Home / Kids Health Care Tips in Tamil / உங்கள் மகளுக்கு மாதவிடாய் பற்றி எப்படி கற்பிப்பது?
பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு, ஆனால் மக்கள் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். சரியான தகவல்கள் இல்லாததால் நமது மகள்கள் மாதவிடாய் துவங்கும்போது நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். அந்தச் சூழ்நிலையில், அவரது மகளை இந்த பிரச்சனைகளில் இருந்து மேலே செல்லவும் மற்றும் இந்த இயற்கையான நிகழ்வை வெளிப்படையாகப் பேசவும், மேலும் செய்வது செய்யக்கூடாதது பற்றி கலந்தாலோசிப்பதும், ஒரு தாயின் பொறுப்பல்லவா? நீங்கள் ஒரு இளம் மகளின் தாயாக இருந்து எப்படி மகளுக்கு மாதவிடாய் பற்றி கற்றுத் தருவது என்ற குழப்பத்தில் இருந்தால், உங்களுக்கு எங்களிடம் சில சிறந்த ஆலோசனைகள் இருக்கிறது.
Table of Contents
சந்தையில் இந்த வயது குழந்தைகளின் மனநிலையை கருத்தில்கொண்டு மாதவிடாய் பற்றி எழுதப்பட்ட, நிறைய புத்தகங்கள் கிடைக்கிறது. இந்தத் தலைப்புடன் கருத்தை விவரமாகவும் எளிமையாகவும் மற்றும் ஒரு எளிய முறையிலும் விளக்கிய எந்தப் புத்தகமும், உங்கள் மகளிடம் படிக்கக் கொடுக்கலாம். நீங்கள் அவளுக்கு புரியாதவற்றை உங்களிடம் கேட்க அவளிடம் கூறலாம் மேலும் அதைப்பற்றி ஆலோசிக்கலாம்.
ஒன்றாக தொலைக்காட்சியைப் பார்க்கும்பொழுது, மாதவிடாய்க்கால அணையாடை(சானிட்டரி நாப்கின்) விளம்பரங்கள் அடிக்கடி வரும். அவற்றை புறக்கணிக்க வேண்டாம்; மாறாக முழு விளம்பரத்தையும் சாதாரண பாணியில் பார்க்கவும். உங்கள் மகளுக்கு அதற்கு ஏதேனும் கேள்வி இருந்தால், அவற்றை சரியாக அவளிடம் விளக்கவும். இதழ்களில் அல்லது செய்தித்தாள்களில் வெளியிடப்பட்ட எதையும் உங்கள் மகளிடம் மறைக்க வேண்டாம், மேலும் மாதவிடாய்க்கால அணையாடை(சானிட்டரி நாப்கின்) தேவையையும் மற்றும் அவள் பூப்படையும்போது அவள் உடல்/புலங்கள் ரீதியாக கடந்து செல்ல வேண்டிய மாற்றங்கள் பற்றியும் விவரிக்கவும்.
மகள்கள் தினம் அல்லது அவளுடைய பிறந்தநாள் போன்று ஒரு விசேஷமான தறுவாயில், நீங்கள் உங்கள் இளம் மகளுக்கு மாதவிடாய் சம்பந்தமான ஒரு புத்தகம், ஒரு மாதவிடாய்க்கால அணையாடை(சானிட்டரி நாப்கின்) பொட்டலம் மற்றும் பஞ்சுத்தக்கை(டேம்பான்) போன்ற நிறைய பொருட்கள் வைத்து ஒரு பரிசு கொடுக்க வேண்டும். அதனுடன், உங்கள் அனுபவங்களை பகிர்ந்தும் இந்த உடல்ரீதியான மாற்றத்தின் போக்கில் அவள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை வழி நடத்தியும் அவளுக்கு ஒரு தனிப்பட்ட கடிதம் எழுதி வைக்கவும்.
உங்கள் மகளை முதல் மாதவிடாய்க்கு மனதளவில் தயாராக உதவுங்கள். நீங்கள் எதிர்பார்ப்பதற்கு முன்னதாகவே மாதவிடாய் சுழற்சி ஆரம்பிக்கும் என்பதைப் புரிந்து கொள்வதும் முக்கியம். மார்பகங்கள் வளர ஆரம்பிக்கும் போது, தாய் தன் மகளிடம் மிக முக்கியமாக அவள் தெரிந்து கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கைகளையும் கூற வேண்டும். உதாரணத்திற்கு, அவள் முதல் மாதவிடாய்க்கு பல மாதங்களுக்கு முன், அவளது பெண்குறியில் இருந்து, நிறமில்லாமலோ வெள்ளையாகவோ சில கசிவுகள் வரும். அது நடந்தால், அவள் தாயிடம் கூறவேண்டும். சுகாதாரத்தைப் பற்றிப் பேசவும் மேலும் ஒரு நாளில் அதிக முறை அவளது பேடை அல்லது பஞ்சுத்தக்கை(டேம்பான்) அவள் மாற்ற வேண்டிய தேவையையும், மேலும் பஞ்சுத்தக்கை(டேம்பான்) இரவு முழுவதும் பயன்படுத்தக் கூடாது என்பதையும் அவளிடம் கூற வேண்டும்.
அவள் குளித்து தன் உடலைத் தூய்மையாக வைத்திருப்பது முக்கியம். உங்கள் மகளின் வாழ்க்கையில் அவள் குழந்தையாக இருந்து பெரியவளாகும் இந்தநிலை ஒரு முக்கியமான கட்டம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்தப் பயணத்தில் நீங்கள் அவளுடைய சிறந்த தோழி பாத்திரமாகலாம். என்னை நம்புங்கள் அவள் வாழ்நாள் முழுதும் உங்கள் ஆதரவையும் அன்பையும் மறக்க மாட்டாள்.
படத்தின் ஆதாரங்கள்: www. Public Domain Pictures.net, www.pixabay.com, www.wikipedia.org, www.maxpixel.net, pixel
COMMENTS (0)