Home / Uncategorized / உங்கள் சமையலறையில் இந்த வாஸ்து குறிப்புகளைக் கொண்டு நல்ல எண்ணங்களை கொண்டு வாருங்கள்!
உங்கள் சமையலறையில் இந்த வாஸ்து குறிப்புகளைக் கொண்டு நல்ல எண்ணங்களை கொண்டு வாருங்கள்!
Nithya Lakshmi | ஆகஸ்ட் 20, 2018
SHARE
ஒரு வீட்டில் சமையலறை என்பது மிக முக்கியமானது – உணவு, ஆயுள், ஆரோக்கியம் மற்றும் வீரியம் ஆகியவையின் மூலம் அது தான். அதனால் இந்த அறை எப்பொழுதும் நல்ல சக்தி நிறைந்து இருப்பது முக்கியமாகும். இதர நடப்பதற்கு நீங்கள் என்ன முயற்சித்தாலும், சமையலறையை வாஸ்து சாஸ்திரத்தின் படி திட்டமிட்டால் ஆக்கபூர்வமான, உண்டுபண்ணுகின்ற நல்ல சக்தி உங்கள் வீட்டை அகலாது.
வாஸ்து சாஸ்திரம் என்பது நிலம், நீர், காற்று,நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்புலன்களையும் சமநிலையில் வைக்கும் அறிவியல். இந்த சமநிலை தான் செழிப்பை வீட்டிற்கு கொண்டு வரும். இங்கே சமையலறையில் எளிதில் பின்பற்ற கூடிய சில வாஸ்து குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன:
சமையலறை சாதனங்களின் இருப்பிடம்
தென்கிழக்கு மூலை அக்னி பகவான் ஆட்சி செய்யுமிடம். எனவே வீட்டின் தென்கிழக்கு மூலையில் தான் சமையலறை இருக்க வேண்டும். அது செய்ய முடியவில்லை என்றால் வடமேற்கு திசையில் வைக்கலாம்.
சமைப்பதற்கு உபயோகப்படுத்தும் சாதனங்கள் அனைத்தும், முக்கியமாக அடுப்பு மற்றும் மின்சார சாதனங்கள், அனைத்தும் தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். அடுப்பு சமையலறையின் வாயிலை பார்த்து இருக்கக்கூடாது.
கழுவும் இடம்,சமையலறை தொட்டி உட்பட, பாத்திரம்கழுவி, தண்ணீர் குழாய் மற்றும் சமையலறை வடிகால் ஆகியவை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் இருக்க வேண்டும். இவை சமைக்கும் அடுப்பில் இருந்து தூரம் தள்ளி இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
இதற்கு ஒரு விதிவிலக்கு தண்ணீர் தொட்டி. தண்ணீர் தொட்டி சமையறையின் வெளியே மேற்கு திசையில் இருக்க வேண்டும். இது நெருப்பு மற்றும் தண்ணீர் சக்திகளுக்குள் ஒரு சமநிலையை கொண்டு வந்து, நல்ல உடல்நலம் மற்றும் செல்வத்தை தரும்.
சமையலறையின் உட்புறம்
சமையலறை தளத்திற்கு பளிங்கு, மொசைக் அல்லது பீங்கான் ஓடுகள் இவற்றுள் ஒன்றை தேர்வு செய்யுங்கள்.
சுவர் துடிப்பான வண்ணங்களான ரோஸ், மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு அல்லது சாக்லேட் நிறங்களில் இருக்குமாறு பார்த்து கொள்ளுங்கள். கருப்பை தவிருங்கள் ஏனென்றால் அது தவறான சிந்தனையை உண்டாக்கும்.
வீட்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர, உணவு தானியங்கள், பருப்புகள் மத்த பொருட்கள் மற்றும் பாத்திரங்களை தெற்கு அல்லது மேற்கு திசையில் வைக்கவும்.
குளிர்சாதனப்பெட்டி, தென்மேற்கு திசையில் இருந்தால், வாழ்வின் தடைகளை எளிதில் கடந்து வீட்டில் அமைதி நிலவும்.
சிலிண்டர் மற்றும் கெய்சர் ஆகியவை தென்கிழக்கு திசையிலும் காற்றை வெளியேற்றும் விசிறி கிழக்கு திசையிலும் இருக்க வேண்டும்.
மேடையை நெரிசல் இல்லாமல் வைத்தால் சமையலறையில் நல்ல சக்தி பரவும்.
சமையலறையை திட்டமிடும் பொழுது நினைவில்
இருக்கவேண்டிய பிற விஷயங்கள்
சமையலறை கழிவறை, குளியலறை, பூஜையறை மற்றும் படுக்கையறையுடன் பொது சுவர் வைத்து இருக்க கூடாது. இந்த அறைகள் எல்லாம் சமையலறைக்கு மேலோ அல்லது கீழோ இருத்தல் கூடாது.
சமையலறையின் கதவு கழிவறையின் கதவையோ அல்லது பிரதான வாயிலின் கதவையோ பார்க்கும் வண்ணம் இருக்க கூடாது.
சமையலறையை கிழக்கு, வடக்கு அல்லது மேற்கு திசையில் இருந்து நுழைய வேண்டும். சமையலறையின் நுழைவை ஓரத்தை விட நடுவில் வைத்தால் நலம்.
கிழக்கில் ஒரு பெரிய ஜன்னல் வைத்தல் வேண்டும்.
சமையலறையில் சமைக்கும் நபர் நுழைவாயிலை பார்க்க முடியாவிடில், ஒரு கண்ணாடி அல்லது பிரதிபலிக்கும் ஓட்டை வைத்து நுழைவாயிலை எல்லா நேரமும் பார்க்கும் வண்ணம் வைக்கலாம்.
இந்த வாஸ்து குறிப்புகளை பின்தொடர்ந்தால், உங்கள் குடும்பத்திற்கு நல்ல ஆரோக்கியம் மற்றும் வளம் கிட்டும்.
COMMENTS (0)