Home / Women Health Tips in Tamil / மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைக்குறைக்கும், பொதுவாக யாரும் அறிந்திராத ஐந்து வழிமுறைகள்:
வாழ்நாளில் எத்தனை முறை மாதவிடாய் வந்தாலும், நமக்கு ஒவ்வொருமுறையும், எரிச்சலும், படபடப்பும், வெட்டுவது போன்ற வலியும் தான் ஏற்படுகிறது. சில நேரங்களில், தாங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படுகிறது. சில எளிய பொருட்கள், மாதவிடாய் சமயத்தில் நமக்கு பேருதவி புரிவதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.
மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியைக்குறைக்கும், பொதுவாக யாரும் அறிந்திராத ஐந்து வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
Table of Contents
இந்தியாவில் கிடைக்கும் தின்பண்டங்களான, சிப்ஸ், ஃபிங்கர் ஃப்ரை போன்றவற்றில் அதிக அளவு உப்பு கலந்திருப்பதால், மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலியை குறைக்க அவை எவ்விதத்திலும்
உதவுவதில்லை. அதனால், உணவில் உப்பின் அளவை குறைத்துக்கொள்ளவும். நீங்களே சமைக்கும் போது, உங்களுக்கு சுவைக்காக தேவைப்படும் குறைந்தபட்ச அளவு உப்பை மட்டுமே உபயோகிக்கவும்.
மாதவிடாய் வருமுன் ஏற்படும் தளர்ச்சி மற்றும் மயக்க நிலையை போக்க யோகா பயிற்சி நல்லது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. மாதவிடாய் வரும் சமயங்களில் இந்த “விந்யாச யோகா”வினை செய்வது நல்லது. “விந்யாச யோகா” என்பது உடலை மென்மையாக அசைக்கும் ஒரு பயிற்சியாகும். இதனை பற்றி அறிய கீழ்கண்ட தொடர்பில் சொடுக்கவும்.
எல்லா பெண்களுக்கும் மாதவிடாய் சமயத்தில் ஒரு அரவணைப்பு தேவைப்படுகிறது. தலையணையில் சில சொட்டு லாவெண்டர் எண்ணையினை தடவி, அதனை தலைக்கு வைத்துப்படுத்தால், சிறு குழந்தை போல தூங்கலாம். லாவெண்டர் எண்ணை கிடைக்காவிடில், லாவெண்டர் கலந்த ஊதுபத்தி, மெழுகு போன்றவற்றை ஏற்றிவைப்பதும் காற்றை சுத்தப்படுத்தும் லாவெண்டர் பொருட்களை உபயோகிப்பதும் நல்ல பயனைத்தரும். லாவெண்டரில் இருக்கும் இயற்கையான நறுமணம், உங்களை வலி மறக்கச்செய்து நல்ல உறக்கத்தை தரும்
அக்குப்ப்ரஷர் கொடுக்கவேண்டிய இடங்களில் மென்மையாக அழுத்துவதால் சிறந்த நிவாரணம் பெறலாம். கால் கட்டை விரலும், ஆள்காட்டிவிரலும் இணையும் இடத்தில், உங்கள் கட்டைவிரலால், மேற்பரப்பில் படந்துள்ள தசைப்பகுதியை மென்மையாக அழுத்துவதன் மூலம் சிறந்த நிவாரணம் கிடைக்கும். ஒரு கால்களிலும் சுமார் ஒரு நிமிடம் இதனை தொடர்ந்து செய்வதால் அதிக பலனை பெறலாம்.:
மாதவிடாய் சமயத்தில், உலர் பழங்களையும், பச்சை கீரை வகைகளையும் உண்பது அதிக பயன் தரும் என்று சில ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. தசைப்பிடிப்பு மற்றும் மாதவிடாய் வலிகளை இவை குறைக்கின்றன.
மேற்கண்ட எல்லா வழிமுறைகளும், உங்கள் வலியைக்குறைக்கும் என்று நம்புகிறோம். உங்களுக்கு தெரிந்த எளிய குறிப்புகளையும் எங்களுடன் பகிரலாம்.
மூலப்படங்கள் டுடே ஐ ஃபவுண்ட் அவுட், பின்டெரெஸ்ட், ஹோலிஸ்டிக் சோன், யூ டியூப், நியூட்ரி நீட், ஒன் கிரீன் பிளானட் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது
COMMENTS (0)