Search

Home / Travel Guide And News in Tamil / உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் செல்ல வேண்டிய 5 வன சரணாலயங்கள்

உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் செல்ல வேண்டிய 5 வன சரணாலயங்கள்

Subhashni Venkatesh | ஆகஸ்ட் 17, 2018

நீங்கள் உங்கள் குழந்தைகளை நீண்ட வார இறுதி விடுமுறை அல்லது குறுகிய விடுமுறைகளுக்கு எங்கு அழைத்துச் செல்வது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், இதோ நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் செல்ல  வேண்டிய சில வன சரணாலயங்கள் இங்கே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. விலங்குகளை அதற்கான இயற்கை சூழலில் சுதந்திரமாக உலா வருவதை காண்பது, உங்கள் குழந்தைகளுக்கு கண்டிப்பாக ஒரு மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். மேலும் இந்தியாவில் காணப்படும் பல வகையான  தாவற மற்றும் விலங்கு இனங்களை பற்றி அறிந்துக் கொள்ள இந்த பயணம் ஒரு நல்ல வாய்ப்பளிக்கிறது.

 

1.சுந்தர்பன் தேசிய பூங்கா, மேற்கு வங்காளம்  

உங்கள் குழந்தைகளுக்கு, மிக்க புகழ்பெற்ற வங்காள புலிகளை காண்பிக்க வேண்டுமென்று நீங்கள் நினைத்தால், நீங்கள் செல்ல வேண்டிய இடம் சுந்தர்பன். இந்த தேசியபூங்கா 270 புலிகளுக்கான புகலிடமாகும். இது எவ்வளவு பெரிய எண்ணிக்கை இல்லையா? இதை தவிர சுவாரஸ்யமான பேய் கதைகள், மண் வீடுகள், முதலைகள் ஆகியவற்றிற்கும் சுந்தர்பன் பெயர் பெற்றது. இங்குள்ள விடுமுறை தீவு, குரைக்கும் மான்களுக்கும், பரத்பூர் முதலைகளின் வளர்ப்பு பண்ணைகளுக்கும் பெயர் பெற்றது. 500 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு விரிந்துள்ள இந்த தேசிய பூங்காவை நீங்கள் படகில் சென்றடைய வேண்டும். படகு சவாரியை அனுபவித்துக் கொண்டே இந்த தேசியபூங்காவை அடையும் நீங்கள் அங்குள்ள போன்பீபி கோவிலுக்கு சென்று  அங்கு வசிக்கும் மக்களை புலிகளிடமிருந்து காக்கும் தெய்வத்தை தரிசிக்கலாம்.

 

2.ரன்தம்போர், ராஜஸ்தான்

வனவிலங்குகளையும், காடுகளையும் புகைப்படம் பிடிப்பதில் மிக்க ஆர்வமுடையவர் நீங்களென்றால் ரன்தம்போர் வன சரணாலயம் உங்களுக்காக எண்ணற்ற அற்புதமான காட்சிகளையும், விலங்குகளையும் உள்ளடக்கி வைத்திருக்கிறது. நீங்கள் ஒரு ஜீப் அல்லது கான்ட்டர் வாகனத்தை எடுத்துக்கொண்டு அதில் அடர்ந்த காட்டினுள் கம்பீரமான வங்காள புலியை தேடி செல்லலாம்.

1,344 சதுர கிலோமீட்டர் பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயத்தில் ஒரு ஏரியும், அடர்ந்த காட்டினுள் ஒரு கோட்டையும் உள்ளது. திடீரென அங்கு மூர்க்கமான ஒரு புலி உலா வருவதை காணும் பொழுது ஒரு நொடி இதயம் துடிக்க மறந்தால் ஆச்சரியமில்லை. இங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து வருவது அவர்களுக்கு ஒரு ஆச்சரியமான, பரபரப்பூட்டுகின்ற அனுபவமாக இருக்கும். இந்த பயண முடிவில் அவர்கள் மிகச் சிறந்த நினைவுகளோடு திரும்புவார்கள் என்பதில் சந்தேகமில்லை. சரளை கற்கள் நிறைந்த பாதையும், இந்த சரணாலயமும் நகரத்திலிருந்து சற்று தொலைவில் அமைந்துள்ளது. அப்படியிருந்தும் பல சுற்றுலா பயணிகளையும், வனவிலங்கு புகைப்பட ஆர்வலர்களையும் இது தன்பால் ஈர்க்கிறது.

