ஆரோக்யமான கூந்தலைப் பெற 7 பயனுள்ள யோகாசனங்கள்:

Spread the love

உங்கள் கேசம் உதிர தொடங்கி விட்டதா? நீங்கள் எப்பொழுதும் இருப்பதைவிட வயாதானவர் போல தோற்றம் அளிப்பதாக தோன்றுகிறதா?  ஆரோக்யமான உணவுடன் கூடிய முறையான யோகா உங்கள் கேசம் உதிரும் பிரச்னைக்கு தீர்வை அளித்து, உங்கள் கூந்தல் நல்ல ஆரோக்யமாகவும், மினுமினுப்புடனும் காட்சியளிக்க உதவும். உங்கள் செரிமான சக்தியை அதிகரிக்கக் கொடிய ஆசனங்கள் நிறைய உள்ளன. அவை உங்கள் உச்சந்தலையின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவும். அவை உங்கள் கேசத்திற்கு ஊட்டமளித்து நல்ல ஆரோக்யமான கூந்தலை அளிக்கிறது.

 

1.வஜ்ராசனம்

வஜ்ராசனம் மற்ற ஆசனங்களை விட வித்யாசமானது. ஏனெனில் இந்த ஆசனத்தை உணவு உண்ட பின்னும் செய்யலாம், ஆனால் மற்ற ஆசனங்களை வயிறு நிறைந்து இருக்கும் பொழுது செய்யக் கூடாது. இந்த ஆசனம் செய்யும் பொழுது, தலையை முன்னோக்கி குனிவதால் உங்கள் தலையில் உள்ள இரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் இந்த ஆசனம் சிறுநீரக பிரச்னைகளை தீர்க்கவும், எடையை குறைக்கவும், செரிமானத்தை அதிகரிக்கவும் மிகவும் உதவுகிறது. செரிமானத் திறன் அதிகரிக்கும் பொழுது, நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்து கிடைக்கிறது. இது முடி உதிர்வதை குறைத்து முடியின் ஆரோக்யத்தை பேணி காக்கிறது.

 

2.கபாலபாதி பிராணாயாமம்

இந்த ப்ராணாயமம் வகையானது உங்கள் மூளை செல்களுக்கு பிராணவாயுவை அதிகமாக செலுத்த உதவுகிறது. அதனால் உங்கள் நரம்பு மண்டலத்திற்கு நன்மை அளிக்கிறது. இது உங்கள் உடலில் உள்ள நச்சு பொருட்களை வெளியேற்றி, உடல் எடையை குறைக்கிறது. கபாலபாதி ப்ராணாயமம் உங்கள் இரத்த ஓட்டம், மெட்டபாலிசம் இரண்டையும் அதிகரிப்பதால், முடி உதிர்வது தடுக்கப் படுகிறது.

 

3.சவ்ரங்காசனம்

 இந்த ஆசனம் தைராய்ட் சுரப்பியை வலுப்பெற செய்து அதன் மூலம் சீரான சுவாச அமைப்பு, ஜீரண மண்டலம், இனப்பெருக்க அமைப்பு மற்றும் நரம்பு மண்டலம் ஆகியவற்றை அளிக்கிறது. இந்த ஆசனம் செய்யும் பொழுது உங்கள் தலை நிலத்தை நோக்கி குனிந்து இருப்பதால், தலைக்கு போகும் இரத்த ஓட்டத்தை அதிகரித்து கேசத்தை பளபளப்பாக்குகிறது.

 

4.பவன்முக்தாசனா

இந்த ஆசனம் ஜீரண சக்தியை அதிகரித்து வாயு தொந்திரவிலிருந்து விடுதலை அளிக்கிறது. இதை முறையாக தினமும் செய்வதனால், கீழ்புற பின் முதுகின் தசைகள் வலுப்பெற்று, வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. சரியான ஜீரண அமைப்பு, நல்ல ஓட்டத்தை அளிப்பதால், ஆரோக்யமான கூந்தலுக்கு வழி வகுக்கிறது.

 

5.அதோமுக் ஷாவாசனா

இந்த ஆசனத்தில் கழுத்து பகுதி கீழ் நோக்கி வளைவதால், தலைக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. மேலும் இந்த ஆசனம் சைனஸ், ஜலதோஷம் போன்றவைகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. இதை தவிர இந்த ஆசனம் மன அழுத்தம், மன உளைச்சல், தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வளிக்கிறது.

 

6.மத்ஸ்யாசனா

இந்த ஆசனம் செய்ய உடலை மீன் போல் வளைக்க வேண்டும். யோகாவின் ஒரு பிரிவான ஹடா யோகாவை சேர்ந்தது இந்த ஆசனம். இந்த ஆசனத்தை வெறும் வயிற்றில் தான் செய்ய வேண்டும். உங்கள் தலைக்கு கீழ் உள்ள உடல் பாகம் முழுவதுமாக முதுகுபுறமாக வளைக்கப்பட்டு, தலையும் வளைவதால், கழுத்து, தோள்பட்டை, தொண்டை, தலை பகுதிகளுக்கான ரத்த ஓட்டம் அதிகரித்து, கேசத்திற்கும் ஆரோக்யத்தை அளிக்கிறது.

 

7.உத்தனாசனா

இந்த ஆசனம் செய்யும் பொழுது, உடல் முன் நோக்கி வளைவதால் உடலின் மேல்பாகத்தில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் முடி கொட்டுவது கட்டுப்பட்டு கூந்தலின் ஆரோக்யமும் அழகும் கூடுகிறது. தலையை குளிர்ச்சியாக்கி, மூளை ஏற்படும் அழுத்தத்தை குறைத்து கூந்தலின் தரத்தை உயர்த்துகிறது.

 

Image Source: www.wikipedia.org

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன