Home / Women Health Tips in Tamil / உங்களுக்கு சிறுநீரகக்கோளறு வருவதற்கான வாய்ப்பு இருப்பதைக்காட்கும் ஐந்து அறிகுறிகள்
உடலின் வயிற்றின் பின்புறக்குழிப்பகுதியில், பீன்ஸ் வடிவில் அமைந்த இரண்டு உறுப்புகள் தான் சிறுநீரகம் ஆகும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதும், இரத்தத்தில் உள்ள அசுத்தங்களை அப்புறப்படுத்துவதும் சிறுநீரகத்தின் முக்கிய செயல்பாடாகும். உடலின் திரவங்களை கட்டுப்படுத்தவும் இது உதவுகிறது. சிறு நீரகம் செயலிழக்கும் போது, பலவிதமான பிரச்சினைகள் உண்டாகின்றன.
சிறுநீரகம் செயலிழந்தால், இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் வெளியேற்றப்படாமல் உடலுக்கு கேடு விளைவிக்கிறது. அதனால், அடிக்கடி கண்காணித்து சிறுநீரகத்திற்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சிறுநீரகக் கோளாறை சரிசெய்வது மிக சுலபம்.
சிறு நீரக்க் கோளாறைக் கண்டறிய உதவும் ஆரம்பகட்ட அறிகுறிகள், இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன:
Table of Contents
உடலுக்கு தேவையான ஆக்ஸ்ஜனை வழங்கும், இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் “எரித்ரோபொய்டின்” என்னும் இயக்கியினை சிறுநீரகம் உற்பத்தி செய்வதால், சிறுநீரகம் செயலிழக்கும்போது, இரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைந்து, ஆக்ஸிஜன் பற்றாக்குறையால், உடலில் மயக்கம் ஏற்படும். இதைத்தவிர்க்க, உங்கள் உணவுப்பழக்கங்களை மாற்றிக்கொண்டு, இயற்கையான பழச்சாறு மற்றும் திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். கனிமத்தாது சத்துக்கள் அதிகமுள்ள உணவுகளை அறவே தவிர்க்க வேண்டும்.
கீழ் முதுகு வலி முதலில் ஒரு பக்கம் ஆரம்பித்து, பிறகு இரண்டு பக்கங்களிலும் வலி பரவி, குறிப்பாக இரவில் எந்த பக்கமாக படுக்கின்றோமோ அந்தப்பக்கத்தில் அதிக வலி உண்டாகும். கீழ் முதுகுப்பகுதியில் தான் சிறுநீரகம் அமைந்துள்ளதால், நாம் எச்சரிக்கையுடன் இந்த வலியைக் கையாளவேண்டும். சிறுநீரகம் பாதிப்படையும் போது இந்த பகுதியில் வலி உண்டாகும்.
சிறுநீரகம் உடலில் உள்ள திரவங்களை சரிவர வடிகட்டாமல் போனால், இத் திரவங்கள் உடலில் தங்கி கை கால் முகம் போன்ற அங்கங்கள் வீக்கமடையும். தூங்கி எழுந்ததும் கண்கள் உப்பி இருப்பதற்கும் இதுதான் காரணம். சிறுநீரகம், உடலில் உள்ள புரோட்டீன்களை, சிறுநீர் மூலம் தவறுதலாக அப்புறப்படுத்திவிடும் போது, இத்தகைய கண்வீக்கம் ஏற்படுகிறது.
சிறுநீரகம் சரிவர செயல்படாதபோது, சிறுநீர் உற்பத்தி சரிவர நடப்பதில்லை. இரவில், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவது போன்ற அவஸ்தைகள் ஏற்படும். சிறு நீரின் வண்ணத்தை வைத்தே சிறு நீரகத்தின் செயல்பாட்டினைப்பற்றி அதிகம் அறிந்துகொள்ளலாம். சிறுநீர் குழாயில் அடைப்பு ஏற்படுவதால், சிறுநீரில் இரத்தம் கலந்து வெளிவரும் போது, சிறுநீர் சிவப்பகவோ, கருஞ்சிவப்பாகவோ வரும். சிறுநீரில் நிறைய கொப்புளங்கள் உண்டாவதும், பீய்ச்சி அடிப்பதுபோல், விட்டு, சிறுநீர் வெளிவருவதும், சிறுநீரில் புரோட்டீன் கலந்துள்ளதைக் குறிக்கும். சிறுநீரக சிறப்பு மருத்துவர்கள் (நெப்ரோலஜிஸ்ட்) கூற்றுப்படி இது, சிறுநீரகக்கோளாறின் ஆரம்ப அறிகுறியாகும்.
சிறு நீரகக்கோளாறு அதிகமாகும் போது, கனிம மற்றும் எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுமும் சருமம் உலர்ந்து போய், அரிப்புகள் அதிகமாகும். சிறுநீரகம் இரத்தத்தில் உள்ள ஊட்டங்களையும், கனிமங்களையும் சரிவர பராமரிக்காதபோது, சருமம் உலர்ந்து அரிப்பு மற்றும் சுகமின்மை ஏற்படுகிறது. உடலில் அசுத்தம் சேரச்சேர, இந்த அரிப்பு அதிகமாகும்.
குறிப்பு: – அரிப்பிற்கு எந்த மருந்தும் எடுத்துக்கொள்ளும் முன் மருத்துவரை கலந்தாலோசிக்கவும். சில மருந்துகளில், சிறுநீரகத்தை மேலும் பாதிக்கும் மூலக்கூறுகள் உள்ளது. இதனால், சருமம் மேலும் உலர்ந்து போய், பல பக்க விளைவுகளை உண்டாக்கும்
மூலப்படங்கள் பிக்ஸாபே, விக்கிமீடியா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.
COMMENTS (0)