 

3.ஜிம் கார்பெட், உத்தர்கன்ட்

வங்காள புலிகளை காணக்கூடிய மற்றொரு இடம் ஜிம் கார்பெட் சரணாலயம். அங்கு சிறுத்தைகள், காட்டு யானைகள், எண்ணற்ற தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றை காணலாம். உத்தர்கன்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஜிம் கார்பெட் சரணாலயம் பல பறவை இனங்களுக்கும் புகலிடமாக உள்ளது. இந்த சரணாலயத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் இதை சுற்றி பார்க்க தாங்கள் விருப்பப்படும் சவாரியை தேர்ந்தெடுக்கலாம். யானை மேல், ஜீப்பில், கான்டெரில் என்று எதில் வேண்டுமென்றாலும் உங்கள் குடும்பத்தினருடன் அல்லது நண்பர்களுடன் சவாரி செல்லலாம். சுற்றுலா பயணிகளை இரவு தங்க அனுமதி அளிக்கும் ஒரே சரணாலயம் ஜிம் கார்பெட் சரணாலயமாகும். இந்த சரணாலயம் இங்கு வரும் சுற்றுலா பயணிகளையும், இங்குள்ள விலங்குகளையும் பாதுகாக்கும் வண்ணம் பல மண்டலங்களாக பிரிந்து செயல் படுகிறது.    

 

4.கிர் தேசிய பூங்கா, குஜராத்

கிர் வன விலங்கு சரணாலயம் ஜுனாகத் நகரத்திலிருந்து 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 411 ஆசிய சிங்கங்களுக்கு உறைவிடமாய் திகழும் இந்த தேசிய பூங்காவிற்கு வருடத்திற்கு 65,௦௦௦ மக்கள் வருகிறார்கள்.  

காட்டு மான், புலி, முதலை போன்றவை உங்களுக்கு அலுத்துவிட்டதென்றால், நீங்கள் செல்ல வேண்டிய ஆசிய சிங்கங்களின் பிரத்யேக புகலிடமான  இந்த தேசிய பூங்கா மல்தாரிஸ் என்னும் மேய்ச்சல்காரர்களால் பராமரிக்கப்படுகிறது. 1,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பூங்காவில் உள்ள வலிமை மிக்க சிங்கங்களை காண சிறந்த நேரம் மழைக்காலம் ஆகும். அங்குள்ள உள்ளூர் வழிகாட்டிகளின் துணையுடன் இக்காட்டில் சிங்கங்கள் பீறுநடை போடுவதை கண்டு களிக்கலாம்.

 

5.பந்திப்பூர் தேசிய பூங்கா, கர்நாடகா

வேடிக்கை, கற்றல் நிறைந்த ஒரு பயண இலக்கை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான இடம் கர்நாடகாவிலுள்ள பந்திப்பூர் தேசிய பூங்காவாகும். உங்கள் குழந்தைகளுடன் இங்கு வந்து அவர்களுக்கு எப்படி புலி, யானை, காட்டெருமை,சிறுத்தை, மான் போன்ற விலங்குகள் தங்களுக்கான இயற்கை சூழலில் வாழ்கின்றன என்பதை விளக்கி காண்பிக்கலாம். கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்கா முன் காலத்தில் மைசூர் மகாராஜாவுக்கு சொந்தமானதாக இருந்தது. 874 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வனவிலங்கு சரணாலயம் ஆசிய யானைகளுக்கான புகலிடமாக உள்ளது. ஆனால் இங்கு சில புலிகளையும் காண முடிகிறது. பந்திப்பூரில் மிக எளிதாக வன விலங்குகள் சுற்றி திரிவதை காண முடிவதால், உங்கள் குடும்பத்துடன் நீங்கள் ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒரு இடமாக உள்ளது.

 

Image source: Wikipedia, Wikipedia Commons

Subhashni Venkatesh

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன