Search

Home / Women Health Tips in Tamil / நீங்கள் அறிய வேண்டிய கருப்பைவாய் புற்றுநோயின் 7 அறிகுறிகள்!

நீங்கள் அறிய வேண்டிய கருப்பைவாய் புற்றுநோயின் 7 அறிகுறிகள்!

Nithya Lakshmi | ஆகஸ்ட் 9, 2018

கருப்பையின் முடிவில் உள்ள கருப்பை வாயில் ஏற்படும் அசாதாரண அணுக்களின் வளர்ச்சியால் கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகின்றது. ஆரம்ப காலங்களில் இந்த புற்றுநோய் தெரிவதில்லை. அதனால் அசாதாரண அணுக்களின் வளர்ச்சியைக் கண்டு அறிந்து அகற்ற பாப் ஸ்மியர் சோதனையை மருத்துவர்கள் எடுக்க வலியுறுத்துகிறார்கள். நிபுணர்களின் கூற்றுப்படி பெண்களின் 21 ஆம் வயதில் இருந்து இந்த சோதனையை எடுக்க வேண்டும். கருப்பைவாய் புற்றுநோயின் முற்றிய நிலை மரணத்தில் கூட முடியலாம். எனவே முன்கூட்டியே அறிந்து கொள்ளல் பெண்களை ஆபத்தில் இருந்து விளக்கி வைக்க உதவும்.

கருப்பை வாய் புற்றுநோயின் அறிகுறிகள் இவை:

 

1.சிறுநீர் கழிக்கும் பொழுது அசௌகரியம்

உங்கள் சிறுநீரின் நிறத்தைக் கொண்டு உங்களது ஆரோக்கியத்தை அறியலாம். சிறுநீர் கழிக்கும் பொழுது எரிதல், சிறுநீர் நிறத்தில் மாறுபடுதல் அல்லது சிறுநீர் கழிக்கும் பொழுது ஏற்படும் வேறு எந்த அசௌகரியத்தையும் அலட்சியப்படுத்தக் கூடாது. புற்றுநோய் திசுக்கள் மற்ற இடத்திற்கு பரவும் காரணத்தினால் கூட அசௌகரியம் ஏற்படலாம். இது தவிர சிறுநீர் குழாய் அல்லது சிறுநீர் பையில் ஏற்படும் தொற்றினால் கூட இந்த அறிகுறிகள் ஏற்படலாம். அதனால் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நலம்.

 

2.மிகுந்த சோர்வு

இது கருப்பைவாய் புற்றுநோயில் கட்டாயம் நடக்கும். உங்களது உடம்பில் இருந்து அசாதாரணமாக ரத்தம் வெளியேறுமானால், ரத்த அணுக்கள் குறைக்கும். இதனால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் குறையும். இது உங்களை பல நாட்களுக்கு சோகையாகவும் மந்தமாகவும் வைக்கும். அந்த மாதிரி நேரங்களில் கருப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என்று பரிசோதித்து கொள்ளுவது நலம்.

 

3.யோனியில் சீழ் வடிதல்

யோனியில் சீழ் வடிதல் சாதாரணம் தான். ஆனால் அடிக்கடி மற்றும் துர்நாற்றத்துடன் வந்தால் அது ஆபத்து. தண்ணீர் மாதிரி, பழுப்பு நிறத்தில், ரத்தத்துடன், துர்நாற்றத்துடன் யோனியில் சீழ் வடிந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய்க்கு இட்டு செல்லும் திசுக்களின் தோற்று என்று அர்த்தம்.

 

4.கடும் எடை இழப்பு

கருப்பை வாய் புற்றுநோயால் திடீர் எடை இழப்பு ஏற்படலாம். எனவே எடையை ஜாக்கிரதையாக கண்காணிக்க வேண்டும். சாப்பிட பிடிக்காவிட்டால், சரியான உணவை உட்கொள்ளாமல் எப்பொழுதும் குமட்டல் உணர்வுடன் இருந்தால் எடை இழக்க வாய்ப்பு அதிகம். குறுகிய காலத்தில் குமட்டலின் காரணமாக அதிக எடை இழப்பு ஏற்பட்டு இருந்தால், கருப்பை வாய் புற்றுநோய் உள்ளதா என்று மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

 

5.அதிக உதிரப்போக்கு

மாதவிடாய் காலத்தில் அல்லது மாதவிலக்கு முடிந்த பிறகு அதிக உதிரப்போக்கு இருந்தாலோ அல்லது கருப்பை வாயில் அரித்தாலோ

அது கருப்பை வாய் புற்றுநோயாக இருக்கலாம். இது தவிர கல்லீரல் கோளாறு, இடுப்பில் அழற்சி அல்லது தைராய்ட் பிரச்சனை இருந்தாலும் அதிக ரத்தப்போக்கு இருக்கும். எனவே இளம் வயதிலேயே மருத்துவரை அணுகி கலந்து ஆலோசித்துக் கொள்ளவும்.

 

6.இடுப்பில் வலி

மாதவிடாய் காலத்தில் இடுப்பில் வலி ஏற்படுதல் பெண்களுக்கு புதிதில்லை என்றாலும், அது வழக்கத்தை விட அதிகமாக இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. அம்மாதிரி வலி மாதவிடாய் காலத்தைத்  நேரத்திலும் வரலாம். ஆபத்தில் இருந்து நிற்க மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்ளுவது நல்லது.

 

7.வாந்தி வருவது மாதிரி தோன்றுதல்

எப்பொழுதும் வாந்தி வருவது மாதிரி தோன்றலாம் அல்லது சரியான செரிமானம் இல்லாமல்  எப்பொழுதும் சோர்வாக இருக்கலாம். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அடிவயிறை நசுக்குவதால் ஏற்படும் நெஞ்செரிச்சல் காரணமாக இது நடக்கலாம். மருத்துவரிடம் கலந்து எந்த காரணத்தினால் குமட்டல் ஏற்படுகின்றது என்று அறிந்து கொண்டால் மத்த உடல் உபாதைகளில் இருந்தும் தப்பிக்கலாம்.

 

பட மூலம்: பிக்ஸாபே, பிக்ஸ்ஹியர், பிலிக்ர், பிக்சல்ஸ், விக்கிமீடியா காமன்ஸ்

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன