சிறுநீர் கழிப்பதை நீங்கள் ஏன் கட்டுப்படுத்தக் கூடாது?

Spread the love

நீங்கள் கழிப்பிடத்திற்கு அடிக்கடி போகத்தான் வேண்டும்! சிறுநீர்ப்பை சிறுநீரால் பாதி-நிரம்பியதும், அது மூளைக்கு ஒரு சிக்னல் அனுப்பி விடும். மூளை சிறுநீர்ப்பையிடம் சிறுநீர் கழிக்கும் உந்துதலை கட்டுப்படுத்த கூறும்போது, பின் க கழிப்பிடத்திற்கு செல்ல நமக்கு சொல்லும்.

ஒரு ஆரோக்கியமான முதிர்ந்த சிறுநீர்ப்பை இரண்டு கப் சிறுநீரை நிறுத்திக் கொள்ளும். எனினும், சிறுநீர் உந்துதலை வழக்கமாக கட்டுப்படுத்திக்கொண்டே இருப்பது ஒரு நல்ல யோசனையே கிடையாது. ஏன் என்று இங்கே பார்க்கலாம்:

1) வலி தரும்

சிறுநீர் உந்துதலை வழக்கமாக கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் மக்கள், சிறுநீரகத்திலோ அல்லது சிறுநீர் பையிலோ வலியை உணரலாம். சில சந்தர்ப்பங்களில் ஒருவர் இறுதியாக சிறுநீர் உந்துதலுக்கு இசைந்து சிறுநீர் கழித்தார் என்றால், அவர்கள் சிறுநீர் கழிக்கும்போதும் வலியை உணருவார்கள்.

2) சிறுநீர் பாதை நோய்த் தொற்றுகள்(யுடிஐஸ்)

யுடிஐஸ் பாக்டீரியா சிறுநீர் பை திசுக்களை பிடித்துக் கொள்ளும்போது ஏற்படுகிறது. சில சமயங்களில் சிறுநீர் கழிக்கும் உந்துதலை அடக்குவது பாக்டீரியா அளவில் பெருகும் ,மேலும் சிறுநீர் பாதை முழுவதும் பரவும், அதன்மூலம் யுடிஐ வர காரணமாகிறது. மருத்துவர்கள் உங்களுக்கு அடிக்கடி யுடிஐஸ் வரும் வரலாறு இருந்தால், நீங்கள் சிறுநீர் கழிக்கும் உந்துதலை அடக்குவது கூடாது என்று கூறுகிறார்கள்.

சில பொதுவான யுடிஐஸ் அறிகுறிகள்:

  • சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்/கொட்டும் உணர்ச்சி
  • அடி வயிற்றில் வலி
  • சிறுநீர் பையை வெறுமையாக்க இடையறாத உந்துதல்
  • வலுவான/கெட்ட சிறுநீர் நாற்றம்
  • மந்தமான, பாதி-வண்ணம் அல்லது இருண்ட சிறுநீர்
  • சிறுநீரில் இரத்தம்

3) சிறுநீர் பை நீட்சி

வழக்கமாகவே வெகு நாட்களாக, சிறுநீர் கழிக்கும் உந்துதலை அடக்குவது, சிறுநீர் பையின் தசைகளின் நீட்சிக்கு காரணமாகும். ஒருமுறை நீண்டுவிட்டால், சிறுநீர் பைக்கு சுருங்கவும் மற்றும் இயற்கையாக சிறுநீர் வெளியிடவும் மிகவும் கடினமாகும். தீவிரமான வழக்குகளில், சிறுநீர் நீக்கும் குழாய் போன்ற கூடுதல் நடவடிக்கைகள் பயன்படுத்த வேண்டி இருக்கும்.

4) இடுப்பு தள தசைநார்களில் சேதம்

சிறுநீர் தேக்கி வைப்பது இடுப்பு தள தசைகளை சேதப்படுத்தும். இதனால் பாதிப்பிற்குள்ளாகும் ஒரு தசை சிறுநீர்க்குழாய் சுருக்குத்தசையாகும். சிறுநீர் கசிவதை தடுக்க சிறுநீர்க்குழாய் சுருக்குத்தசை சிறுநீர் குழாயை மூடி வைக்கிறது. இந்த தசையில் சேதம் ஏற்படுவது சிறுநீர் அடங்காமைக்கு காரணமாகும், அதாவது, சிறுநீர் கசிவு விருப்பமின்றி ஏற்படும். எனினும், கெகல் பயிற்சி (இடுப்பு தள பயிற்சி) செய்வது இந்த தசைகளை உறுதியாக்கும், சிறுநீர் கசிவை தடுக்கும் மேலும் தசை இழப்பை பழுது பார்க்கும்.

5) சிறுநீரக கற்கள்

சிறுநீர் யூரிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆக்சாலேட் ஆகிய கனிமங்களை கொண்டது. அதிக கனிமங்களை உள்ளடக்கிய சிறுநீர் உள்ள மக்கள் அல்லது சிறுநீரகத்தில் கற்கள் வரலாறு கொண்ட மக்கள், அவர்கள் கழிப்பிடத்திற்கு செல்லும் உந்துதலை கட்டுப்படுத்தினால் சிறுநீர் கற்களால் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.

இந்த பாதிப்புகள் இருந்த போதும், சில நேரங்களில் சூழ்நிலைகள் உங்களுக்கு ஒரு சுத்தமான கழிப்பிடம் கண்டு பிடிப்பது முடியாமல் போகிறது. உங்களுக்கு சிறுநீர் கழிக்கும் உந்துதலை கட்டுப்படுத்துவதை தவிர வேறு வழி இல்லாமல் போகிறது, மேலும் அப்படி செய்ய குறிப்பிட்ட வழிகள் இருக்கிறது:

  • உங்கள் மூளையை ஈடுபட வைக்கும் குறுக்கெழுத்து போட்டி அல்லது விளையாட்டு போன்ற பணியில் உங்களை ஈடுபடுத்துங்கள்  
  • இசையை கேளுங்கள்
  • நீங்கள் ஏற்கனவே அமரும் நிலையில் இருந்தால், அதே நிலையில் இருங்கள்
  • ஒரு புத்தகம் படிக்கவும்
  • பொது ஊடகத்தை உருட்டி பாருங்கள்
  • உங்களை வெது வெதுப்பாக வைக்கவும்

ஆதாரங்கள்: எவ்வெரிடே ஹெல்த், ஹெல்த்லைன், மெடிக்கல் நியூஸ் டுடே, பாம்பெர்ஸ், டைம் மகசின், வெரிவெல் ஹெல்த்

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன