Search

Home / Uncategorized / உங்களுக்கு மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்) இருக்கும் எனில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பத்து உணவுகள்

உங்களுக்கு மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்) இருக்கும் எனில் நீங்கள் தவிர்க்க வேண்டிய பத்து உணவுகள்

Nithya Lakshmi | நவம்பர் 27, 2018

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் வலியையும் மற்றும் விறைப்புத் தன்மையையும் விளைவிக்கும் வீக்கம் தரக்கூடிய குணாதிசயம் கொண்ட நோய் மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்) அது வயதாகும்போது அதிகரிக்கும். நிலைமை உருவான காரணங்களைப் பொறுத்து, முதுமை மூட்டழற்சி, முடக்குவாதம் அல்லது காளாஞ்சகப்படை, ஆகிய பல வெவ்வேறு வகைகளை சேர்ந்தது மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்) ஆகும்.

மூட்டுகளில் வலி, விறைப்புத்தன்மை மற்றும் வீக்கம் மேலும் குறைந்த வரம்பில் அசைவு  ஆகியவை மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்)யின் அறிகுறிகள் ஆகும். எல்லாவகையான மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்)க்கும் சிகிச்சைகளும் வீக்கத்தை குறைக்க கவனத்தை செலுத்தி வலியையும் விறைப்புத் தன்மையையும்  போக்குகிறது. மருந்து, உடற்பயிற்சி(பிஸியோதெரபி) மற்றும் தீவிர வலிகளுக்கு, அறுவை சிகுச்சை ஆகியவற்றை புலனுணர்வு சிகுச்சை உள்ளடக்கியது.

மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்)யின் அறிகுறிகளை சமாளிக்கும் ஒரு வழி மூட்டுகளின் வீக்கத்தைத் தூண்டுவதை தவிர்ப்பது. இதற்கு, ஒருவர் தன்  உணவில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் அவர்களுடைய தூண்டுதலையும் குறிக்கவேண்டும். இருப்பினும், மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்) உணவு முறையில் கட்டுப்படுத்த முடியாது, சில உணவுகளை நிச்சயமாக தவிர்க்கலாம்.

மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்)க்கு தவிர்க்க வேண்டிய பொதுவான உணவுகளின் பட்டியல் இங்கே.

 

1.பால் பொருட்கள்

அனைவருமே பால் பொருட்களால் பாதிப்புக்கு உட்படவில்லை என்றாலும், அது ஒரு மிகவும் பொதுவான தூண்டுதல் ஆகும். பால் பொருட்களில் ஒரு புரதம் இருக்கிறது அது மூட்டுகளைச் சுற்றியுள்ள தசைகளை வீங்க வைக்கலாம்.

 

2.கூட்டப்பட்ட சக்கரை

சக்கரை தினசரி பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் இருக்க வேண்டும் ஏன்னெனில் அதிகம் உட்கொள்வது  நேரடியாக வீக்கத்திற்கு விளைவிக்கும். இது எதனால் என்றால் சில புரதங்களும் மற்றும் கொழுப்புகளும் உடனடியாக சக்கரையுடன் செயல்புரிந்து அட்வான்ஸ்ட் க்லைகேஷன் அண்ட் ப்ரோடக்ட்ஸ்(ஏஜிஈஸ்)   எண்ணிக்கையை அதிகரிக்கிறது, அது வீக்கத்திற்கு பொறுப்பாகிறது.

முதுமை, சக்கரைநோய் மற்றும் இருதய நோயை அதிகரிக்கும் அபாயம் ஆகிவற்றிற்கும் ஏஜிஈஸ் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட சக்கரையும், உடல் வீக்கத்தின் தூதுவரான சைடோகின்ஸை வெளியிடத் தூண்டும்.

 

3.உணவுச் சேர்க்கைகள்(அடிட்டிவ்ஸ்)

எம்எஸ்ஜி மற்றும் அஸ்பார்டேம் போன்ற உணவுச் சேர்க்கைகள்(அடிட்டிவ்ஸ்) மூட்டுகளை எரிச்சலூட்டி அவற்றை வீங்கச் செய்யும். இவை பொதுவாக சோயா சாஸ், சாலட் ட்ரெஸ்ஸிங்ஸ், பாஸ்ட் புட்ஸ், டெலி இறைச்சி, மற்றும் சூப் மிக்ஸ் ஆகிய உணவுகளில் காணப்படும். எம்எஸ்ஜியில் உள்ள சோடியம் தண்ணீரை தக்க வைத்து வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. அஸ்பார்டேம் உடலில் பாதகமான எதிர்வினைகளை தூண்டும் ஒரு ஆய்வக பொருள்.

