பாதங்களில் ஏற்படும் வலியினை நீக்கும் ஐந்து வீடு வைத்தியமுறைகள்

Spread the love

“பேக் ஷா” என்னும் பழைய இந்தி திரைப்பட்த்தில் நடிகர் ராஜ்குமார், அவரது ஜோடியாக நடித்த, நடிகை மீனா குமாரியை பார்த்து, உன் அழகிய பாதத்தை தரைமீது வைக்காதே, என்று சொல்வதை நாம் பார்த்திருப்போம்.  இக்காலத்திலும், பெண்கள் ராஜ்குமார் சொல்வதைப் போல, பாதத்தை தரையில் படாமல் வைத்திருக்க வேண்டியது அழகுக்காக மட்டுமல்ல, பாதங்களில் ஏற்படும் வலிக்காகவும், அவசியமாகிறது.

அதனால், நீங்கள், பித்துப்பிடிக்க வைக்கும் இந்த வலியை நீக்க எளிய முறை வீட்டு வைத்தியங்களை செய்துகொண்டு, நடனமாடவேண்டும் என்ற உங்கள் ஆசையை ஏன் நிறைவேற்றிக்கொள்ளக்கூடாது?

 

1.கடுகு:

கடுகு இந்திய கலாச்சாரத்தில் ஒரு முக்கிய உணவுப்பொருள்.  கடுகின் சுவை மற்றும் சத்துக்களுக்காக, அது மிக முக்கியமாக கருதப்பட்டு உபயோகிக்கப்படுகிறது.  இதைத்தவிர கடுகில், வீக்கத்தை குறைக்கும் சக்தி இருப்பதால், பாதங்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிக்கு சிறந்த நிவாரணம் அளிக்கிறது.  ஒரு அரை கப் கடுகை ஊறவைத்து, நன்றாக அரைத்துக் கொள்ளவும். அந்த அரைத்த கடுகில் உங்கள் பாதங்களை நன்றாகப் பதியுமாறு ஒரு பத்து-பதினைந்து  நிமிடங்கள் வைத்திருக்கவும். உங்கள் வலி உடனடியாக்க் குறைவதை உணரலாம்.

 

2.வைட்டமின்கள்:

உடலில் ஏற்படும் வைட்டமின் குறைபாடே, பல்வேறு நோய்களுக்கு மூல காரணம் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.  வைட்டமின் பி குறைபாடு, பாதத்தில் வலியையும், வைட்டமின் டி குறைபாடு மயக்கத்தையும் வரவழைக்கும். வைட்டமின் பி மற்றும் வைட்டமின் டி அதிகமாக இருக்கும், பால், ஆரஞ்சு, இறைச்சி, மீன், முட்டை, சோயா பீன்ஸ் மற்றும் காய்கறிகளை உட்கொண்டால், பாதத்தில் வலி ஏற்படாது.

 

3.நல்லெண்ணெய்:

எள்ளில் இரும்பு சத்தும், நார்ச்சத்தும் மிக அதிகமாக உள்ளது.  எள்ளெண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் வீக்கத்தை குறைக்கவல்லது. இரு இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெயை கையில் எடுத்துக்கொண்டு, பாதத்தில் நன்றாக தடவி, உருவி விட்டால், பாத வலி நீங்கிவிடும்.  பாத நரம்புகள் தளர்ச்சியுற்று, வலி அறவே நீங்கிவிடும்.

 

4) சிவப்பு மிளகாய்:

சிவப்பு மிளகாய் உணவில் சுவைக்காக சேர்க்கப்படுகிறது.  இது பாத வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?  இதிலுள்ள காப்சாய்சின் என்ற பொருள் சிறந்த வலி நிவாரணியாக செயல்படுகிறது. ஒரு பக்கெட் இளஞ்சூடான நீரில், அரை தேக்கரண்டி சிவப்பு மிளகாயை போட்டு, அதில் பாதங்கள் நனையுமாறு பத்து-பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.  உடனடியாக வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.

 

5.கல் உப்பு:

கல் உப்பில் மெக்னீஷியம் அதிகமாக உள்ளது.  மெக்னீஷியம் உடல் வலி மற்றும் வீக்கத்தை குறைக்கும்.   அதனால், உடற்தசை வீக்கத்திற்கு கல் உப்பு பயன்படுத்தப்படுகிறது.  ஒரு பக்கெட் சூடான நீரில் ஒரு தேக்கரண்டி கல் உப்பை கலந்து, அதில் நனையும்படி பாதங்களை ஒரு பத்து- பதினைந்து நிமிடங்கள் வைத்திருக்கவும்.  பாதத்திற்கு தேவையான ஓய்வு கிடைக்கும்.

 

மூலப்படங்கள் பிக்ஸாபே, சைன் சிம்பொலிக்ஸ் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன