கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் 5 எளிமையான வீட்டு சிகிச்சைகள்

Spread the love

அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு பிரிவின் ஆய்வுப்படி, சராசரியாக ஒரு இன்ச் தலைமுடி ஒரு மாதத்தில் வளர்கிறது. அதாவது ஒரு வருடத்திற்கு, ஆறு இன்ச் கூந்தல் வளர்கிறது. கெராடின் எனும் புரதத்தால் ஆனவை நம் முடி பாலிக்கல்ஸ். புதிய முடி வளர, வளர நம் பழைய முடி தானாக உதிர்ந்து விடும். ஆனால் நீண்ட, திடமான, பளபளக்கும் கூந்தலை பெற, பக்கவிளைவுகளை தராத இயற்கையான பொருட்களை உபயோகிப்பது மிக அவசியம். அப்படிப்பட்ட சில விந்தை பொருட்களை பார்ப்போம்:

 

1.வெங்காய சாறு:

பண்டையகாலம் முதல் நாம் உபயோகிக்கும் இந்த வெங்காய சாறு, ஒட்டுமொத்த கூந்தல் ஆரோக்யத்திற்கு மிகவும் உகந்தது. அதில் நிறைந்துள்ள சல்பர் , கொலஜன் உற்பத்தியை ஊக்குவிப்பதன் மூலம் கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை :

ஒரு வெங்காயத்தை துண்டுகளாக வெட்டி, சாறு பிழியவும். அதை உச்சந்தலையில் நன்கு தேய்த்து, பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் ஊறவைத்து பின்பு மிதமான ஷம்பூவினால் வாஷ் செய்யவும்.

வெங்காயத்திற்கு பதில் உருளைகிழங்கு சாறும் உபயோகிக்கலாம்.

 

2.முட்டை மாஸ்க்:

கூந்தல் வளர்ச்சிக்காக, உலகம் முழுவதும் உபயோகிக்கப்படும் ஒரு பொருள் முட்டை. கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கச்செய்யும் புரதம், சல்பர், இரும்புச்சத்து, துத்தநாகம்,செலினியம்,பாஸ்பரஸ் போன்றவை முட்டையில் நிறைந்துள்ளது என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

உபயோகிக்கும் முறை :

முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் ஒரு கிண்ணத்தில் எடுத்து அதில் ஒரு  தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து கலக்கவும். அதை உச்சந்தலையிலும், கூந்தல் முழுவதும் தடவி இருபது நிமிடங்கள் ஊறவைக்கவும். பின் குளிர்ந்த நீரில் ஷாம்பூ தேய்த்து வாஷ் செய்யவும்.

 

3.வெந்தயம்:

முடி உதிவதை தடுக்கும்  மிக சிறந்த நிவாரணி வெந்தயம் ஆகும். இது கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது. வெந்தயத்தில் உள்ள புரதம் மற்றும் நிகோடினிக் அமிலம் , பொடுகை அகற்றவும் வழி வகுக்கிறது.

உபயோகிக்கும் முறை :

ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை நீரில் ஊற வைத்து , பேஸ்ட் போல அரைத்துக் கொள்ளவும். அதில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து உச்சந்தலை மற்றும் கூந்தல் முழுவதும் தடவி முப்பது நிமிடங்கள் ஊற வைத்து பின் தலையை வாஷ் செய்யவும். இது போல வாரத்திற்கு ஒன்று அல்லது இரு முறை செய்து ஆரோக்யமான, நீண்ட கூந்தலை பெறவும்.

 

4.கிரீன் டீ :

ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ள கிரீன் டீ, பொடுகு தொல்லைக்கு தீர்வாகவும், கூந்தல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகிறது.

உபயோகிக்கும் முறை :

வெதுவெதுப்பான கிரீன் டீயை உச்சந்தலையில் நன்கு தடவி, இருபது நிமிடங்கள் கழித்து நீரில் அலசவும். வாரத்திற்கு ஒரு முறை இதை செய்யலாம்.

 

5.வெள்ளரி ஜூஸ்:

கூந்தலுக்கு நன்மை பயக்கும் சல்பர் மற்றும் சிலிகான் வெள்ளரியில் நிறைந்து காணப்படுகிறது.

உபயோகிக்கும் முறை :

திடமான, பட்டு போன்ற கூந்தலை பெற வெள்ளரி ஜூஸால் கூந்தலை கழுவவும். மேலும் வெள்ளரி, காரட், புதினா ஜூஸ்கள் அருந்துவதும் கூந்தல் ஆரோக்யத்திற்கு மிக நல்லது.

 

மேற்கூறிய எளிமையான வீட்டு குறிப்புகள் தவிர, ஆரோக்யமான உணவு, கூந்தலை குளிர்ந்த நீரில் அலசுவது, அடிக்கடி தலையை மசாஜ் செய்வது, ஹேர் ட்ரையர் உபயோகிக்காமல் இருப்பது போன்றவை நீண்ட, ஆரோக்யமான கூந்தலை அளிக்கும்.

இவற்றை பின்பற்றி முடி சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலிருந்து விடுதலை பெறுவோம்!  

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன