Search

Home / Kids Health Care Tips in Tamil / எப்பொழுதும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத ஏழு உணவுகள்

எப்பொழுதும் நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாத ஏழு உணவுகள்

Nithya Lakshmi | நவம்பர் 27, 2018

எல்லா நேரங்களிலும் ஒரு குழந்தை ஆரோக்கியமாக உண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பிற்கு  குழந்தைக்கும் பெற்றோருக்கும் இருவரும் மிக முயற்சிக்க வேண்டும். எப்போதாவது ஒரு முறை பெற்றோர்கள் தாங்கள் என்ன பரிமாறுகிறோம் என்று தெளிவாக தெரிந்து நிபந்தனையின் பேரில், குழந்தைகளை ஆரோக்கியமற்ற உணவுகளை அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். சில உணவுகளை ஆரோக்கியமானதாக இல்லை என்றாலும் உட்கொள்ளலாம், ஆனால் சில வேறு உணவுகள் நிச்சயமாக குழந்தைகளுக்கு தவிர்க்கவேண்டும்.

இங்கே எப்பொழுதுமே எவரும் குழந்தைக்கு ஊட்டக்கூடாத சில உணவுகளின் பட்டியல்.


1.பழரசங்கள்

Fruit Juices Tomatoes Tomato Juice Tomatoes Juice

குழந்தைகளும் பெற்றோர்களும் பழரசங்களை விரும்புவர். அதன் வண்ணமிகு லேபிள்கள், பளிச்சிடும் வண்ணங்கள் மற்றும் மனதை ஆக்கிரமிக்கும் விளம்பரங்கள் அவர்களை மிகவும் ஈர்க்கின்றது. எனினும், பழரசங்கள் மற்றும் அதைப்போன்று வேறு செயற்கை இனிப்பூட்டிய பானங்கள் சக்கரையால் நிறைந்துள்ளது. அவற்றில் ஒரு குழந்தைக்கு பரிந்துரைக்கப்பட்ட தினசரி தேவையான சக்கரை அளவைவிட மிகவும் அதிகமாக இருக்கிறது.

மிக அதிக அளவு சக்கரை கொடுப்பது குழந்தைக்கு நல்லதன்று. பல்வேறு ஆய்வுகள் சக்கரையை பல் சிதைவோடும், இதய பிரச்சனைகள் மற்றும் உடல்பருமன் ஆகியவற்றோடும் தொடர்ப்புபடுத்துகிறார்கள். அது நடத்தை பிரச்சனைகளோடும் கூட தொடர்புடையது.

 

2.பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி முழுவதும் பதனிடு இரசாயனங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு மற்றும் அதிக உப்பு மற்றும் சோடியத்தை உள்ளடக்கியது. பதப்படுத்தப்பட்ட இறைச்சியை(சிக்கன் பாட்டிஸ், பன்றி இறைச்சி, சாசேஜ், போன்றவை) சாப்பிட குழந்தைகளை ஊக்குவிப்பது அவர்களை இருதய பிரச்சனைகளை உருவாக்கவும் மற்றும் எடை சம்மந்தமான பிரச்சனைகளை வாழ்க்கையில் விரைவில் சந்திக்கும் அபாயத்திற்கு உந்துகிறது.

 

3.அதிவெப்பத்தில் பொறித்த (பிளாஷ்-பிரைட்) பிங்கர் உணவு

மீண்டும் அதிவெப்பத்தில் பொறித்த (பிளாஷ்-பிரைட்) பிங்கர் உணவு பதனிடு இரசாயனங்களை கொண்டது மற்றும் நிறைய வேறு பொருட்களும், அவற்றில் பல இயற்கை பொருள் இல்லை. அவற்றுள் ரொட்டி செய்ய மற்றும் அவற்றை மொறுமொறுப்பாக செய்ய பதப்படுத்தப்பட்ட மாவைக் கொண்டது, பின் அந்த மாவை ஒட்டச் செய்ய ட்ரான்ஸ்-கொழுப்பு கொண்ட ஹைட்ரஜன் ஏற்றிய எண்ணையில் அதிவெப்பத்தில் பொறிக்கப்படுகிறது(பிளாஷ்-பிரைட்). மேலும் அவை அதிக சோடியம், சேச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் தரம் குறைந்த பொருட்களும் கொண்டது.

