Home / Skincare Tips in Tamil / வயதான தோற்றத்தை குறைக்க, வீட்டு வைத்தியமுறையில் தயாரிக்கப்பட்ட ஐந்து முகவெளிற்பூச்சுக்கலவைகள்
தங்கள் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள், கோடுகள், கரும்புள்ளிகள், பருக்கள் மற்றும் வயதான தோற்றத்தை தரும் குறிகள் குறித்து கவலைப்படுகிறீர்களா? அவற்றை நீக்குவதற்காக செலவு செய்து அலுத்துவிட்டீர்களா? கவலை வேண்டாம்..! முக எழிலுக்காக நவீன பூச்சுகளில் பணத்தை செலவழிப்பதைவிட, எளிய வீட்டு வைத்திய முறைகளை கொண்டு முகத்தை பொலிவுறச் செய்யலாம். எளிதில் கிடைக்கக்கூடிய
வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை கொண்டே இந்த எளிய வீட்டு வைத்திய முறையில் பூச்சுக்களை தயாரித்து உபயோகிப்பதன் மூலம், வயதான தோற்றத்தை தவிர்த்து முகத்தை பொலிவுடன் வைத்திருக்கலாம்.
இந்த பூச்சுக்கள் உங்கள் முகத்தை இளமையுடன், பொலிவுறச் செய்யும்.
Table of Contents
ஒரு கையளவு ஆளிவிதையை பொடிசெய்து அதில் இரண்டு தேக்கரண்டி பொடியினை எடுத்துக்கொள்ளவும். அதில் ஒரு தேக்கரண்டி கெட்டித்தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் விட்டு கலந்து முகத்தில் தடவிக்கொள்ளவும். ஒரு பதினைந்து நிமிடங்கள் ஊறியபிறகு, உங்கள் முகத்திற்குள் அதன் சாறு
இறங்கியதாக நீங்கள் உணரும் சமயம், முகத்தை கழுவிக்கொள்ளவும். ஆளிவிதையிலுள்ள ஒமேகா 3, கொழுப்பு அமிலம் மற்றும் தாள்கூழ்கள் தசைகள் புத்துயிர் பெற உதவுகின்றது. தேன், தசைகளின் அழற்சியைக் குறைக்கிறது. கெட்டித்தயிரிலுள்ள பாலமிலம் முகத்தில் கோடுகள் வராமல் காக்கிறது
உங்கள் முகத்தளர்ச்சி நீங்கி தசைகள் இறுக்கமாவதற்கு, நீங்கள் நான்கு தேக்கரண்டி ஓட்ஸ்மீல் ஐ கொதிக்க வைத்து, சூடாறியவுடன் ஒரு கப் நீர்மோரில் கலந்து, அதில் முறையே, ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில், ஒரு தேக்கரண்டி பாதாம் ஆயில் கலந்து பாவுப்பதத்தில் வைத்துக்கொள்ளவும். உங்கள் முகத்தில் கண்கள் மற்றும் உதடுகளில் படாதவாறு இக்கலவையினை தடவி ஒரு இருபது நிமிடம் ஊறவும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளவும். இந்த முறையை தொடர்ந்து செய்தால், முகத்தில் சுருக்கம் ஏற்படாது.
உலர்ந்த சருமத்திற்கு விளக்கெண்ணை சிறந்த பாதுகாப்பாகும். விளக்கெண்ணெய் தடவுவதால், உங்கள் முகத்தில் ஈரப்பதம் தங்கி, உலர்வதை தடுத்து, சருமத்தை மிருதுவாக்கும். உங்கள் முகம் மற்றும் கழுத்தில் சிறிது விளக்கெண்ணெயை தடவி, மிருதுவாக உருவிவிட வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய பிறகு அல்லது இரவு முழுவதும் ஊறிய பின் முகத்தை கழுவிக் கொள்ல்லாம். இதனை ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்துவந்தால், முகத்தில் கோடுகள் விழாது
முட்டையில் உள்ள வயதான தோற்றத்தை குறைக்கும் வேதிப் பொருட்கள், உங்கள் முகத்தளர்சியை நீக்கி, சருமத்தை இறுக்கமாகவும், கெட்டியாகவும் வைத்திருக்கும். முட்டையிலுள்ள ஒமேகா 3, கொழுப்பு அமிலம் ப்ரோடீன்
மற்றும் துத்தநாகம் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன், அரை தேக்கரண்டி பால் ஆடை மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவிக்கொண்டு 15 நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக்கொள்ளவும். மூன்று நாட்களுக்கு ஒரு முறை இதனை செய்து வந்தால், சிறந்த பலனைப் பெறலாம்
ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன், இரண்டு மூன்று தேக்கரண்டி பன்னீரை விட்டு, நான்கு சொட்டு சந்தனம் விட்டு கலந்து கொள்ளவும். இந்தக்கலவையினை, உங்கள் முகத்தில் கீழிருந்து
மேற்புறமாக வட்ட வடிவில் தடவி, இலேசாக உருவிவிடவும். இரவு முழுவதும் அல்லது ஒரு மணி நேரம் ஊறிய பிறகு முகத்தை கழுவிக் கொள்ளவும். இந்தக் கலவை, உங்கள் முகத்தில், கோடுகள், சுருக்கங்கள் மற்றும் கரும் புள்ளிகள் வராமல் காக்கும்.
நம் முகத்தை பொலிவுறச் செய்ய, மேற்கண்ட முக எழில் பூச்சுக்கலவைகளைத்தவிர வாழைப்பழத்தையும் உபயோகிக்கலாம். வாழை அதிசயிக்கத்தக்க வகையில் முகத்தை பொலிவுறச் செய்யும். வாழைப்பழத்தை பிசைந்து அதில் ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஓட்ஸ் மாவினை கலந்து மாவுப்பதத்தில் பிசைந்து கொள்ளவும். இதனை முகத்தில் தடவிக்கொண்டு ஒரு 30 நிமிடங்கள் ஊறிய பிறகு இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவிக்கொள்ளவும். வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ, முகத்தில் கோடுகள் வராமல் காத்து, முகத்தை பொலிவுடன் வைத்திருக்க உதவும்.
மேற்கண்ட முகப்பூச்சுக்கள் உங்களை இளமையாக வைத்திருக்கும் என நம்புகிறோம்.
மூலப்படங்கள் வுமன் ஹெல்த், ஃபெமினா, கௌர்மண்டைஸ், ஹெல்த் பெனிஃபிட் டைம்ஸ், நியூ யார்க் போஸ்ட், மற்றும் இந்தியா மார்ட் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது
COMMENTS (0)