Home / Kids Health Care Tips in Tamil / நீங்கள் ஏன் தினமும் பழங்கள் உண்ண வேண்டும்?
பழங்கள் நம் உணவின் ஒரு முக்கிய பங்கு ஆகும். இருவேளை உணவுகளுக்கு நடுவில் பழங்கள் உண்ணுவது ஆரோக்யமற்றது என்பதால் உங்கள் பசியை போக்க பழங்களையே உணவாக நீங்கள் உண்ணலாம். பழங்கள் உங்கள் வயிற்றை வெகு நேரம் பசிக்காமல் வைத்திருக்கும். மேலும் உங்கள் எடையை பராமரிக்கவும் அவை உதவுகிறது.
நீங்கள் உண்ணும் ஒவ்வொரு பழமும், உங்கள் உடலிற்கு நன்மை பயக்கிறது. இதோ இங்கே சில பழங்களும் அவற்றின் பயன்களும் உங்களுக்காக கொடுக்கப் பட்டுள்ளன.
Table of Contents
வாழைபழம் உண்பதால் உங்கள் ஆற்றல் அளவு அதிகரித்து, வெகு நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. வாழைபழம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடலின் சர்க்கரை அளவை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. உங்களுக்கு பசிப்பது போல் தோன்றினால், வாழைபழம் உண்பது மிகச் சிறந்தது.
வைட்டமின் C நிறைந்துள்ள ஒரு சுவையான பழம் ஆரஞ்சு. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கின்றன. ஆரஞ்சுகளில் வைட்டமின் A நிறைந்த காரோடினாய்ட் உள்ளது. இந்த வைட்டமின் கண்களில் உள்ள ம்யூகஸ் சவ்வு ஆரோக்யமாக இருக்க உதவுகிறது. வயது சம்பந்தப்பட்ட கண் நோய்கள் வராமல் தடுக்கிறது.
நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை தவிர்க்கலாம் என்ற பழமொழி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்? ஆம் அது உண்மைதான். உடலை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் வைட்டமின் C ஆப்பிளில் உள்ளது. மேலும் நரம்புகளின் ஆரோக்யத்திற்கும் ஆப்பிள் சிறந்தது. எடை குறைய உதவி, கெட்ட கொழுப்பை அகற்றவும் உதவுகிறது. மேலும் சர்க்கரை நோய், மார்பக புற்று நோய், ஸ்ட்ரோக் போன்ற ஆபத்துகளிலிருந்தும் உங்களை காப்பாற்றுகிறது.
உலகத்தின் ஆரோக்யமான பழங்களில் தர்பூசணியும் ஒன்று. அதில் 92% நீர் சத்து இருப்பதால் நாள் முழுவதும் உங்கள் உடலை நீர் சத்துடன் வைத்திருக்க உதவுகிறது. ஒரு கிண்ணம் தர்பூசணி பழங்களில் வெறும் 46 கலோரிகளே உள்ளன. மேலும் இந்த பழத்தை பற்றி நாம் அறிந்திராத உண்மை என்னெவென்றால் இப்பழம் ஒரு எதிர்மறை கலோரி உணவு ஆகும். இது எடை குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கு ஏற்ற ஒரு பழம் ஆகும்.
அன்னாசி பழத்தில் பிரோமெலான் என்னும் நொதி (enzyme) உள்ளது. தொண்டை வலி, கீல் வாதத்தினால் உண்டாகும் வீக்கம் மற்றும் கட்டிகளை குறைக்க இந்த நொதி உதவுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதனால் அன்னாசி பழம் கீல்வாத நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ள திராட்சை நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்யத்திற்கும், சருமத்திற்கும் நன்மை தருகிறது. நம் உடலின் இரத்த குழாய்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை உடல் முழுவதிலும் மேம்படுத்துகிறது. திராட்சையில் உள்ள தாவர ஊட்டச் சத்துக்கள் நம் சருமத்தை புற ஊதா கதிர்களிடமிருந்து காப்பாற்றுகிறது. அதனால் முதுமை தள்ளிப்போடப் படுகிறது. மேலும் திராட்சை எடை குறைப்பு, எடை சமாளிப்பு, மூளையின் ஆற்றலை அதிகப் படுத்துதல், மூளையின் செயல்பாடு ஆகியவற்றிற்கு மிகவும் உதவுகிறது.
செர்ரி பழங்கள் உங்கள் நரம்புகளை அமைதி படுத்துகின்றன. அவற்றில் உள்ள மெலடோனின் உங்கள் உடலினுள் இயங்கப்படும் கடிகாரத்தை முறைபடுத்தி உங்களின் தூங்கும் மற்றும் துயிலெழும் நேரங்களை சரி செய்கிறது. இதன் மூலம் கிடைக்கும் நல்ல, அமைதியான, இடையூறு இல்லாத தூக்கம் போன்றவை இயற்கையாகவே சருமத்திற்கு பொலிவும், முதுமையில்லாத தன்மையும் அளிக்கின்றன. மேலும் செர்ரி பழங்கள் இதய ஆரோக்யத்தை மேம்படுத்தி, ஆரோக்ய கூந்தல் அளித்து, உடலின் இரத்த அழுத்தத்தையும் பராமரிக்க உதவுகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் C அதிகம் உள்ளது. உடலில் கொலாஜன் உற்பத்தி செய்ய வைட்டமின் C மிகவும் முக்கியம். கொலாஜன்கள் சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் விரிவு தன்மைக்கு மிகவும் அவசியம். முதுமையான தோற்றத்திற்கும், சருமத்தில் சுருக்கங்கள் உண்டாவதற்கும் முக்கியமான காரணம் குறைந்த அளவிலான கொலாஜன்கள் ஆகும். ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் C அதிகம் உள்ள பழங்களை உண்பதால் நம் சருமத்திற்கு முதுமை அகற்றும் தன்மை உண்டாகும்.
நீல பெர்ரி பழங்களில் ஃபிளாவனாய்டுகள் என சொல்லப்படும் அந்தோசியனின்கள் மிக அதிக அளவில் உள்ளன. இவைதான் அந்த பழங்களுக்கு நீல நிறத்தை அளிக்கின்றன. இப்பழங்கள் எண்ணற்ற ஆரோக்ய நன்மைகளை அளிக்க வல்லது. நீல பெர்ரி பழங்களில் கொலஸ்ட்ரால் கிடையாது. அவற்றில் உடல் நலத்திற்கு தேவையான நார் சத்து, பொட்டாஷியம், போலேட், வைட்டமின் C, வைட்டமின் B6 மற்றும் தாவர ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உள்ளன.
மேற்கூறிய நலன்கள் அனைத்தும் பழங்கள் உண்பதனால் உண்டாகும் சில நன்மைகள் தான். உங்கள் உணவில் தினசரி ஏதவாது ஒரு பழமாவது உண்ண வேண்டும் என்பதை கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள். நாளடைவில் அதனால் உண்டாகும் மாற்றங்களை நீங்களே உணர்வீர்கள்!
COMMENTS (0)