Search

Home / Home Remedies in Tamil (வீட்டு வைத்தியம்) / முகத்தின் கருமை நிறத்தை போக்கவும், முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்க்கும் ஏற்ற வழிமுறைகள்

முகத்தின் கருமை நிறத்தை போக்கவும், முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்குவதற்க்கும் ஏற்ற வழிமுறைகள்

Nithya Lakshmi | ஜூலை 9, 2018

பெண்களை பொறுத்தவரை, பொலிவான, குறிபாடில்லா முகத்தை பெற, தினமும் கடவுளை வேண்டி, பலவிதமான ஆரோக்கியமான் வழிமுறைகளை மேற்கொள்கிறார்கள்.    சிலருக்கு, சுற்றுச்சூழலில் உள்ள மாசு, மாறுபட்ட வெப்ப நிலை மற்றும் தூசிகள் காரணமாக, முகத்தை பராமரித்துக் காப்பது பெரும் சவாலாக உள்ளது.  வயதுக்கு வந்த பருவத்திலும், கன்னிப்பருவத்திலும், இந்த கரும்புள்ளிகளும், கருமை நிற முகமும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

வீட்டிலுள்ள சில பொருட்களை கொண்டு எளிய வழியில் இந்த கருமையையும், கரும்புள்ளிகளையும் நீக்குவது எப்படி என்பதை இங்கே காண்போம்.

 

1) முகத்தில் ஆவி பிடித்தல்

அடைபட்டிருக்கும் முகத்திலுள்ள துளைகளை சரிசெய்து, கரும்புள்ளிகளை அகற்ற, முகத்தில் ஆவி பிடிப்பது நல்லது.   ஆவிபிடித்த பிறகு மிருதுவாக தேய்த்தெடுத்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

செய்முறை:  ஒரு டப்பில் சூடான நீரை நிரப்பி, அதன் மேல் முகத்தை காட்டி ஒரு துணியால் ஆவி வெளியேறாதபடி மூடிக்கொண்டு, ஆவி பிடிக்கவும்.  ஒன்றிரண்டு நிமிடங்கள், ஆவி உங்கள் முகத்தில் படும்படியாக வைத்திருந்து, இதேபோல், மூன்று  அல்லது நான்கு முறை தொடர்ந்து செய்யவும். ஆவிபிடித்தபின், சர்க்கரை அல்லது ஓட்ஸ் தடவி, தளர்வாக தேய்த்து முகத்தை கழுவிக்கொள்ளவும்.

 

2) எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை ஒரு இயற்கையான, சுத்திகரிக்கும் பொருளாகும். அதனுடன் தேன் சேர்ந்தால், சருமத்தில் சிறப்பாக செயல்பட்டு, முகத்திலுள்ள கரும்புள்ளிகளை காணாமல் போகச் செய்துவிடும்.   தேன், முகத்தில் படிந்துள்ள அசுத்தங்களை வெளியேற்றுவதோடு மட்டுமல்லாமல்,தசைகளுக்கு ஊட்டத்தையும் அளித்து, சருமம் உலர்ந்து போகாமல் காக்கிறது.

செய்முறை:  ஃபேஸ்பேக் போன்று, ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை, தேனுடன் கலந்து முகத்தில்  தடவிக்கொண்டு, ஒரு பத்து நிமிடங்கள் ஊறிய பின், முகத்தை கழுவிக்கொள்ளவும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதேபோல் செய்துவரவும்.

 

3) எரியூட்டப்பட்ட கரி

எரியூட்டப்பட்ட கரி எல்லா அசுத்தங்களையும் உறிஞ்சிக்கொள்ளும்,   முகத்திலுள்ள அதிகப்படியான எண்ணைப்பசையை அகற்றி, துளைகளை சுத்தம்செய்து, கரும்புள்ளிகள் வராமல் காக்கிறது.   

செய்முறை:  அரை தேக்கரண்டி கரியுடன், நீர்கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் பூசிக்கொண்டு, மிருதுவாக உருவி விடவும்.  ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் ஊறிய பின் முகத்தை கழுவிக்கொள்ளவும். வாரம் இரண்டு முறையாவது இதனை தொடர்ந்து செய்வது சிறந்த பலனை தரும்.  

 

கரும்படலம் அல்லது கருமை தோலின் தன்மையினை மாற்றிவிடும்.  வீட்டிலுள்ள பொருட்களைக்கொண்டே, எளிய முறையில், இதனைப்போக்க உதவும் சில வீட்டுக்  குறிப்புகள்.  

 

1) தயிர், அரிசிமாவு கலவை

அரிசிமாவு, தயிர் கலந்த பூச்சு, முகத்தில் சிறப்பாக செயல்பட்டு, கருமையை போக்குகிறது.   அரிசிமாவுடன் தயிர்கலந்து முகத்தில் பூசிக்கொள்ளவும். கருமை படர்ந்த இடத்தில

மிருதுவாக தேய்த்துவிட்டு, ஒரு மூன்று நிமிடங்கள் ஊறியபின், முகத்தை கழுவிக்கொள்ளவும்.   

 

2) பாதாம், தயிர் கலவை

பாதாமை அரைத்து தயிரில் கலந்து கெட்டியாக முகத்தில் பூசி, கருமை படர்ந்த உள்ள இடங்களில் தேய்த்துக்கொள்ளவும்.   ஒரு பத்து பதினைந்து நிமிடங்கள் ஊறிய பின் முகத்தை கழுவிக்கொள்ளவும்.

 

3) கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் கலவை

கெட்டித்தயிருடன் கடலைமாவு கலந்து ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கரும்படலம் உள்ள இடங்களில் தடவிக்கொண்டு ஒரு பதினைந்து நிமிடங்கள் ஊறிய பின், முகத்தை கழுவிக்கொள்ளவும்.   

 

4) முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்

முல்தானி மெட்டி, சருமப்பாதுகாப்பிற்காக, காலங்காலமாக உபயோகிக்கப்பட்டுவரும் பொருளாகும்.   கருமை நிறம் போக்க, இது சிறப்பாக செயல்படுகிறது. முல்தானி மெட்டியை பன்னீரில் கரைத்து, முகத்தில் பூசிக்கொண்டு உலர்ந்தபின் முகத்தை கழுவிக்கொள்ளவும்.  வாரம் மூன்று முறை இதை செய்வது சிறந்த்து.

மூலப்படங்கள் பிக்ஸாபே.காம், இந்தியா.காம், விக்கிபிடியா.ஆர்க், ஸ்டைல்க்ரேஸ்.காம், ஃபிட்ஃபிட்டுர்ரா.எஸ், எஸ்ஸென்ஸியல்லைஃப்.பிகே ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது  

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன