முகத்தில் தென்படும் துளைகளை  நீக்க உதவும் ஆறுவகை வீட்டுவைத்தியமுறைகள்  

Spread the love

முகத்தின் தசைகள் சுவாசிப்பதற்கு இந்த துளைகள் உதவுகின்றன.  தினசரி, மாசு மற்றும் சூழ்நிலையில் படியும் தூசுகளால், முகத்திலுள்ள  இந்தத்துளைகள் பெரிதாகி வெளியே தெரிகின்றன எண்ணை வடியும் முக அமைப்புள்ளவர்களுக்கு, சருமத்தில் உள்ள எண்ணைப்பசை காரணமாக காலப்போக்கில் இந்த துளைகள் கரும் புள்ளிகளையும், பருக்களையும் தோற்றுவிக்கின்றன   அதனால், நாம் இவ்வகை பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்கள் முகத்தில் தங்காமல் காத்துக்கொள்வது அவசியமாகும்

முகத்தில் தென்படும் துளைகளை  நீக்க உதவும் ஆறுவகை வீட்டுவைத்தியமுறைகள், இங்கே தரப்பட்டுள்ளது:

 

1.வோக்கோசு: (பார்ஸ்லே):

வோக்கோசு இலைகளை சூடான  நீரில் போட்டு, நீர் கொஞ்சம் சூடு குறைந்ததும், ஒரு துண்டை அதில்  நனைத்து, முகத்தில் மூடினாற்போல் போட்டுக்கொண்டு, ஒரு 10-15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.  வாக்கோசு தசைகள் சம்பந்தமான அசுத்தங்களை நீக்க வல்லது.

 

2.பப்பாளி:

எளிதில் எங்கும் கிடைக்கும் பப்பாளிபழத்தில் முகத்தில் ஏற்படும் துளைகளை நீக்கும் சக்தி உள்ளது.  பழத்தை மசித்து முகத்தில் தடவிக்கொண்டு ஒரு 15-20 நிமிடங்கள் ஊறவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதனை செய்துவந்தால், தசைகள் இறுக்கமாகி, முகத்துளைகள் தானாக வெளியே தெரியாமல் சிறுத்துவிடுவதை கண்கூடாக காணலாம்.  

 

3.ஆர்கான் எண்ணை:

ஆர்கான் ஆயிலில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்புச்சத்துக்கள் உங்கள் முகத்தில் உள்ள துளைகள் பெரிதாகாமல் தடுக்கும்.    தினமும் இரவில் படுக்குமுன், இந்த எண்ணெயை முகத்தில் தடவி, ஒரு 30 நிமிடங்கள் மிருதுவாக உருவி விட்டுக்கொள்ளவும் பிறகு, இளஞ்சூடான நீரில் முகத்தை கழுவிக்கொண்டு படுக்கச் செல்லவும்.  

 

4.களிமண் முகமூடி:

முகத்தில் ஒப்பனை செய்துகொள்ள உதவும், கிளே மாஸ்க் எனப்படும் களிமண் முகமூடிகள் முகத்தசைகள் இறுக்கமாகி, முகத்தில் உள்ள எல்லா அழுக்குகளையும் நீக்கிவிடும்.   இந்த பவுடரை பன்னீரிலோ, பாலிலோ கலந்து முகத்தில் தடவிக்கொண்டு 15 நிமிடங்கள் ஊறிய பிறகு, குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக்கொள்ளவும். இதனை உபயோகிக்கும் முன், உங்கள் முகத்திற்கு ஒத்துக்கொள்கிறதா என்று பார்க்க, சிறிது கலவையை முகத்தில் ஓரிடத்தில் தடவி, மாதிரி பார்த்துவிட்டு, எந்தவித பின்விளைவும் இல்லையென உறுதியான பின் உபயோகிக்கவும்

 

5.எண்ணெய் உறிஞ்சும் மண் (முல்தானி மிட்டி):

முல்தானி மிட்டி பெரிதாக உள்ள முகத்துளைகளை மூட உதவும்.  இது,முகத்தில் உள்ள அசுத்தங்கள் மற்றும் கறைகளை நீக்க வல்லது. இரண்டு தேக்கரண்டி முல்தானி மிட்டியினை பன்னீரில் கலந்து முகத்தில் தடவிக்கொண்டு ஒரு 15 நிமிடங்கள் ஊறிய பிறகு முகத்தை கழுவிக்கொள்ளவும்.  

 

6.கட்டேசு அமிலம் (catechu):

முகத்தில் உள்ள பெரிதாக தெரியும் துளைகளை நீக்குவதற்கு, கட்டேசு பொடி மிகவும் உதவுகிறது.  இந்தப்பொடியினை சந்தனப்பவுடர் மற்றும் பன்னீர் அல்லது தண்ணீர் அல்லது பாலுடன் கலந்து முகத்தில் தடவிக்கொண்டு ஒரு பதினைந்து நிமிடங்கள் ஊறிய பிறகு குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிக் கொள்ளவும்   

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன