வீடு / சமையல் குறிப்பு / Bhai Veetu Mutton Saalna(pepper Kari Saalna)

Photo of Bhai Veetu Mutton Saalna(pepper Kari Saalna) by Bena Aafra at BetterButter
768
4
0.0(1)
0

Bhai Veetu Mutton Saalna(pepper Kari Saalna)

May-15-2018
Bena Aafra
1200 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மட்டன் -1/2 கிலோ
  2. சின்ன வெங்காயம் -50கிராம்
  3. இஞ்சி பூண்டு விழுது -4டீஸ்பூன்
  4. எண்ணெய்-2டீஸ்பூன்
  5. தக்காளி -3
  6. தயிர் -3டீஸ்பூன்
  7. பட்டை-1
  8. ஏலக்காய் -2
  9. கிராம்பு-1
  10. அண்ணாச்சி பூ-சிறிது
  11. மிளகு தூள் -தேவையான அளவு
  12. மிளகாய் தூள் -1டீஸ்பூன்
  13. மல்லி தூள் -1டீஸ்பூன்
  14. மஞ்சள் தூள் -1/3டீஸ்பூன்
  15. உருளைக் கிழங்கு -2
  16. கத்தரிக்காய்-2
  17. பட்டைஏலக்காய் தூள் -1/2டீஸ்பூன்
  18. உப்பு -தேவையான அளவு
  19. தேங்காய் விழுது -1/2மூடி

வழிமுறைகள்

  1. முதலில் கறியை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும்.
  2. வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது அரைத்து வைத்து கொள்ளவும். தக்காளி நறுக்கி வைத்து கொள்ளவும்.
  3. பின் அடுப்பில் குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை ஏலக்காய் கிராம்பு அண்ணாச்சி பூ சேர்த்து வதக்கவும்.
  4. பிறகு அரைத்த விழுதை சேர்த்து வதக்கவும். உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. பட்டைஏலக்காய் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக பச்சை வாசனை போனதும் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
  6. பிறகு மஞ்சள் தூள் ,மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து கிளறி விடவும்.
  7. பிறகு கறி மற்றும் தோல் நீக்கிய உருளைக் கிழங்கு சேர்த்து நன்றாக கிளறவும்.
  8. பின் தயிர் 2கரண்டி சேர்த்து கிளறவும்.மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
  9. பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து குக்கர் -ஐ மூடி விசில் விடவும்.
  10. கறி நன்றாக வெந்ததும் நறுக்கிய கத்தரிக்காய் சேர்த்து கொதிக்க விட்டு காய் வெந்ததும் தேங்காய் விழுது ஊற்றவும்.
  11. பிறகு நன்றாக கொதித்ததும் கொத்தமல்லி இழை சேர்த்து இறக்கவும்.
  12. சுவையான கறி சால்னா ரெடி!

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
May-21-2018
BetterButter Editorial   May-21-2018

Hi Bena, collage images are not allowed, kindly share a clear and single image of this dish. To edit the image, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the image. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்