 

4.புகையிலை

புகையிலை தொழில்நுட்பத்தில் ஒரு உணவாக இல்லை என்றாலும், முடக்கு வாதம்  ஏற்படும் அபாயமும் மேலும் எலும்புகள், மூட்டுகள் மற்றும் இணைக்கும் தசைகளில் சேதங்களையும், அதிகரிக்கிறது. மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்) சிகிச்சையை புகையிலை பயனற்றதாக்கி மேலும் பிற்காலத்தில் அறுவை சிகிச்சையின் போது சிக்கல்களை ஏற்படுத்தலாம்.

 

5.மது

மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்)க்கு முன்னோடியாக ஒரு நோயான கீழ்வாதத்தை உருவாக்கும் அபாயத்திற்கு, மது ஒருவரை வெளிப்படுத்துகிறது. மேலும், மது யூரிக் அமிலம் சரியாக வளர்ச்சி(மெட்டபாலைஸ்) ஆவதை தடுத்து மூட்டுகளில் சின்ன படிகங்கள் உருவாகவும் சேரவும் வழிவகுக்கிறது. இந்த படிகங்கள் வீக்கத்திற்கு வழிவகுக்கிறது. மது ஈரலையும் பலவீனப்படுத்தி மூட்டுகளில் வீக்கங்களுக்கு வழிவகுக்கிறது.

 

6.உப்பு

உப்பில் சோடியம் இருப்பதால் மூட்டுகளில் வீக்கத்திற்கு காரணமாகிறது.


7.நிறைவுற்ற(சாச்சுரேட்டெட்) கொழுப்பு

நிறைவுற்ற(சாச்சுரேட்டெட்) கொழுப்பு உட்கொள்வதை குறைப்பது வீக்கத்தை குறைக்கிறது மேலும் உடலின் இயற்கையான பாதுகாப்பை சரியாக வேலை செய்ய வைக்கிறது. பதப்படுத்தப்பட்ட இறைச்சி, பொறித்த உணவு, சிவப்பு இறைச்சி மற்றும் கிரீம் நிறைந்த  பால் பொருட்கள் நிறைவுற்ற(சாச்சுரேட்டெட்) கொழுப்பின் பெரும் ஆதாரம் ஆகும்.

 

8.ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள்

ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் மற்றும் முன்னேற்றத்திற்கும் நம் உடலுக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் தேவை. இருப்பினும், நாம் வழக்கமாக ஒமேகா-6 அதிகம் உட்கொள்கிறோம், சூர்யகாந்தி, சோளம், வேர்க்கடலை, காய்கறிகள், சோயா, மற்றும் கிரேப்ஸீட் எண்ணெய் மேலும் சில மயோனீஸ் மற்றும் சாலட் ட்ரெஸ்ஸிங்ஸ் ஆகியவற்றில் கண்டறியப்பட்டிருக்கிறது.

 

9.சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ்

நம் உடல் சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸை சக்கரை போன்றே செயல்படுத்துகிறது. இவை பதப்படுத்தப்பட்டு மேலும் மிக குறைந்த ஊட்டச்சத்து மதிப்பு கொண்டது. சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ் உள்  வீக்கத்திற்கு காரணமாகிறது மேலும் சைடோகின்ஸ் வெளியிடுகிறது மற்றும் மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்) அறிகுறிகளை வேறு உடலில் வீக்கம் சார்ந்த கலவைகள் எரிச்சலூட்டுகிறது.

 

10.அதிக வெப்பத்தில் உணவு

வாட்டிய(க்ரில்ட் ) மற்றும் தந்தூரி தட்டுகள் சாப்பிட மகிழ்ச்சியாக இருந்தாலும், இதில் இருக்கும் உணவுகள் அதி வெப்பத்தில் சமைக்கிறார்கள் அது ஏஜிஈஸ் தோன்ற காரணமாகிறது.

குறிப்பிட்டது போல் பட்டியலில் உள்ள எல்லா பொருட்களும் ஒருவரை பாதிக்க தேவையில்லை. எனினும், ஒருவரது உணவு முறையில் ஆய்வுசெய்து அவர்களின் தூண்டுதலை கண்டுபிடித்து மேலும் அவற்றை தவிர்ப்பது வாழ்க்கையின் தரத்தை பெரிதும் மேன்படுத்தும்.

படங்களின் ஆதாரம்: பிக்ஸாபே, ஸ்டாட்டிக்பிலிக்கர், பிலிக்கர், விக்கிமீடியா, பிக்ஸ்ஹியர்.

 

Nithya Lakshmi

BLOG TAGS

Uncategorized

COMMENTS (0)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன