வீடு / சமையல் குறிப்பு / வாழைக்காய் பொடிமாஸ்

Photo of Vazhaikkai Podimas by Sowmya Sundar at BetterButter
433
7
0.0(0)
0

வாழைக்காய் பொடிமாஸ்

Feb-14-2018
Sowmya Sundar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வாழைக்காய் பொடிமாஸ் செய்முறை பற்றி

விளைந்த வாழைக்காய் வைத்து செய்யலாம் இந்த பொடிமாஸ்.எப்போதும் ரோஸ்ட் செய்வதற்கு பதில் இப்படி செய்யலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வாழைக்காய் -3
  2. வெங்காயம் -1
  3. பச்சை மிளகாய் -4
  4. இஞ்சி ஒரு துண்டு
  5. எலுமிச்சை சாறு -2 டீ ஸ்பூன்
  6. கடுகு 1 டீ ஸ்பூன்
  7. உளுத்தம்பருப்பு -1 டீ ஸ்பூன்
  8. பெருங்காய தூள் 1/2 டீ ஸ்பூன்
  9. கறிவேப்பிலை மல்லி சிறிது
  10. எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
  11. மஞ்சள் தூள் -1/2 டீ ஸ்பூன்
  12. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வாழைக்காயை இரண்டாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மூழ்கும் அளவு விட்டு 5 நிமிடம் வரை வேக விடவும்.தோல் உரிக்கும் அளவு வேக விடவும். குழைய கூடாது.
  2. தண்ணீரை வடித்து விட்டு தோல் நீக்கி விட்டு துருவி கொள்ளவும்
  3. வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி நறுக்கி கொள்ளவும்
  4. கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை தாளித்து கொட்டி வெங்காயம் பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து வதக்கவும்.உப்பு பெருங்காயம் சேர்த்து கொள்ளவும்
  5. வதங்கியதும் துருவிய வாழைக்காய் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும்
  6. எலுமிச்சை சாறு கலந்து விடவும். கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்