Home / Uncategorized / குளிர்கால உணவுகளைப் பற்றிய உண்மைகளும், கட்டுக் கதைகளும் – Dr. ஷிகா ஷர்மா
இதோ குளிர்காலம் நெருங்கி விட்டது! இனி ஜலதோஷம், இருமல், காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் நம்மை துரத்த தொடங்கி விடும். நம் உணவில் நாம் கவனம் செலுத்தினாலும், பல சமயங்களில் நமக்கு குளிர்கால உணவு முறைகளில் எது உண்மை , எது கட்டுக்கதை என்பது தெரிவதில்லை. அதில் குழப்பமடைகிறோம். சிறந்த உணவு நிபுணரான மருத்துவர் ஷிகா ஷர்மா அவர்கள் நம் குழப்பங்கள் தீர , நம் சந்தேகங்களுக்கு இங்கே உங்களுக்காக விளக்கமளிக்கிறார்.
Table of Contents
உண்மை: பாலில் நிறைய சக்தியும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்து உள்ளன என்று நாம் நினைக்கிறோம். ஆனால் அது உண்மையல்ல. பாலில் கால்ஷியம் மற்றும் புரதம் நிறைய உள்ளன. ஆனால் அதில் இரும்புச்சத்து, வைட்டமின் C இல்லை. அதனால் பாலை ஒரு முழுமையான உணவு என்று கூற முடியாது. ஒருவர் முழுமையாக பாலை சார்ந்து இருந்தால், அவர் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இழக்கிறார் என்று சொல்லாலாம்.
உண்மை: இதில் கண்டிப்பாக உண்மையில்லை. எந்த தாவர தயாரிப்பிலும் கொழுப்பு கிடையாது. விலங்குகளிலிருந்து தயாரிக்கப்படும் பனீர், நெய், முட்டை, இறைச்சி போன்றவைகளில் தான் கொழுப்பு உள்ளது. பாதாமில் நம் இதயத்திற்கு நன்மை பயக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.
உடல் நலனில் அக்கறை செலுத்தும் நேரம் குளிர் காலம் ஆகும். நிலக்கடலை உண்பதால் ஒருவருக்கு எடை கூடுவது அல்ல. நாம் அதிகப்படியான சுத்திகரிக்கப்பட்ட உணவான சர்க்கரை, நெய், மாவு போன்றவற்றை உண்ணும் பொழுது தான் உடல் எடை அதிகரிக்கும். இயற்கை உணவுகளான பாதாம், நிலக்கடலை, தேங்காய் போன்றவை அவற்றிற்கான நன்மைகளை கொண்டுள்ளது.
உண்மை: அதிக நன்மை இல்லை. முக்கியமாக எருமை பால் இருமலை அதிகரிக்கும் தன்மை உடையது. உங்களுக்கு இருமல் அல்லது ஜலதோஷம் இருந்தால் சில நாட்களுக்கு பால் அருந்த வேண்டாம். குளிர்காலங்களில் பால் அருந்தும் அளவை குறைத்துக் கொண்டால் இருமல் அதிகரிக்காமல் இருக்கும்.
உண்மை: தயிர் எந்த நேரத்திலும் சாப்பிடலாம், ஆனால் குளிர்ந்த தயிராக இல்லாமல் அறை வெப்பநிலையில் உள்ள தயிராய் சாப்பிட வேண்டும். உங்களுக்கு ஜலதோஷம் இருந்தாலும் நீங்கள் தயிர் உண்ணலாம். ஏனெனில் தயிர் எளிதில் செரிக்க கூடியது மற்றும் அது உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது.
உண்மை: குளிர்காலங்களில் இந்த எல்லா நறுமணப் பொருட்களும் ஆரோக்யத்தை அளிக்கக் கூடியவை. அவை பல நன்மைகள் உடையவை – பிரிஞ்சி இலை கல்லீரலில் ஏற்படும் பாக்டீரியா மற்றும் வைரஸ்களை அழிக்கிறது. இலவங்கப்பட்டை ஒரு ஆன்டிஆக்சிடன்ட் மாற்றும் ஆன்டிபயாடிக் ஆகும். இஞ்சி குளிர் காலங்களில் ஏற்படும் ஜலதோஷத்திற்கு சிறந்து மருந்து மற்றும் மிளகு தொண்டையில் ஏற்படும் தொற்றுகளை நீக்குகிறது.
உண்மை: இதில் சிறிதளவு உண்மை இருக்கிறது, ஏனெனில் இரவு வெள்ளை அரிசி சாதம் உண்ணும் பொழுது, உடலில் நீர் தேங்கி, அதனால் உடல் சிறிது வீங்குகிறது. ஆனால் இது நாளடைவில் இது படி படியாக நிகழ்கிறது. இரவு நேரத்தில் குறைந்த அளவு கலோரி உடைய உணவை உண்பதே சிறந்தது. இரவில் உங்களுக்கு சாதம் உண்பதில் மிகவும் விருப்பம் இருந்தால், சாதத்தில் உள்ள கஞ்சியை நீக்கி விட்டு உண்ணவும்.
Image Source-reader’s digest, once upon a chef,tourism and food, the little epicurean, medical news today, Fressko
COMMENTS (0)