பதனிடு இரசாயனங்கள் கேன்சரோடு தொடர்புடையது மற்றும் ட்ரான்ஸ்-கொழுப்பு இதய பிரச்சனை மற்றும் எடை பிரச்சனையோடு தொடர்புடையது.

 

4.குழந்தைகளின் உணவு

பெரும்பாலான துரித உணவு(ஃபாஸ்ட் புட்) உணவகங்கள் குழந்தைகளுக்கு ஒரு பர்கர், வாட்டிய ரொட்டி(க்ரில்ட் சாண்ட்விச்) அல்லது அதற்கு சமமான, பிரெஞ்சு பிரைஸ் மற்றும் ஒரு சக்கரை நிறைந்த பானம் கொண்ட உணவை தருவர். இவை எல்லாம் ஒரு பெரிய யூவாக ஆரோக்கியமற்றது. சுத்திகரிக்கப்பட்ட மாவு, பதப்படுத்திய உருளைக்கிழங்குகள் மற்றும் சக்கரை மிகுந்தவைதான் இந்த உணவில் இருப்பது. மேலும், அவற்றில் அதிக உப்பு,  பதனிடு இரசாயனங்கள் மற்றும் சேர்க்கப்பட்ட உணவுச் சாயம் கொண்டது.

உணவுச் சாயத்தில் ஈயம் இருக்கிறது அது வளர்ச்சி மற்றும் நரம்பு அமைப்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். அது இரத்த அழுத்தத்தையும்  அதிகரித்து மேலும் வாழ்க்கையின் பிற்பகுதியில் சிறுநீரக சேததிற்கு வழிவகுக்கிறது.

 

5.மூழ்கிய சாஸஸ்(டிப்பிங் சாஸஸ்)

மூழ்கிய சாஸஸ்(டிப்பிங் சாஸஸ்), கெட்சப் உட்பட, சுவையூட்டும் பொருட்களும் மற்றும் அதிக அளவு சக்கரையும் உப்பும் கொண்டுள்ளது. சுவையூட்டும் பொருட்கள் அதிக கலோரிகளையும் தேவையில்லாத கூடுதல் கொழுப்பையும் உணவில் சேர்க்கிறது. அவை நுகரும் உணவின் சுவையையும் மாற்றுகிறது.

இவற்றை தவிர்ப்பதால் குழந்தைகள் தவிர்க்கக்கூடிய ஆரோக்கியம் இல்லாதவற்றில் இருந்து தூரமாக வைப்பது மட்டுமன்றி உணவின் உண்மையான சுவையை அனுபவிக்கவும் சந்தோசப்படவும் கற்றுக்கொடுக்கிறது.

 

6.பழ சிற்றுண்டி(ஸ்னாக்ஸ்)

பழ  ஜெல்லீஸ், பழ சுருள்கள் மற்றும் வேறு பொருட்கள் போன்ற பழ  சிற்றுண்டி(ஸ்னாக்ஸ்) கூட சக்கரையால் நிறைந்திருக்கிறது. தற்போது  உற்பத்தியாளர்கள் உண்மையான பழங்களை வைத்து பொருட்களை செய்வதாக கூறினாலும், லேபிளை ஒருவர் படித்தார் எனில், உண்மையான பழத்தின் சதவிகிதம் எங்கோ பத்து சதவிகிதத்திற்குள் தான் இருக்கிறது என்று கண்டுபிடித்து விடுவார். மீதமுள்ள 90 சதவிகிதமும் வெறும் வேகவைத்த சக்கரைதான்.
ஆரோக்யமானதை உண்பது ஆரோக்கியமாக இருப்பதற்கு அஸ்திவாரம். மேலும் இந்த பழக்கம் ஆரம்பத்திலேயே இணைக்கப்பட்டால், அது உண்ணும் பழக்கத்திற்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும் வெகு நாட்களுக்கு வடிவம் கொடுக்கும். அதனால் மேலே கூறப்பட்ட உணவுகளை உதறித்தள்ளுங்கள் மேலும் அவர்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு சரியான வண்ணம் அமையுங்கள்.

 

படங்களின் ஆதாரம்: பிக்ஸாபே, விக்கிமீடியா, மாக்ஸ்பிக்ஸெல்

Nithya Lakshmi

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன