ஒருவரின் செல்வ செழிப்பின் அடையாளமாக தங்கம் விளங்குகிறது. மாங்கல்யம், வளையல், அட்டிகை மற்றும் காதணிகள் திருமணமான பெண்களின் அடையாளமாகவே இந்திய கலாச்சாரத்தில் அமைகின்றது. பல்வேறு போலி நகைகள் சந்தையில் புழங்கினாலும் தங்கத்திற்கு ஈடு இணை வேறு எதுவும் இல்லை. தங்கத்திற்கு என்று ஒரு தனி வசீகரம் உண்டு. தங்கத்துடன் காலம் காலமாக பழகி வந்தாலும் அதே பழைய வடிவத்தில் தங்க நகை இருக்க வேண்டும் என்று யாரும் விரும்புவதில்லை.
தங்க காதணிகளின் புதிய வடிவங்களை இங்கே காண்போம். இது உங்களது தங்க வேட்டையை எளிதாக்கிவிடும்.
Table of Contents
இவ்வகை காதணியில், பூக்களின் இதழ்கள் தங்கத்திலும் நடுவில் விலை உயர்ந்த கற்களும் பாதிக்கப் பட்டு காதணியின் அழகை மெருகூட்டுகின்றன
விலை மதிப்பற்ற கற்கள் பதிக்கப்பட்ட இந்த மயில் காதணி பாரம்பரிய உடைகள் மற்றும் விழாக்கால உடைகளுடன் மிகவும் பொருந்தும். கோவில் விழாக்களுக்கும் திருமண விழாக்களுக்கும் இந்த காதணிகள் மிகவும் ஏற்றவை.
அரைவட்ட வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட இந்த ஜிமிக்கி, மாணிக்க கற்கள் பதித்து மிகவும் அழகாக விளங்குகின்றன.
சிறிய ஒளிமிக்க வைரங்கள் படித்த இந்த அழகிய வட்ட வடிவ காதணிகள் எந்த விழாவிலும் உங்களைத் தனித்துக் காட்டும்.
பாரம்பரிய காஞ்சிபுரம் புடவையுடன் இந்த தங்கக் காதணி அணிந்தால், அது உங்களை நவநாகரீகமாகக் காட்டும்.
அண்மைக்காலத்தில் முழு காதையும் மறைக்கும் காதணி தான் நாகரிகம். எந்த உடை அணிந்தாலும் இந்த காதணி அதனை முழுமையாக்கும்.
சிறிய விழாவாகட்டும், தினமும் அணிவதற்காகட்டும் இந்த சிறிய கவர்ச்சியான காதணி அணைத்து உடைகளுடனும் அற்புதமாக விளங்கும்.
பிரத்யோக நிகழ்ச்சிக்கு சரியான காதணியை தேடும் பொழுது இந்த மாங்காய் வடிவ காதணிகளை நினைவில் கொள்க.
இந்த முக்கோண காதணிகள் தங்கத்தினால் செய்து சிறிய கற்கள் பாதிக்கப் பட்டவை. இக்காதணியில் மேலே உள்ள கருப்பு வட்டம் காதணிக்கு மேலும் அழகூட்டுகிறது.
வீட்டில் ஏதேனும் பூஜை இருந்தால் அல்லது ஏதேனும் கீர்த்தனைகளுக்குச் செல்லும் பொது இந்த ஸ்வஸ்திக வடிவ காதணிகள் சிறப்பாக இருக்கும்.
பட மூலம் – பேஸ்மென்ட் வால் ஸ்டட், பின்டெரெஸ்ட், டைல்அட்லைப்.காம்
COMMENTS (0)