Home / Home Remedies in Tamil (வீட்டு வைத்தியம்) / மாதவிடாய் சமயத்தில் உண்ண வேண்டிய 8 உணவுகள்
மாதவிடாய் சமயங்களில் மனசஞ்சலங்கள், அதிக ரத்தப்போக்கு, தசை பிடிப்பு, வயிற்று வலி போன்ற எண்ணற்ற பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், அந்நாட்களை கடப்பது ஒரு பெரும் சவாலாக உள்ளது. அப்பொழுது ஏற்படும் வலிகளை குறைக்க நாம் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டியது மிக அவசியமாகிறது. இரத்தப்போக்கு இருக்கும் சமயங்களில் இரும்புச்சத்தும், கால்ஷியமும் நிறைந்த உணவை உண்பதன் மூலம் நம் உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்யமாகவும் வைத்திருக்க முடியும்.
மாதவிடாய் சமயங்களில் உண்ணவேண்டிய உணவுகள் இதோ:
Table of Contents
மெக்னீசியம், வைட்டமின்B6 வால்நட்டில் அதிகம் உள்ளதாலும், அதன் அழற்சி-எதிர்ப்பு தன்மையாலும் அச்சமயங்களில் ஏற்படும் வலியை குறைக்க உதவுகிறது. கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஒரு கப் வால்நட் நமக்கு 30% வைட்டமின்-B6 அளிக்கிறது.
மாதவிடாய் சமயத்தில் உண்ணவேண்டிய ஒரு முக்கியமான உணவு வைட்டமின் B மற்றும் C நிறைந்த காலே ஆகும். அதிக இரத்தப்போக்கு இருக்கும் பொழுது , இரும்புச்சத்து நிறைந்த இந்த உணவு மலச்சிக்கலை தடுத்து செரிமான அமைப்பை சீராக்குகிறது,
இலவங்கப்பட்டையிலுள்ள ஹைட்ரோக்ஸிசால்கோன் ரத்தத்திலுள்ள இன்சுலின் அளவை அதிகரித்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. மேலும் மாதவிடாய் சமயத்தில் இலவங்கப்பட்டை தேநீர் அருந்துவதன் மூலம் ஹார்மோன்களை சமன் செய்கிறது. தசைப்பிடிப்புகளிளிருந்து நம்மை விடுவித்து ஒழுங்கற்ற மாதவிடாயை சீராக்குகிறது.
தசை பிடிப்பின் வலியிலிருந்து, இரத்தப்போக்கு சமயங்களில் நமக்கு நிவாரணம் அளிக்கும் மற்றறொரு உணவு காலா மீன் ஆகும். அதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களும், அதன் அழற்சி-எதிர்ப்பு தன்மையும் நம் தசைகளை சீராக்குகிறது. நாம் சுறுசுறுப்பாக இயங்க தேவையான புரதத்தையும் அளிக்கிறது.
பொட்டாசியம், வைட்டமின் B6 நிறைந்த வாழைப்பழங்களை உண்பதன் மூலம் தசைபிடிப்பு குறையும். மேலும் நீரினால் உண்டாகும் வீக்கத்தை குறைக்கிறது. மேலும் குடல் அசைவுகளை சீராக்கி வயிற்றுபோக்கை தடுக்கிறது.
இதில் மெக்னீசியம் அதிகம் இருப்பதால், மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் தசைப்பிடிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதை தவிர இயற்கை புரோபயாடிக் தயிர் மாதவிலக்கின் முன் அறிகுறிகளை சரிவர கவனித்து, நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து சரியான செரிமான அமைப்பிற்கு வழி வகுக்கிறது. வீக்கத்தினால் உண்டாகும் பிரச்சனைகளுக்கும் தீர்வு அளிக்கிறது.
மன சோர்வு, மனத்தடுமாற்றம் போன்றவைகளிலிருந்து மாதவிடாய் சமயங்களில் விலகியிருக்க, கோகோ அதிகமுள்ள டார்க் சாக்லேட் நிறைய எடுத்துக்கொள்ளுங்கள். அதில் உள்ள மெக்னீசியம் மூலம் செரோடோனின் உருவாகி, மாதவிடாய் நேரங்களில் ஆரோக்கியமான மனநிலைக்கு வழிவகுக்கிறது.
ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் அதிகம் உள்ள வைட்டமின் C, செரோடோனின் உற்பத்தியை சீராக்கி அதன் மூலம் மன சோர்விலிருந்து விடுதலை அளிக்கிறது. மேலும் மாதவிடாய் சமயங்களில் ஏற்படும் வலி, தசை பிடிப்புகளிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. மாதவிலக்கின் முன் அறிகுறிகளை சரிவர கவனித்து, ஆரோக்கிய இனபெருக்கு அமைப்பை அளித்து, நாள் முழுவதற்கும் தேவையான ஆற்றலையும் அளிக்கிறது.
COMMENTS (0)