Home / Women Health Tips in Tamil / சிறு நீரகக்கற்கள் – தோன்றுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகள்
சிறுநீரகக்கற்கள் பொதுவாக பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக வருகின்றது. இதனால், உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும், தாங்கமுடியாத வலியினை ஏற்படுத்திவிடும் என்பதால், இதை ஆரம்பத்திலேயே கவனித்து குணப்படுத்துவது நல்லது. ஆக்ஸலேட், பாஸ்பேட் மற்றும் அமில உப்புக்கள் சேர்ந்து உருவாகும் இக்கற்கள் கிரிஸ்டல் வடிவில் சிறிய வடிவில், வெவ்வேறு அளவில் இருக்கும். இவை சிறுநீர்க்குழாயில் அடைப்பு ஏற்படுத்தி வலியுண்டாக்கும் வரை , இக்கற்கள் இருப்பதை நாம் உணர முடியாது.
அதனால், சிறு நீரகக்கற்கள் தோன்றுவதற்கான காரணங்கள், அறிகுறிகள் மற்றும் வீட்டு வைத்திய முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
Table of Contents
சிறுநீரகக்கற்கள், சிறுநீர்க்குழாயில் அடைப்பு உண்டாக்கும் வரை, அவை இருப்பது தெரியாது. தொற்றினால் வரும் ஜுரம், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல், சிறுநீர்க் கழிக்கும்போது எரிச்சல் உண்டாதல், வாந்தி, குமட்டல், சிறுநீரில் இரத்தம் கலந்து வெளியாதல், அடி வயிற்றிலும், முதுகின் கீழ்ப்புறத்திலும் வலி உண்டாதல், அவசரமாக சிறுநீர் கழிக்கத் தோன்றுதல் ஆகியவை சிறுநீரகத்தில் கற்கள் தோன்றுவதற்கான அறிகுறியாகும்.
சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதற்கு குறிப்பிட்ட காரணங்கள் எதுவுமில்லை. சராசரியாக ஒருவர் தினமும் அருந்தவேண்டிய நீரின் அளவு குறைதல், சாப்பாட்டில் அதிக அளவு புரதம் மற்றும் சர்க்கரை சத்துக்களை சேர்த்துக்கொள்ளல், தொப்பை, குடற்புண் அறுவை சிகிச்சை, சிறு நீர்க்குழாயில் தொற்று ஏற்படுதல், ட்யூரடிக்ஸ் போன்ற மருந்துகளை உட்கொள்வது போன்ற காரணங்களால் ஒருவருக்கு சிறுநீரகக்கற்கள் உண்டாகக் கூடும்.
சிறுநீரகக் கற்களை சரியான நேரத்தில் கண்டறிந்து அகற்றுவதால், வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்றவற்றை தவிர்க்கலாம். நீங்கள் கீழ்க்கண்ட வீட்டு வைத்திய முறைகளை முயற்ச்சிக்கலாம்.
ஓமத்தில் அசிட்டிக் அமிலங்கள் மற்றும் சில வேதிப்பொருட்கள் இருப்பதால், சிறுநீரகக் கற்களை உடைத்து, கரைந்து போகச் செய்யும் ஆற்றல் கொண்டுள்ளது. கற்கள் உருவாவதைத் தடுக்கும் காரணிகளும் அதில் உண்டு. தினமும் ஒரு தேக்கரண்டி ஓமச் சாறு அருந்துவதால், சிறு நீரகக் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
மாதுளம் பழத்தில் துவர்ப்புச் சத்தும், ஆக்ஸிஜன் வெளியேற்றத்தடுப்பான்களும் அதிகமாக உள்ளதால், சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தடுப்பது மட்டுமல்ல, சிறுநீர் சிரமமின்றி வெளியேறவும் உதவுகிறது. மாதுளம்பழத்தின் உள்ளிருக்கும் விதைகளை அப்படியே உண்டாலும், சாறு பிழிந்து அருந்தினாலும், இப்பழத்தின் முழுப்பலனை பெறலாம்
டாண்டேலியன் உடலில் பித்தத்துகள் எண்ணிக்கை அதிகமாவதற்கும், உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேறுவதற்கும் பயன்படுகிறது. தினசரி மூன்று அல்லது நான்கு கோப்பை டாண்டேலியன் தேநீர் அருந்துவது, சிறுநீரகக் கற்கள் உருவாவதை தடுக்கும் வழியாகும்.
செலரி என்னும் ஒருவகை செடியின் சாற்றை தினமும் அருந்துவதால், சிறுநீர் தாராளமாக வெளியேறும், சிறுநீரகத்தில் கற்களும் உருவாகாது. தினமும் ஒரு கோப்பை செலரி சாறு அருந்துவது, கற்கள் உருவாவதை தடுக்கும்.
கோதுமைப்புல் சிறுநீரகக் கற்கள் எளிதாக வெளியேற வகை செய்கிறது. சிறுநீர்க்குழாயில் உப்பு மற்றும் கனிமங்கள் சேர்வதை இது தடுக்கிறது. தினமும் ஒன்றிரண்டு கோப்பை கோதுமைப்புல் சாறு அருந்துவது சிறுநீரகக் கற்கள் உண்டாவதை தடுக்கும்.
மேற்கண்ட வைத்திய முறைகள் பலனளிக்காவிடில், நீங்கள் மருத்துவரை நாடலாம். டாம்சுலோசின் போன்ற மருந்துகள் சிரமமின்றி சிறுநீர் கழிக்க உதவும். இதனுடன், சில வலி நிவாரணி மாத்திரைகள் மற்றும் குமட்டலை தடுக்கும் மாத்திரைகளை உட்கொள்வது கற்கள் உடைந்து வெளியேற உதவும். இதற்கும் அடங்காத வலி மற்றும் தொல்லைகள் இருந்தால், அறுவை சிகிச்சை சிய்துகொள்வதொன்றே வழியாகும்
மூலப்படங்கள் விக்கிமீடியா காமன்ஸ், பிக்ஸாபே, மற்றும் பொது இணையதளங்கள் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.
COMMENTS (0)