இளம்பருவத்திலேயே ஏற்படும் இளநரையைத் தடுக்க ஆறு எளிய வழிகள்

Spread the love

“இளவயதினருக்கு தலையில் ஒரன்றிரண்டு வெள்ளை முடி இருந்தால், அவர்களை தாத்தா-பாட்டி மிகவும் நேசிக்கிறார்கள் என்று பொருள்”  என்று ஊரில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இருபது-முப்பது வயதிற்குள் வெள்ளைமுடி ஒன்றிரண்டு இருப்பது, பலவாகப் பெருகினால், அது இளம்பிராயத்தினருக்கு ஒரு பயங்கரமான சிம்மசொப்பனம் அல்லவா…?!

தலை நரைப்பதற்கு காரணம், கருமை நிறத்தை வழங்கும் சாயபொருள் தலையில் குறைந்துபோவதுதான்.  இளவயதில் தலை நரைப்பது பொதுவாக, மரபு சார்ந்த விஷயமென்றாலும், தற்பொழுது நம் வாழ்க்கை முறையில் உள்ள மன இருக்கம் மற்றும் அழுத்தங்கள் கூட காரணமாகிறது.  பதறவேண்டாம். உங்கள் தலைமுடி பராமரிப்பிற்கு என்று நேரம் ஒதுக்கவும், அதில் அதிகம் கவனம் செலுத்தவும் இது ஒரு அறிகுறி என்று எடுத்துக்கொள்ளுங்கள்.,

நல்ல வெண்ணெய் உங்கள், தலைலமுடி நரைக்காதிருக்க ஆறு வழிமுறைகளை வழங்குகிறது:

 

1.நெல்லிக்காய்:

இன்றைக்கு சந்தையில் உள்ள, தலைக்கு தேய்த்துக்கொள்ளும் எண்ணெய்களில் பெரும்பாலும் நெல்லிக்காய் தான் முக்கிய மூலப்பொருளாக உள்ளது.  இந்தியாவில் விளையும் நெல்லிக்காய் தலைமுடிக்கு ஒரு சிறந்த பாதுகாப்பாகும். நெல்லிக்காய் தலைமுடியை பாதுகாப்பது மட்டுமல்ல, நல்ல வளர்ச்சியையும், கருமை நிறத்தையும் அளித்து தலைமுடியை பலப்படுத்தி, பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது.  

 

2.நல்லெண்ணெய்:

எள்ளிலிருந்து எடுக்கப்படும் எள் எண்ணெய் என்னும் நல்லெண்ணெய், இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. உணவில் சுவைகூட்டுவது மட்டுமல்லாமல், நல்லெண்ணெய், தலைமுடிக்கும் அதிக பயனைத்தருகிறது. தலைமுடியின் இயற்கையான கருமை நிறத்தை தக்க வைப்பது மட்டுமின்றி, தலைமுடி உதிர்வதையும் தடுக்கிறது.  

 

3.வெங்காயச் சாறு:

இந்தியா முழுவதும் அனைவரும் உபயோகிக்கும் வெங்காயம் இந்திய உணவில் ஒரு முக்கிய பொருளாக உள்ளது.  இதைத்தவிர, வெங்காயச்சாறு, தலைமுடி வளரவும் உதவுகிறது. வெங்காயச் சாற்றில் உள்ள ஊட்டச்சத்து, தலைமுடியின் கணுக்களை பலப்படுத்துவதால், முடி அடர்த்தியாகவும், பலமாகவும் நல்ல மினுமினுப்பாகவும் வளர்கிறது.

 

4.வெந்தயம்:

வெந்தயம் தலைமுடிக்கு நிறைய பலனைத்தரும்.  முடியுதிர்வதைத்தடுப்பது மட்டுமல்லாமல், பளபளப்பாக வைத்திருக்கவும், இளநரையைத் தடுக்கவும் உதவுகிறது.   பழங்காலந்தொட்டே உபயோகத்திலிருக்கும் வெந்தயத்தில் உள்ள சாயப்பொருட்கள், தலைமுடியின் கருமையினை பாதுகாக்கிறது.

 

5.கருவேப்பிலை:

இந்திய உணவுகளில் உபயோகப்படுத்தப்படும் மற்றும்மொரு பிரபலமான பொருளான கருவேப்பிலை இளநரையை தடுக்கும் சக்தி கொண்டது. தலைமுடியின் வேர்களை பலப்படுத்தி, வளர்வதற்கு வழிசெய்கிறது. இளநரையைத் தடுக்கிறது

 

6.தேங்காய் எண்ணை:

தேங்காய் எண்ணையின்றி தலைமுடி பாதுகாப்பு முழுமையடையாது.  இந்தியத்துணைக்கண்டம் முழுவதும், பொதுவாக, தலைமுடிக்கு தேங்காய் எண்ணெயைத்தான் உபயோகிக்கிறார்கள்.  தலைமுடி வளரவும், மினுமினுப்பைக்கூட்டவும், இது அதிகம் உதவுவதால், தலைமுடி ஆரோக்கியம் பெறுகிறது. ஆரோக்கியமான தலைமுடி இளவயதில் நரைப்பதற்கு சாத்தியமின்றி செய்கிறது.  

 

மூலப்படங்கள் யு.எஸ் நியூஸ், ஆர்கானிக் ஃபேக்ட்ஸ்.நெட், மெடிக்கல் நியூஸ் டுடே மற்றும் ஸ்டைல்கிரேஸ்.காம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன