ரோமானியர்களின் கடவுளான வீனஸ் தேவதையின் நிறம் கூட நீலம் தான். இத்தேவதை அன்பு, திருமணம் மற்றும் அழகின் தேவதை ஆவார். அதனால்  நீல நிறத்தில் போர்வை உபயோகித்தால் நன்மை பயக்கும். படுக்கை அறையில் கருப்பு மற்றும் சாம்பல் நிறத்தை அறவே ஒதுக்க வேண்டும்.

 

5.கண்ணாடியின் இருப்பிடம்

அலகாரத்திற்கு உபயோகிக்கும் கண்ணாடியாக இருந்தாலும், முகம் பார்க்க பயன் படுத்தும் கண்ணாடியாக இருந்தாலும் படுக்கைக்கு எதிரில் கண்டிப்பாக இருத்தல் கூடாது. தூங்கும் பொழுது கண்ணாடியின் எதிரே தூங்க கூடாது. சக்தியை பிரதிபலிக்கும் திறன் கண்ணாடிக்கு உண்டு. அதனால்  பதற்றம் மற்றும் துரோகத்தை ஏற்படுத்தும். கண்ணாடியை வைப்பதற்கு வேறு இடம் இல்லை என்றால் தூங்கும் முன்பு ஒரு போர்வையைக் கொண்டு கண்ணாடியை மூடி விட்டு தூங்கவும்.

குறிப்பு: தென்கிழக்கு மூலையை தம்பதியினர் அறவே ஒதுக்க வேண்டும். அது தம்பதியினற்குள் சண்டை, கோபம் மற்றும் மலட்டுத் தன்மையை அதிகரிக்கும். வடகிழக்கு மூலையில் அக்னி இருப்பதால் அது சக்தி வாய்ந்த இடமாக கருதப்படுகிறது. அந்த இடம் கடவுளுக்கு உகந்த இடம் ஆகும். கடவுளின் இருப்பிடத்தில் மனிதர்கள் உறங்குவது தவறாகும்.

பட மூலம் : பிக்சபே, பெக்ஸ்ய்ல்ஸ், விக்கிமீடியா காமன்ஸ்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன