உங்களுக்கு உகந்த மார்க்கச்சையை(பிரா) தேர்ந்தெடுக்க உதவும் ஐந்து குறிப்புகள்

Spread the love

இந்தியப் பெண்களில் கிட்டத்தட்ட எண்பது விழுக்காடு நபர்கள், சரியான அளவுடைய மார்க்கச்சைகளை (பிரா) அணிவதில்லை என ஒரு ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.  நாம் சந்தையில் வாங்கும் பொழுது சரியான அளவுதான் என நினைத்து வாங்கும் பிரா, எப்பொழுதும் சரியாக இருப்பதில்லை அதனால், முதுகுவலி, தோள்வலி போன்ற பிரச்சினைகள் தோன்றக்கூடும்.   அறிவியற்கூற்றுப்படி, மார்பகத்தில் உள்ள தசை நார்கள் அதிக பலம் கொண்டவை அல்ல; அதனால், சரியான அளவில்லாத பிரா, இதனை மேலும் தளர்வாக்கி தொங்கவைக்கிறது

 

1) மார்க்கச்சைகள் அதிக தளர்வாகவோ, அதிக இறுக்கமாகவோ இருக்கக்கூடாது:

உங்கள் பிரா எல்லாப் மார்பகத்தின் மீது கச்சிதமாகப் பொருந்த வேண்டும். அதிகம் தளர்வாகவோ, இறுக்கமாகவோ இருக்கக்கூடாது. உங்கள் பிராவின் பின்புற கொக்கி போடும் இடத்தில்  உங்கள் இரண்டு விரல்கள் எளிதாக நுழையக்கூடிய வகையில் இருந்தால், அது உங்கள் உடலுக்கு பொருத்தமான மார்க்கச்சையாகும். பிராவின் மேற்பட்டை தொடர்ச்சியாக உங்கள் தோள்களிரிலுந்து நழுவிக்கொண்டிருந்தால், அது உங்களுக்கு பெரிய அளவானதாகும்   

 

2) முழு பாதுகாப்பு:

உங்கள் மார்பகம் முழுவதும் கச்சிதமாக உள்ளே பொருந்தக்கூடிய அளவில், பிராவின் முன்பகுதி அமைந்திருக்க வேண்டும்.  முலைகள் பிராவின் கீழ்ப்பகுதியை நோக்கி தொங்கியவாறு காட்சியளிக்கக்கூடாது. பிரா பட்டைகள் எந்தவிதத்திலாவது சரிந்து உங்களுக்கு தொந்தரவாக இருந்தால், அது உங்களுக்கு அளவு பெரிதான பிரா ஆகும்.   நீங்கள் உங்கள் கைகளை தலைக்கு மேலே உயர்த்தும் போது, உங்கள் பிரா மேற்புரமாக நகர்ந்து உங்கள் மார்பகப்பகுதி வெளியில் தெரிந்தால், அது உங்களுக்கு அளவில் பெரியதாகும். பின்புறம் தாழ்ந்திருப்பதும், உங்களுக்கு அளவில் பெரியதாகும்.  உயரம் குறைந்தவர்கள், பிரா அளவுகள் பொருந்தாமல் அவதிப்படுவார்கள் அவர்கள் “டெமி-பிரா” வாங்கி உபயோகித்தால், பட்டைகள் தோளில் சரியும் தொந்தரவு இருக்காது

 

3) பொருத்தமான துணிவகைகள்:

மிருதுவான துணிகளில் செய்யப்பட்ட பிரா, உங்களை பற்றிய எண்ணத்தையே  உயர்வாக்கும். கீழ்ப்பகுதியில் கம்பி பொருத்திய பிராவில், அதிக நீட்சிக்கு இடமிருக்காத காரணத்தால், அதனை உபயோகிப்பது நல்லதல்ல. செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட மற்றும் பஞ்சு வைத்து தைக்கப்பட்ட பிராக்களும் நல்லதல்ல

 

4) அளவான மார்க்கச்சைகள் அழகாகத் தாங்கிப்பிடிக்கும்:

மார்பகத்தசைகள் உள்ளடங்கி இருப்பது, மார்க்கச்சைகள் உரிய அளவில் தாங்கிப்பிடிக்காததால் ஏற்படும்.   அளவான பொருத்தமான பிரா உங்கள் மார்பகத்தை அழகாகத் தாங்கிப்பிடிக்கும்

 

5) மார்பகத்தை எப்படி சரியாக அளப்பது:

மார்பகத்தின் சரியான அளவை அறிய, ஒரு அளவுநாடாவை எடுத்து அளக்க வேண்டும்.  மார்பகத்தின் கீழ்பகுதியில் அளவு நாடாவின் ஒரு பகுதியை பிடித்துக் கொண்டு  உடலைச்சுற்றி, மறுமுனையை தொடங்கிய இடத்தில் இணைத்து வைத்துப்பார்த்தால், வரும் நம்பருடன் ஐந்தைக் கூட்டினால் வருவதுதான் உங்கள் மார்க்கச்சை (பிரா) அளவு  உதாரணமாக, அளவு நாடாவில் 29 காண்பித்தால், அத்துடன் 5 கூட்டினால் வரும் 34 தான் உங்கள் பிராவின் அளவு என்று கணக்கிட வேண்டும்

 

எங்கள் பரிந்துரை:

சந்தையில் விதவிதமான மார்க்கச்சைகள் (பிரா) கிடைக்கின்றன. நீங்கள் எதனை தேர்ந்தெடுத்தாலும், மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றுங்கள்  

மூலப்படங்கள் டாக்கிங் பிரா, ரீடர்ஸ் டைஜஸ்ட், வயோலண்ட், விண்டேஜ் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது  

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன