Home / Weight Loss Tips in Tamil / உங்கள் கைகள் ஒல்லியாகத் தெரிய ஐந்து வழிகள்
நாம் சிறிது குண்டாக இருக்கும் போது, நமது தோற்றம் குறித்த கவலை நமக்கு வருமது இயல்பு. குளிர்காலத்தில், உடலை முழுவதுமாக மூடும் ஸ்வெட்டர், கோட்ஸ் போன்றவற்றை உபயோகிப்பதால், அவை நமது கைகள் வெளியேதெரியாமல் மூடுகின்றன. ஆனால், கோடையில் என்ன செய்வது? கோடையில் அணியும் இலகுவான ஆடைகளால், உங்கள் கைகளின் மேற்பகுதி முழுவதுமாக வெளியே தெரிய வாய்ப்புள்ளது. நமது மேற்கைகள் குண்டாக வெளியே தெரியாமலிருக்க என்ன செய்வது?
கவலை வேண்டாம்! இங்கே உங்கள் மேற்கைகள் ஒல்லியாகவும், ஒயிலாகவும் தெரிய, சில குறிப்புகள்.
Table of Contents
உங்கள் மேற்கைகள் குண்டாக வெளியே தெரியாமலிருக்க, நீங்கள் முக்கால் கை இரவிக்கை அணிவது உபயோகமானது. அரைக்கை மற்றும் கையில்லா இரவிக்கை அணியும்போது, உங்கள் மேற்கைகள் குண்டாகத் தெரிந்து மற்றவர்கள் கவனத்தை ஈர்க்க வாய்ப்புள்ளது. இன்றைய காலகட்டத்தில், முக்கால் கை இரவிக்கை அணிவது வழக்கத்தில் உள்ளது என்பது உங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாகும். இரவிக்கை, டி-ஷர்ட், கோட் எதுவாக இருப்பினும் முக்கால் கை அளவில் அணிவது, உங்கள் தோற்றத்தை சீராக்கி, புதுப்பொலிவை தரும். கழுத்துப்பகுதி மற்றும் தோள்பகுதிகளில் என்பிராய்டரி மற்றும், ஒப்பனைப்படங்கள் நிறைந்த இரவிக்கைகளையும் அணியலாம். இந்தி நடிகைகள் இராணி முகர்ஜி, ஷோனாக்ஷி ஷின்ஹா போன்றவர்கள் அணிவது போல அணியலாம்.
நாம் செய்யும் மிகப்பெரிய தவறு, இறுக்கமாகிவிட்ட நமது பழைய ஆடைகளை, விட மனமில்லாமல், அணிந்துகொள்வதுதான். அப்படிச் செய்வதால், தொப்பை மற்றும் மேற்கைகள் குண்டாக வெளியே தெரியும். எனவே, இறுக்கமான, பொருத்தமில்லாத உடைகளைத் தவிர்க்க வேண்டும். நமது உடைகள் நமது உடற்பாகங்களுடன் சரியாகப் பொருந்துபவையாக இருக்க வேண்டும்.
பொதுவாக, விதவிதமான அச்சுக்கள் பொறித்த உடைகளை அணிவதில் யாருக்கும் எந்த தயக்கமும் இல்லை. ஆனால், உங்கள் கைகள் ஒல்லியாகத்தெரிய வேண்டுமெனில், நீங்கள் அச்சுப்பொறித்த உடைகளை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். பெரிதாகவும், தடித்த அளவிலும் அச்சுக்கள் பொறிக்கப்பட்ட உடைகளை விட, சிறிய அச்சுக்கள் பொறிக்கப்பட்ட உடைகளே உங்களுக்கு பொருத்தமானது. கிடைநிலை கோடிட்ட (குறுக்குக் கோடுகள்) உடைகளை அறவே தவிர்க்கவும். மேலுடை மற்றும் கீழ்பகுதியில் அணியும் பேண்ட் போன்றவை ஒரே நிறத்தில் இருந்தால், நமது அங்கம் ஒல்லியாகத்தெரிந்து, கவர்ச்சியாக காட்சியளிக்கும்
கோடையில், முழுக்கை ஆடைகளை அணிவது சிரமமானது என்றாலும், பெரிய மற்றும் அகலமான கைகள் உடைய ஆடைகள் நமது தோற்றத்தை பாதுகாக்கும். கிமோனோ, லாங் பட்டர் மற்றும் பெல் வகை கைகள் வைத்த உடைகள், ஒல்லியான, வசிகரமான தோற்றத்தை தரக்கூடியவைகள். போன்சோ, கஃப்தான் சூட்ஸ் களும் உங்கள் தோற்றத்திற்கு எழிலூட்டும். இழைப்பின்னல் மற்றும் வலைப்பின்னல் வைத்து தைக்கப்பட்ட உடைகளும் குண்டான தோற்றத்தை சரிசெய்யும்.
குண்டாக இருப்பவர்கள், அழுத்தமான நிறமுள்ள உடைகளை அணிவது, ஒல்லியான தோற்றத்தை தரும் சிறந்த வழி என ஆடை வடிவமைப்பாளர் நீடா லுல்லா தெரிவிக்கிறார். சிறிய வெடிப்புகள் உள்ள (puffed) இரவிக்கை மற்றும் ஆடைகளை தவிர்க்கவும்.இலேசான உடைகளை அணிவது ஒல்லியான தோற்றத்தை தரும். நீங்கள் நிற்கின்ற மற்றும் உட்காருகின்ற பாங்கும் கூட ஒல்லியான தோற்றத்தை தரலாம். உதாரணமாக, உட்காரும்போது, கைகளை கட்டிக்கொண்டு, இடுப்போடு ஒட்டியவாறு முக்கோண வடிவில் அமர்வது ஒல்லியான தோற்றத்தை தரும்.
மூலப்படங்கள் போட்டிக் சாரீஸ்.காம், தி லூம் இன், பின்டெரெஸ்ட், யூ டியூப், சல்வார் டைம்ஸ்.காம், பாலிவுட் லைஃப் . காம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.
COMMENTS (0)