உங்கள் மாதவிடாய் காலங்களில் நீங்கள் தவிர்க்க வேண்டிய 7 விஷயங்கள்

Spread the love

மாதவிடாய், ஒரு பெண்ணின் வாழ்க்கை சுழற்சியில் ஒரு முக்கிய பகுதியாகும். இச்சுழற்சி உலகளாவிய ரீதியில் நிகழும் ஒரு இயற்கையான செயல்முறை என்றாலும், பெண்கள் அதை வெளிப்படையாகப் பேச முடியாது. இது ஒரு பெண்ணுக்கு ஒரு கடினமான நேரம் மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் சமூகரீதியாகவும், ஒவ்வொரு மாதமும் மாதவிடாயின்போது பல கட்டுப்பாடுகளை  பெண்கள்  சந்திக்கும் நேரம். சிந்தனையில் மாற்றங்கள் இருந்தாலும், சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவை பெண்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது தரும். நமது உடலில் ஏற்படும் கடும் மாற்றங்களை சந்திக்க சில கட்டுப்பாடுகள் நன்று.

மாதவிடாய் காலத்தில் ஒருவர் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைப் பார்ப்போம்:

 

1.அதிக உப்பிலிருந்து விலகியிருக்க வேண்டும்

பிரெஞ்சு பிரைஸ் உங்களுக்கு பிடித்த தின்பண்டங்களில் ஒன்றாக இருக்கலாம், ஆனால் அது உங்கள் வலியை அதிகரிக்கும். அதிக உப்பினால் வீக்கம் ஏற்பட்டு மற்றும் அடிவயிற்றில் பிடிப்புகள் அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.

 

2.தீவிர உடற்பயிற்சி தேவை இல்லை

பல பெண்கள் மாதவிடாயின் போது வயிற்றுப் பகுதியில் வலி மற்றும் பிடிப்புகள் அனுபவிக்கின்றனர். அதனால் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். அந்த காலங்களில் பல மணிநேரங்களை யோக பயிற்சி செய்வதில் செலவழிக்க வேண்டும். இது உடல் மற்றும் மனநிலை ஓய்வெடுக்க உதவுகிறது. ஆனால் கடினமான கை வேலைகளை தவிர்க்க வேண்டும்.

 

3.உங்கள் பாலின் அளவை குறைக்க வேண்டும்

இந்த நேரத்தில் ஹார்மோன்களில் நிறைய மாற்றங்கள் ஏற்படுகின்றன, மேலும் பால் அதிகமான உட்கொள்ளுதல் சமநிலையின்மைக்கு வழிவகுக்கும் என்பதால் ஒரு கட்டத்தில் பால் மற்றும் பால் பொருள்களை குறைக்க வேண்டும். இல்லையெனில், எரிச்சலூட்டும் மனநிலையையும், செரிமானத்தில் சிக்கல்களையும் ஏற்படுத்தும்.

 

4. புகையிலை மற்றும் காஃபியிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்

காபி மற்றும் தேநீர் போன்ற பானங்கள் பருகுவதால், மார்பகங்களின் மென்மை அதிகரிக்கலாம். இதனால் இரத்த ஓட்டம் தடுக்கப்பட்டு பிடிப்புகள் மற்றும் இரத்த கட்டிகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. இது மன அழுத்தம் மற்றும் இதய துடிப்பு அதிகரிக்க வழிவகுக்கிறது, இது பீஎம்எஸ் தீவிரத்தை அதிகரிக்கும். புகைபிடிப்பது மோசமான விளைவை ஏற்படுத்தி, மேலும் மாதவிடாய் காலங்களில் வலி அதிகரிக்கும்.

 

5. உங்கள் பேட் / தம்போனை மாற்றுங்கள்

பெண்கள் தங்கள் தினசரி வாழ்க்கையில் பிஸியாக இருக்கும் போது, அவர்கள் அடிக்கடி தங்கள் பேட்அல்லது தம்பானை மாற்ற மறந்தால், அந்த அழுக்கு பேட் பாக்டீரியா தொற்று ஏற்படுத்தும் என்பதால், ஒவ்வொரு 3-4 மணிநேரத்திற்கும் பாட் அல்லது டேம்பன் மாற்றப்பட வேண்டும்.

 

6. யோனி துடைக்கு ” முடியாது” என்று சொல்லுங்கள்

நீங்கள் ஒரு யோனி டௌச் அல்லது ஒரு கழுவியை பயன்படுத்துபவரானால், அது இயற்கை பாக்ட்ரியாவை கொல்வதோடு மட்டுமல்லாமல் வீக்கம் மற்றும் தொற்றை ஏற்படுத்தும் எனவே இதை மாதவிடாய் காலங்களில் பயன்படுத்த வேண்டாம். தேவைப்பட்டால் உங்கள் யோனியை தூய்மைப்படுத்த நீங்கள் சாதாரணமான தண்ணீரைப் பயன்படுத்தலாம் ஆனால் அவ்வாறு செய்வதற்கு அவசியமில்லை.

 

7. பாதுகாப்பான உறவு

மாதவிடாய் காலங்களில் உறவு கர்ப்பத்திற்கு வழிவகுக்காது என்று பலர் நினைக்கிறார்கள். ஆனால் அது ஒரு புராணம். மாதத்தின் மற்ற நாட்களில் போலவே இப்பொழுதும் கர்பம் பெறுவதற்கான சம வாய்ப்புகள் உள்ளன. மாதவிடாய் காலங்களில் உங்கள் இரத்தத்தின் மூலம் உங்கள் உங்கள் துணைவருக்கு வைரஸ்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளை தாக்க முடியும். இதில்  எச்.ஐ.வி ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இந்த நேரத்தில் கர்ப்பப்பை விரிவடைந்து இருப்பதால் யோனியில் உள்ள நுண்ணுயிரிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. எந்தவொரு தொற்றுநோயையும் தடுக்க, மாதவிடாய் காலங்களில் செக்ஸ்லிருந்து விலகுவது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

இந்த தகவலை உங்களுக்கு உதவுவதாகவும், இதை வாசித்தபின் உங்கள் மாதவிடாய் காலத்தில் நீங்கள் திடமானவராகவும் ஆரோக்கியமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறோம்.

 

பட மூலம்www. Public Domain Pictures.net, www.pixabay.com, www.wikipedia.org, www.maxpixel.net, www.naturalon.com

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன