ஆஸ்டியோபோரோசிஸ் /எலும்பு தேய்மான நோய்க்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

Spread the love

இக்காலத்தில், ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோய் வயது வந்தவர்கள், நடுத்தர வயதினர், வயதானவர்கள் என அனைத்து தரப்பட்டவர்களிடமும் மிக பொதுவாக காணப்படும் ஒரு கோளாறாகி விட்டது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது  எலும்பில் உள்ள தாதுக்களின் குறைப்பாட்டால் , சுலபமான எலும்பு முறிவுக்கு உட்படும் ஒரு நிலையாகும். பெரும்பாலான முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு முறிவிற்கு காரணம் ஆஸ்டியோபோரோசிஸ் ஆகும். 50 வயதிற்கு கீழே உள்ளவர்களில் 20 சதவிகிதனரும், 80 வயதினருக்கு மேலே உள்ளவர்களில் 70 சதவிகிதனரும் இந்நோயால் பாதிப்படைகின்றனர். கை, முதுகு, முழங்கை எலும்புகள் தான் மிகவும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ள  எலும்புகள். உடல் எலும்புகள் வலுவிழந்துவிடுவதால், ஒரு சின்ன அழுத்தத்தினால் கூட உடையக்கூடிய அபாயம் ஏற்படுகிறது. இரட்டை ஆற்றல் எக்ஸ்ரே எடுத்து எலும்பின் அடர்த்தியை கண்டுபிடித்து ஆஸ்டியோபோரோசிஸ் நோயின் தாக்க அளவை அறிய முடிகிறது.

எலும்புகளை பலவீனமடைய செய்து, அதன் மூலம் ஆஸ்டியோபோரோசிஸ் நோய் உண்டாகும் காரணங்கள் சிலவற்றறை இங்கு பார்ப்போம்:

 

1.குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவு

மெனோபாசிற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் எலும்பிழப்பிற்கு ஈஸ்ட்ரோஜன் குறைபாடே காரணம் என்று உட்சுரப்பியல் நிபுணர்கள் / எண்டோக்ரைனாலஜிஸ்ட்ஸ் நம்புகிறார்கள். வயதாகும் பொழுது பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அளவு வேகமாக குறைவதால், அவர்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் வாய்ப்பும் மிக அதிகமாகிறது. இளம் வயதிலேயே மாதவிடாய் நின்று போகும் பெண்கள், ஒல்லியான பெண்கள், விளையாட்டு வீராங்கனைகள் போன்றவர்கள் குறைந்த எலும்பு அடர்த்தியால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் மற்றொரு அறிக்கையின் படி, இரு கருவகங்களையும் அதாவது இரு ஓவரிகளையும் அகற்றப்பட்டவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும் வாய்ப்பு 54 சதவிகிதம் மெனோபாசின் அடுத்த கட்டத்தில் இருப்பவர்களுக்கு ஏற்படுகிறது.

ஆண்களுக்கும் எலும்பு ஆரோக்யத்திற்கு , ஈஸ்ட்ரோஜன் தேவைப்படுகிறது. ஆனால் அவர்கள் உடல் அதை நேரிடையாக உற்பத்தி செய்யாமல் டெஸ்டோஸ்டிரோனை , ஈஸ்ட்ரோஜனாக மாற்றிக் கொள்கிறது.

 

2.உடலில் ஏற்படும் மற்ற ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்

தைராய்ட் சுரப்பி, வளர்ச்சி சுரப்பி போன்ற மற்ற ஹார்மோன்களும் எலும்பு அடர்த்தியை பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. தைராய்ட் ஹார்மோன்களின் அளவு கூடும்போது, சிறுநீர் மூலமாக கால்ஷியம் வெளியேறி குறைபாடு உண்டாகி, எலும்பின் அடர்த்தி குறைகிறது. அதன் மூலம் நம் எலும்புகள் வலுவிழந்து, வயதேறும் பொழுது எலும்பின் ஆரோக்யத்திற்கு உறுதுணையாகும் வளர்ச்சி ஹார்மோன்களின் அளவும் தடைப்படுகிறது.

