Search

Home / Women Health Tips in Tamil / மார்பகங்கள் இயல்பாக உறுதியுடன் இருக்க எட்டு வகை வீட்டு வைத்திய முறைகள்

மார்பகங்கள் இயல்பாக உறுதியுடன் இருக்க எட்டு வகை வீட்டு வைத்திய முறைகள்

Nithya Lakshmi | ஜூன் 19, 2018

பெண்களின் உடலமைப்பில், மார்பகங்கள் மிக கவர்ச்சியான முக்கிய உறுப்பு ஆகும்.  பொதுவாக பெண்களுக்கு எட்டு – ஒன்பது வயதில் வளர ஆரம்பிக்கும் மார்பகம், அவர்கள் வயதுக்கு வரும்போது முழுமையாக வளர்ச்சியடைகிறது.  முழுமையான மார்பகம் ஒரு பெண்ணுக்கு அழகை கொடுத்து கவர்ச்சிகரமாக வைத்திருப்பதால், அதனை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியமாகிறது. சிலசமயங்களில், பல்வேறு காரணங்களுக்காக மார்பகம் தொய்வுற்று உடலழகை குலைக்கிறது.  

தளர்ச்சியான, தொய்வுற்ற மார்பகங்களை எடுப்பாகவும், அழகாகவும் மற்றும் கவர்ச்சிகரமாகவும் விளங்கச்செய்யும் சில வீட்டு வைத்திய முறைகளை இங்கே காண்போம்.  

 

1.கேரட் மற்றும் ஐஸ் கட்டிகள்:

இரண்டு கேரட்களை சீவிக்கொள்ளவும்.  சீவிய கேரட்டுடன் இரண்டு மூன்று ஐஸ் கட்டிகளைப்போட்டு துண்டுத்துணியில்  கட்டிவைக்கவும். இதனை மார்பத்தில் இரண்டு அல்லது நான்கு நிமிடங்கள் வைத்திருக்கவும். இதனைத் தொடர்ந்து செய்துவந்தால், மார்பகம் கெட்டிப்பட்டு எடுப்பாகவும், கவர்ச்சியாகவும் தோற்றமளிக்கும்.   

2) வெங்காயச் சாறு:

ஒரு வெங்காயத்தை நறுக்கி சாறு பிழிந்து கொள்ளவும்.  இந்தச் சாற்றினை மார்பகத்தில் தடவிக்கொள்ளவும். இந்த முறையை தொடர்ந்து செய்வதால், மார்பகம் வளர்ச்சி பெற்று எடுப்பாகவும், பொலிவாகவும் இருக்கும்.

 

3.வெள்ளர்க்காய் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு:

வெள்ளரிக்காயை சீவிக்கொண்டு, முட்டையின் மஞ்சள் கருவோடு கலந்து கொள்ளவும்.  இந்தக் கலவையை ஒரு ப்ளாஸ்டிக் கவரில் போட்டு மார்பகத்தின் அடிப்பகுதியில் ஒரு இரண்டு அல்லது  நான்கு நிமிடங்கள் வைத்திருக்கவும். பதினைந்து நிமிடங்களுக்கு ஒருமுறை இதனை தொடர்ந்து செய்துவந்தால், உங்கள் மார்பகம் கெட்டிப்படுவதை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பீர்கள்.

 

4.கற்றாழை:

கற்றாழைச் சாற்றை எடுத்து மார்பகத்தில் தடவிக்கொள்ளவும்.  இதனை தொடர்ந்து செய்துவந்தால், மார்பகம் அழகாகவும் கவர்ச்சியாகவும் விளங்கும்.  

 

5.ஆலிவ் ஆயில்:

உள்ளங்கையளவு ஆலிவ் ஆயிலை எடுத்துக்கொண்டு மர்பகத்தில் நன்றாகத் தடவிக்கொள்லவும்.  கைகளினால் மெதுவாக உருவி விடவும்.  இதனை தொடர்ந்து செய்வதால், மார்பகம் ஆரோக்கியமாகவும், எடுப்பாகவும் இருக்கும்.  

 

6. சரியான அளவுள்ள மார்க்கச்சைகளை (BRA)  தேர்ந்தெடுத்தல்:

அளவுகள் சரியில்லாத மார்க்கச்சைகள் (BRA) மார்பகங்கள் சரியான அளவில் இல்லாமலும், தொய்வடைந்து இருப்பதற்கும் காரணமாகக்கூடும்.  எனவே, மார்க்கச்சைகளை தேர்ந்தெடுக்கும் போது, மார்பகத்திற்கு பொருத்தமான அளவில் பார்த்து வாங்க வேண்டும். பொருத்தமான மார்க்கச்சை, உங்கள் மார்பகத்தை சரியாக தாங்கி  நிற்கும்.

 

7. உங்கள் உடல் எடையைக் குறிப்பது:

உடல் எடை கூடுவதும், மார்பகம் தொய்ந்து போவதற்கு ஒரு காரணம்.  இரு மார்பகத்திலும், கொழுப்பு சேர்வதால், மார்பகம் கீழ் நோக்கி சரிந்து தொங்கிவிடும்.  எனவே, உடல் எடையை அடிக்கடி சரிபார்த்து, சரியான அளவில் பராமரிப்பது, மார்பகம் அழகுற விளங்க அவசியமாகும்.  

 

8) மாதுளம்பழம்:

ஆச்சரியப்படவைக்கும் அளவு, இளமையை தக்கவைக்கும் சத்துக்கள், மாதுளையில் அதிகம் உள்ளது.  மாதுளை விதை எண்ணெயிலுள்ள ஊட்டச்சத்துக்கள் மார்பகத்தை எடுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது.   மாதுளை விதை எண்ணெய் எடுத்து மார்பகத்தில் தடவிக்கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவை இதனை தொடர்ந்து செய்யவும்.  

 

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன