Home / Kids Health Care Tips in Tamil / உடல் மெலிந்த குழந்தைகளுக்கு தேவையான சத்துக்கள் நிறைந்த பதினொரு வகை உணவுகள்
குழந்தைகளின் சீரிய வளர்ச்சிக்கு உணவுகள் இன்றியமையாததாகும். அதனால், நமது குழந்தைகளுக்கு கொடுக்கவேண்டிய உணவுகளை கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். உடலின் நோய் சக்தியை பெருக்கவும், ஆரோக்கியமாக வாழவும், குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளை தருவது அவசியமாகிறது. உங்கள் குழந்தைகள் உடல் மெலிந்து இருந்தால், அவர்களுக்கு எரிசக்தி(CALORIE) நிறைந்த உணவுகளைக் கொடுக்க வேண்டும்.
எடை குறைவாக உள்ள குழந்தைகள்,படிக்கும் பொழுதும், எழுதும் பொழுதும், வெளியில் சென்று விளையாடும் பொழுதும் எளிதில் சோர்வடைந்து விடுவார்கள். அதனால், அவர்களுக்கு சத்து மிகுந்த ஆகாரங்களை அளிப்பது அவர்கள் ஆரோக்கியமாக வாழ அவசியமாகிறது.
தங்கள் குழந்தைகள் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டிய சில பொதுவான, சத்து நிறைந்த உணவுகள்:
Table of Contents
வாழைப்பழத்தில் வைட்டமின் பி12, பி6, இரும்புச் சத்து, பாஸ்பரஸ் எனப்படும் மணிச்சத்து ஆகியவை மிகுந்த அளவில் இருப்பதால், ஒரு நாள் முழுவதும் குழந்தைகளுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. வாழைப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி, பால் கலந்து மில்க் ஷேக் போன்று குழந்தைகளுக்கு கொடுக்கலாம்
நெய்யில் மிக அதிக கொழுப்புச் சத்தும், வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ போன்றவைகளும் இருப்பதால், குழந்தைகள் புத்தி கூர்மை உடையவர்களாகவும், அவர்கள் உடல் ஆரோக்கியமான வளர்ச்சி காணவும் உதவும்
முட்டையில் புரதச்சத்தும், கனிமச் சத்தும் மிகுதியாக உள்ளதால், நோய் தொற்றுகள் அண்டவிடாமல் தடுக்கிறது. முட்டையின் மஞ்சள் கருவில் அதிக எரிசக்தி (CALORIE) இருப்பதால், குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது.
சீஸ் குழந்தைகள் மிக விரும்பி உண்ணும் பொருளாகும். உணவில்சுவை கூட்டுவதற்காகவும், பதார்த்தங்களை அலங்கரிக்கவும் சீஸ் பயன்படுத்தப்படுகிறது. இதில், புரதச்சத்து, உப்புச் சத்து, வைட்டமின் பி 2, பி 12, மணிச்சத்து, நார்ச்சத்து போன்றவை அதிகமாக உள்ளது
உருளைக்கிழங்கு குழந்தைகள் விரும்பும் உணவாகும். உருளையை மசித்தும், வேகவைத்தும், வறுவலாக வறுத்தும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம். மாவுச்சத்து நிறைந்த பொருட்களில், உருளை முதன்மையானது.
மீன்களில், ஓமேகா 3, இஃப்போ புரோட்டின், புரதச் சத்து ஆகியவை மிகுதியாக உள்ளது. இது குழந்தைகள் உடலுக்கு மிகவும் நன்மை தரக் கூடியது
உலர் பழங்கள் குழந்தைகளின் தேக வளர்ச்சிக்கும், அறிவுத்திறன் மேம்படவும் உதவுகிறது. இரவு முழுவதும் நீரில் ஊறவைத்தோ அல்லது பாலோடு சேர்த்தோ பருகலாம் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு இது பெரிதும் உதவுகிறது.
நமது உணவில் ஒருங்கிணைந்திருப்பது பாலாகும். பாலில் கொழுப்புச் சத்து, புரதச் சத்து, வைட்டமின் பி12 ஆகியவை மிகுதியாக உள்ளது. அதிக கலோரிகள் கொண்ட பால், குழந்தைகள் உணவில் முதலிடம் பெரும் பொருளாகும்
அரிசி, திணை, ஒட்ஸ் எனப்படும் புல்லரிசி ஆகியவை குழந்தைகள் உடலுக்கு நன்மை தரக் கூடியது. இதில் நார்ச்சத்து, புரதச் சத்து மற்றும் மாவுச் சத்து அதிகமாக உள்ளதால், குழந்தைகளுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது
வெண்ணெய்ப்பழத்தில் வைட்டமின் பி6,ஈ,சி, கே மற்றும் கொழுப்புச் சத்து அதிகமாக உள்ளது. இதிலுள்ள மிருதுவான வெண்ணெய்ச் சுவையினால், குழந்தைகள் விரும்பி உண்பார்கள்
ஊட்டச்சத்து மிகுந்த பயிரினங்களில் கனிமச் சத்து, இரும்புச் சத்து, மாவுச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. எளிதில் செரிக்கக்கூடியது பொதுவாக குழந்தைகள் இதனை விரும்பமாட்டார்கள். இதனை காய்கறிகளுடன் சேர்த்து சமைத்துக் கொடுத்தால், குழந்தைகள் சுவை மாறுபாட்டை அறியாமல் இதனை சாப்பிட்டுவிடுவார்கள். நீங்கள் சமைக்கும் பொழுதெல்லாம், இந்த சத்தான பயிரினங்களையும் அவற்றின் எரிசக்தி (CALORIE) அளவையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
மூலப்படங்கள் என் பவர் பிளாக், பெஸ்ட் ஹெல்த் மேகஸின் கனடா, அல்ட்டர்னேட்டிவ் டெய்லி, கார்டியன் நைஜீரியா, எல்லி கிரீகர், இக் வூ, இன்ஃபார்மா, இஜென்னஸ், ஹெல்த் கேர் நியூட்ரீசியன், ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஸ்னரி பிளாக், இன்லைஃப் ஹெல்த்கேர், லிவ் ஸ்டிராங், இண்டியா மார்க்ஸ், பிரஸ் இன்ஃபார்மேசன் பெரு ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது
COMMENTS (0)