 

3.கால்ஷியம் குறைபாடு

நம் வாழ்நாள் முழுவதும் உடலில் புதிய எலும்புகளின் வளர்ச்சி, வடிவமைப்பு போன்றவைகளுக்கு மிக முக்கியமான தாது கால்ஷியம் ஆகும். நம் உடல் எலும்புகள் கால்ஷியம் மற்றும் பாஸ்பரஸ் என்னும் இரு முக்கிய தாதுக்கள் நிறைந்தது. நம் உடல் உறுப்புகளாகிய இதயம், தசை, நரம்பு போன்றவற்றின் ஒழுங்கான செயலாற்றலுக்கு கால்ஷியம் மிக அவசியம். கால்ஷியம் குறைபாடு ஏற்படும்போது, இவ்வுறுப்புகள் எலும்புகளின் கால்ஷியம் இருப்புகளை எடுத்து உபயகோகித்துக்கொள்வதால், நாளடைவில் எலும்புகள் தேய்ந்து, வலுவிழந்து, உடைகின்றன.

 

4.வைட்டமின்D பற்றாக்குறை

வைட்டமின்D, குறைபாடு ஏற்படும்போது, அதன் முக்கியமான கலவைகளில் ஒன்றாகிய கால்சிட்ரியால் அளவும் குறைந்து எலும்பை பலவீனமடையச் செய்கிறது. இச்சமயத்தில் அது வைட்டமின் போன்று செயலாற்றாமல், ஒரு ஹார்மோன் போன்று செயல்படுகிறது.

 

அறிகுறிகள்-

பத்தாண்டுகள் வரை கூட ஆஸ்டியோபோரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான எந்த அறிகுறிகளும் இல்லாது இருப்பது வெகு சகஜம். எலும்பு முறிவு ஏற்படும் பொழுதுதான் ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிகிறது. ஒருவருக்கு வலிமிகுந்த எலும்புமுறிவு உண்டாகும்போதுதான் தான் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை உணர முடிகிறது. இந்நோய் உள்ளவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்படும்போது அது ஏற்பட்ட இடத்தை பொறுத்து நீடித்த வலி உண்டாகிறது. ஆண், பெண் இருபாலருக்கும் அறிகுறிகள் பொதுவானதாகத்தான் இருக்கும். அடி முதுகு வலி, முதுகெலும்பு வளைதல், எடை குறைதல், அழுத்தத்தினால் எலும்புமுறிவு ஏற்படுதல் போன்றவை பொதுவான அறிகுறிகள் ஆகும்.

 

சிகிச்சை-

1.ஊட்டச்சத்து

போதுமான கால்ஷியம் நிறைந்த உணவுத்திட்டத்தை சிறுவயது முதல் இளமை பருவம் வரை ஆண், பெண் இரு பாலரும் பின்பற்றுவது மூலம் திடமான எலும்புகளை பெறலாம். அதுமட்டுமல்லாது ஊட்டச்சத்து மிகுந்த பீன்ஸ் போன்ற பச்சை காய்கறிகள் உண்பதும் மிக அவசியம். ஆழி விதைகள், மீன், மீன் எண்ணெய் போன்ற ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் எலும்புகளுக்கு வலு சேர்க்கும்.

 

2.ஹார்மோன் மாற்று சிகிச்சை

ஆரம்ப காலங்களில் மெனோபாஸ் அறிகுறிகளுக்கு ஹார்மோன் மாற்று சிகிச்சை மற்றும் ஈஸ்ட்ரோஜன் மாற்று சிகிச்சை பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் இப்பொழுது பெரும்பாலும் மெனோபாஸ் நேரங்களில் உண்டாகும் ஆஸ்டியோபோரோசிஸ் நோயை தடுக்கவும், அதற்கு சிகிச்சையாகவும் செயல் படுகிறது. குறைந்த ஈஸ்ட்ரோஜன் அளவும் எலும்பு அடர்த்தியை பாதிப்பதால், ஹார்மோன் மாற்று சிகிச்சை அல்லது  ஈஸ்ட்ரோஜன் மாற்று சிகிச்சை மேற்கொள்வதன் மூலம் எலும்பு பலவீனம் அடைவதை தள்ளிப்போடலாம். இது எலும்பு இழந்த சக்தியை பெற அது கால அகவாசம் அளிக்கிறது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன