5 வெவ்வேறு ஸ்டைல்களில் உங்கள் லெஹெங்கா துப்பட்டாவை அணியும் முறைகள்

Spread the love

இந்திய பெண்களின் மிக விருப்பமான பாரம்பரிய உடைகளில் ஒன்று லெஹெங்கா ஆகும். அதை எடுத்து செல்லுதல் சுலபமாக இருப்பதாலும், புடவை அணிவதை விட நீங்கள் இதில் இருக்கும் பொழுது இலகுவாக உணர்வதாலும் பெண்கள் பெரும்பாலும் லெஹெங்காவை கல்யாண விசேஷங்களுக்கு அணிகின்றனர். கல்யாண மணப்பெண் ஆகட்டும், கல்யாணத்திற்கு செல்லும் விருந்தாளி ஆகட்டும் அனைவரின் முதல் விருப்பம் இது தான். ஒரே வித்தியாசம் மணப்பெண்ணின் லெஹெங்கா மற்ற பெண்களின் லெஹெங்காவை விட ஆடம்பரமாக, அதிக வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும்.

நீங்கள் லெஹெங்கா அணியும்போழுது, வெவ்வேறு விதமாக உங்கள் துப்பட்டாவை ஸ்டைலாக அணிந்து வித்தியாசமான தோற்றத்தில் வலம் வரலாம்:

 

1.புடவை அணியும் முறை

உங்கள் துப்பட்டாவில் கொசுவம் வைத்து ஒரு முனையை உங்கள் இடது தோள்பட்டையின் சற்று கீழே பின் செய்துக் கொள்ளவும். மற்றொரு முனையை உங்கள் பின்புறத்திற்கு கொண்டுச் சென்று உங்கள் இடை அருகில் செருகி பின் செய்துக் கொள்ளவும்.இப்பொழுது தோள்பட்டையில் பின் செய்த இடத்திற்கு கீழே உள்ள கொசுவத்தை விரித்துக் கொள்ளலாம். இம்முறையில் நீங்கள் புடவை அணிந்திருப்பதை போல் தோற்றமளிப்பீர்கள்.

 

2.முன்புற முந்தானை குஜராத்தி ஸ்டைல்

துப்பட்டாவில் கொசுவம் வைத்து ஒரு முனையை பின் புறமாக முன்னே கொண்டு வந்து தோள்பட்டையில் பின் செய்யவும். மற்றொரு முனையை பின்புறமாக இடுப்பு பகுதிக்கு கொண்டு வந்து லெஹெங்காவிற்குள் செருகவும். இப்பொழுது முன் புறமாக தொங்கும் துப்பட்டாவின் நுனியை பின்புறம் கொண்டுச் சென்று இடையில் லெஹங்காவுடன் பின் செய்யவும்.

 

3.ஜாக்கெட் போன்று அணியும் முறை

துப்பட்டாவை மாலை போல், இரு முனைகளும் முன் புறம் நடுவில் தொங்குமாறு அணியவும். இப்பொழுது பின் புறமாக துப்பட்டாவை இழுத்து ஜாக்கெட் போல் அணியவும். இம்முறையில் அணியும் பொழுது மிக அழகாகவும், பாரம்பரிய தோற்றத்திலும் காட்சியளிப்பீர்கள்.

 

4.‘V” வடிவில் அணியும் முறை

உங்கள் துப்பட்டாவின் ஒரு முனையை தோள்பட்டையில் பின் செய்யவும். இப்பொழுது ஆழமான ‘V’ வடிவத்தில் தொங்குமாறு செய்துக் கொண்டு மற்றொரு முனையை இன்னொரு தோள்பட்டையில் பின் செய்யவும். பின்புறத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் துப்பட்டாவை இடுப்பு பகுதி லெஹெங்காவுடன் பின் செய்துக் கொள்ளவும்.

 

5.பெங்காலி புடவை அணியும் முறை

பெங்காலி பெண்கள் பெரும்பாலும் விசேஷங்கள் மற்றும் விழாகாலங்களில் இவ்வாறு அணிவது வழக்கம். துப்பட்டாவை கொசுவம் வைத்து தோள்பட்டையில் பின் செய்யவும். துப்பட்டாவின் முனையை பின்புறமாக கொண்டுச் சென்று இடுப்பு பகுதியில் உள்ள லெஹெங்காவுடன் பின் செய்யவும். மற்றொரு முனையை முன்புறமாக கொண்டுவந்து மற்றொரு தோள்பட்டையில் பின் செய்துக் கொள்ளவும்.

 

Click below to watch all these styles of draping: 

Image source- POPxo, facebook

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன