Home / Women Health Tips in Tamil / தைராய்ட் உள்ளவர்கள் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகள்
தைராய்ட் சுரப்பிகளில் பழுது ஏற்பட்டால், தைராய்ட் நோய் ஏற்படும். தைராய்ட் சுரப்பிகள்தான், உடலின் வளர்சிதை மாற்றத்தை தீர்மானிக்கிறது. எனவே, தைராய்ட் நோய் உள்ளவர்களுக்கு, மனச்சோர்வு, தலைமுடி உதிர்தல், எடை கூடுதல் அல்லது குறைதல் மற்றும் உடலில், வெப்ப நிலை குறைதல் ஆகியவை ஏற்படும். இதனல், நம் உடலை எப்படி பாதுகாப்பது என்பது புரியாமல் தவிக்கும் நிலை வரும்.
தைராய்ட் நோய் உள்ளவர்கள் செய்யவேண்டியவை:
Table of Contents
மீன், நண்டு, எள்ளு, பாதாம், பழங்கள், உலர்பழக் கொட்டைகள் மற்றும் வைட்டமின், கனிமச்சத்து, புரதச்சத்து அதிகமுள்ள காய்கறிகள் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியமானதாகும். இவைகள் வீக்கத்தை குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் திறன் உள்ள உணவுகள் ஆகும்.
உங்களுக்கு தைராய்ட் இருப்பதாக அறிந்தால், தரமான பரிசோதனைக்கூடத்தில் உங்கள் தைராய்ட் அளவை சோதித்து, கண்காணிக்கவும். உங்கள் மருத்துவர் தரும் மருந்துகளை உட்கொண்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உங்கள் தைராய்ட் அளவை சோதித்துக் கொள்ளவும்.
குளைரைடு மற்றும் புளோரைடு அகற்றப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட நீரைத்தான் நீங்கள் அருந்தவேண்டும். நீங்கள் அருந்தும் நீரானது, சிறுநீரகம் மற்றும் குடலை சுத்தப்படுத்தி, அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்.
உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, தினமும் நடை பயிற்சி மேற்கொள்ளவும். யோகா தினசரி செய்துவந்தால், ஒரு கால கட்டத்தில் தைராய்டினை அறவே நீக்கும் சக்தி சொண்டது.
தைராய்ட் உள்ளவர்கள் செய்யக்கூடாதவைகள்:
நீங்கள் தைராய்ட் நோய்க்கான மருந்துகளை எடுத்துக்கொள்ளும்போது, மற்றவகை மருந்துகளை மருத்துவர் அறிவுரையில்லாமல் எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உங்கள் உடம்பிலுள்ள சுரப்பி நொதிகளுக்கு பாதிப்பேற்படுத்தும்.
பட்டாணி, முட்டைகோஸ், சோயா பீன்ஸ், பர்க்கோலி, கடுகு, காலிஃப்ளவர், காலே போன்ற உண்வுகள் காரீய உப்புக்கள் நமது உடலில் சேராமல் செய்துவிடுவதால், தைராய்ட் அளவு கூடிவிடும்.
இந்த பழக்கங்கள் உள்ளவர்கள் உடலில் சுரக்கும் வேதிப்பொருட்கள், தைராய்ட் சுரப்பிகளை பாதித்து செயல் படாமல் செய்துவிடும்.
மூலப்படங்கள் ஸ்பைஸ்4லைஃப், தி ஜப்பான் டைம்ஸ், ஆர்திரிடிஸ் ஃபௌண்டேஷன், மைன்ட் பாடி கிரீன், ஹெல்த் அவேர்னஸ் கம்யூனிடி, ச்க்ஸ்ஸ் மேகஸின், புஸினஸ் இன்ஸைடர், பேமுகா ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது
COMMENTS (0)