பக்கவாதத்திற்கான (ஸ்ட்ரோக்- இதயநோய்) வருவதற்கான ஒன்பது அறிகுறிகள்

Spread the love

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு வயது வித்தியாசமின்றி இதய நோய்க்கான பக்கவாதத்தால் தாக்கப்படுகிறார்கள்.  வயதானவர்கள், முதியோர்கள் மட்டுமே பக்கவாதத்தால் பாதிக்கப்படுவார்கள் என்ற காலம் போய்விட்ட்து. இப்பொழுது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.  இரத்த அணுக்களின் செயல்பாட்டினைப் பொறுத்து, பெண்மைச்சுரப்பிகளின் அளவுகள் மாறுபடும். இரத்த அணுக்களின் முறையற்ற செயல்பாடு, இரத்தம் கட்டுதல், அணுக்கள் சிதைதல், ஆகியவற்றை ஏற்படுத்தி, இரத்தம்  மூளைக்குச் சீராக செல்ல இயலாத நிலையை உருவாக்கும்.  பக்கவாதம் சரியான நேரத்தில் கவனிக்கப்பட்டு உரிய மருத்துவம் செய்யப்படாவிட்டால், மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.  

உங்கள் உடலில் இந்த தாக்கம் ஏற்படப்போகிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் உங்களுக்கு தெரியப்படுத்திவிடும்.  அதனை கவனித்து செயல்பட்டால், நீங்கள் அபாயத்திலிருந்து தப்பிவிடலாம்.

 

1)வாய் முணுமுணுப்பது:

ஒருவர் பேசுவதற்கு திடீரென சிரமப்பட்டாலோ, வாய் குளறினாலோ, மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டு, மூளையின் தகவல் தொடர்பு பிரிவு தாக்குதலுக்கு உள்ளாகி, விரைவில் அவருக்கு பக்கவாதம் வரப்போகிறது, என்று அர்த்தம்.  இது பேச முடியாத மற்றும் புரிந்து கொள்ளவும் முடியாத ஒரு செயலற்ற நிலைக்கு கொண்டுவிடும். நீங்கள் உடனே மருத்துவரை அழைக்க வேண்டும்.  

 

2)கைகள் சோர்வடைதல்:

க்கவாத்ததால் தாக்கப்படும் முன் ஒரு பக்க உடல் மிகச் சோர்வாகவும், கைகளை உயர்த்த இயலாமலும் இருக்கும்.  உடனே உரிய மருத்துவம் செய்தால், உடல் பாதிக்கப்படாமல் தப்பலாம்.

 

3) மயக்கமடைதல்:

தலைக்கு செல்லவேண்டிய  ஆக்ஸீஜன் அளவு குறையும் போது அல்லது செல்லாத போது, மயக்க நிலை ஏற்படும். நிலைமை மோசமாவதற்குள், உடனே கவனித்து உரிய மருத்துவம் செய்யவேண்டும்.

 

4)தாங்க முடியாத தலைவலி வருதல்:

ஒருவருக்கு தலைவலி வருவதற்கு பல காரணங்களுண்டு.   பக்கவாதம் வரும் முன் வரும் தலைவலி மிக கொடுமையானதாகவும், பொறுக்க முடியாத அளவிலும் இருக்கும்.   இது உங்கள் உடல், பக்கவாதம் வரப்போகிறதென்பதை உங்களுக்கு தெரிவிக்கும் ஒரு சைகை ஆகும் வேறு சில உடல் உபாதைகளாலும் தலைவலி வரக்கூடும். அதனால், மூளை செயலிழந்து போகும் வாய்ப்பும் அதிகம்.

 

5)முழுங்குவதற்கு சிரமப்படுதல்:

ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு 600 முறை தனது எச்சிலை விழுங்குகிறான்.   திடீரென விழுங்குவதில் சிரமம் ஏற்பட்டால், அது பக்கவாதம் வருவதற்கான அறிகுறியாகும்.   

 

6)விக்கல்:

விக்கல் ஆரம்பத்தில் இரசிக்கும் செயலாக இருந்தாலும், தொடர்ச்சியாக வந்து வயிறு வலிக்கும் நிலையில் நிறுத்த முடியாமல் விக்கல் வருவது பக்கவாத இதய நோய்க்கான ஆரம்ப அறிகுறியாகும்.

 

7)தெளிவற்ற பார்வை:

பக்கவாத இதய நோய் பாதிப்புக்குள்ளாகும் போது, உங்கள் மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் தடைபடுகிறது.இது பின்மண்டையை பாதிக்கிறது.  பின்மண்டையில் உள்ள “லோப்” பழுதாகி பார்வையை பாதிக்கிறது. இதனால், தெளிவற்ற பார்வையும், மோசமாக பாதிக்கப்பட்டால், ஒரு கண் தெரியாமல் போவதும் நடக்கும்.  

 

8)மூச்சின் நீளம் குறைதல்:

நுரையீரல் பாதிக்கப்பட்டு சுவாசம் நிலையற்றுப் போய், மூச்சுக்காற்றின் நீளம் குறையும்.    இதயத்திற்கு செல்லவேண்டிய இரத்தஓட்டம் தடைபட்டால், இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டு சுவாசம் சீராக இல்லாமல் தடை படும்.  மூச்சுவிட சிரமப்படுவார்கள்

 

9)குமட்டல்:

வயிற்றில் உபாதைஏற்பட்டு குமட்டல், வாந்தி எடுக்கத் தோன்றுவது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், அதுவும் உங்களுக்கு இதய நோய்க்கான பக்கவாதம் வருவதற்கான அறிகுறியாகும்.  சிறிய அளவிளான இதய நோய்க்கான பக்கவாதத்திற்கு, குமட்டல் ஒரு அறிகுறியாகும்.

மூலப்படங்கள் விக்கிமீடிய காமன்ஸ், பிக்ஸாபே, மேக்ஸ் பிக்ஸெல், பிக்ஸ்னியோ, ஸ்காட் கோரேகானோ, ஃப்க்ஷியர் ஃப்ளிக்கர் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன