உங்கள் முகப்பூச்சுக்களை நீக்குவதற்கான ஐந்து எளிய வழிகள்

Spread the love

ஒரு விருந்துக்கு சென்றுவிட்டு வந்த பிறகு, நாம் செய்யும் கடைசி வேலை, நமது முகப்பூச்சுக்களை நீக்குவதாகும்.  இது ஒரு சிக்கலான விஷயமாகும்.  முகப்பூச்சுக்கலவையில் ஒவ்வொன்றாக

நீக்குவதற்கு, நமது தோலை சுரண்டியும், தேய்த்தும் சிரமப்பட வேண்டியுள்ளது.  கடினமான முறையில் தசைகளை தேய்ப்பது ஆபத்தானது என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.  

உங்கள் முகப்பூச்சுக்களை எளிதாக நீக்குவதோடல்லாமல், முக எழிலையும் பாதுகாக்கும் இயற்கையான சில வழிமுறைகளை இங்கே அறிந்துகொள்ளுங்கள்:  

 

1) பால்:

பால் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, தசைகளுக்கும் அதிக பலனைத்தருகிறது.  தோல் மினுமினுப்பாக ஆவதற்கு பால் உதவுகிறது. அக்கால இந்திய அரசிகள், தோலைப்பாதுகாக்க, பாலைத்தான் உபயோகித்தார்கள் என்பதை அறிவீர்களா?  அரசகுலப் பெண்களின் எழிலான,மினுமினுப்பான தோற்றத்தின் இரகசியம் பால் தான். பால், முகத்திற்கு தேவையான ஈரப்பதத்தினை தக்கவைத்து, முகத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் வைத்திருக்கிறது

புது டில்லியைச் சேர்ந்த தோல் நிபுணர், டாக்டர் இந்து பல்லானி சொல்கிறார்:  உங்கள் முகத்தின் எண்ணை கலந்த முகப்பூச்சுக்களையும், மிக அடினமாக படிந்துள்ள முகப்பூச்சுக்களையும்  நீக்குவதற்கு, பாலுடன் ஆலிவ் ஆயிலை கலந்து முகத்தில் தடவிக்கொண்டு ஒரு மிருதுவான துணியால் அல்லது பஞ்சால் முகத்தை துடைத்துக்கொள்ளவும்.  கண்களின் மீது உள்ள பூச்சுக்களை  நீக்க, ஒரு மிருதுவான காட்டன் துணியை பாலில் நனைத்து, கண்களைத்துடைத்துக்கொள்ளவும்.  பிறகு, கண்களை நன்கு கழுவிக்கொள்ளவும்.  .

2) தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய், முகம் தலைமுடி மற்றும் தோல்களுக்கான பலவிதமான பயன்களை உள்ளடக்கியது.   நீர் சார்ந்த முகப்பூச்சுக்களை நீக்குவதற்கு, தேங்காய் எண்ணெய் ஒன்றே போதும்.   குகூன் அழகியல் மாற்ற மையத்தின் தலைமை மருத்துவ முகப்பூச்சு நிபுணர், டாக்டர் ரேமா அரோரா அவர்கள் சொல்கிறார்: தேங்காய் எண்ணெயில் மூன்று விதமான கொழுப்பு அமிலங்களும், எண்ணற்ற நுண்ணுயிர்  மூலக்கூறுகளும் உள்ளன. இவை உங்கள் முகம் மற்றும் உடலுக்கு ஏற்ற ஈரப்பதத்தை வழங்கி உடலை பாதுகாக்கும்.  

3) வெள்ளரி விழுது:

சந்தையில் உள்ள பெரும்பாலான முகப்பூச்சு நீக்கிகளில் வெள்ளரி விழுது கலந்துள்ளதாக டாக்டர் இந்து பல்லானி நம்புகிறார்.   இவற்றை வாங்குவதில் காசை செலவழிப்பதை விட, வீட்டிலேயே ஒரு வெள்ளரிக்காயை நறுக்கி அதனுடன் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுக்கள் கலந்து, மிக்ஸியில் அரைத்து விழுதாக எடுத்து முகத்தில் தடவிக்கொள்ளலாம்.   வெள்ளரியில் வீக்கத்தை குறைக்கும் மூலக்கூறுகள் உள்ளதால், தோல்களைப்பாதுகாத்து முகப்பூச்சுக்களை எளிதாக நீக்கிவிடும்.   

 

4) சமையல் சோடா மற்றும் தேன்:

சமையல் சோடா, தேன் கலவை எண்ணெய் சார்ந்த மற்றும்  பொடிகள் சார்ந்த முகப்பூச்சுக்களை எளிதில் நீக்கிவிடும்.  தேனை ஒரு சுத்தமான துணியில் தடவி அதன்மீது சமையல் சோடாவை தூவவும்.  இந்த துண்டால், முகத்தை துடைத்துக்கொள்ளவும். முகப்பூச்சுக்களை நீக்க, முகத்தை இடையறாது தேய்ப்பதும், துவர்ப்பிகளை உபயோகிப்பதும், தசைகளின் மென்மையையும், மிருதுத்தன்மையையும் பாதிக்கும்.  

5) குழந்தைகளுக்கான எண்ணெய்:

மஸ்காரா போன்ற முகப்பூச்சுக்களை நீக்குவது கடினம்.  குழந்தைகளுக்கான எண்ணெயை உபயோகித்து அவற்றை எளிதில் நீக்க முடியும்.   ஒரு சில சொட்டுக்கள் இந்த எண்ணையை எடுத்து உபயோகித்தால் எல்லா முகப்பூச்சுக்களையும், முகப்பூச்சு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல்,  எளிதில் நீக்கிவிடலாம்.  

 

முகப்பூச்சுக்களை நீக்குவதற்கான, இந்த வீட்டுக்குறிப்புகள் மிகமிக பயனுள்ளதாகும்.  தசைகளுக்கும் பயனுள்ளதாகும்.  தோல்களை சரியாக கவனித்து பராமரித்தால், அதிக மினுமினுப்பாக நமது உடலை வைத்துக்கொள்ளலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.!

மூலப்படங்கள் ஆஸ்திரேலியன் கேமல், தெ கிளாஸ் ஜார், வீட் நௌ, நச்சுரல் ஹீலிங், உள் வொர்த் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன