குழந்தைகளின் ஊட்டச்சத்து பற்றிய ருஜுதா திவேக்கரின் குறிப்புகள்

Spread the love

இந்தியக் குழந்தைகள்  43 சதவிகிதம் குறைவான எடையுடன் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மாறாக, அனைத்து வளரும் நாடுகளிலும் இந்தியாவில்தான் அதிக சதவிகிதம் பருமனான குழந்தைகள் இருக்கிறார்கள்! பெரும்பாலான இந்திய குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டினால் அவதிப்படுகிறார்கள் மேலும் அவர்களை இது இரத்தசோகை, வைட்டமின் பி 12 மற்றும் வைட்டமின் டி பற்றாக்குறை போன்ற பல உடல்நல சிக்கலுக்கு வழிவகுத்து குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

இது ஒரு நாடு தழுவிய பிரச்சனை என்பதால், இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து மற்றும் உணவுக்கட்டுப்பாட்டு நிபுணர், ருஜுதா திவேக்கரிடம் இருந்து நாங்கள் உங்களுக்கு சிறிது எளிமையான உணவுக்கட்டுப்பாட்டுக் குறிப்புகளை  குழந்தைகளுக்காக கொண்டு வந்திருக்கிறோம்.

1) ஒரு உயரமான நாற்காலி பயன்பாட்டை நிறுத்துங்கள்

பெரும்பாலான பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க உயரமான நாற்காலியையே பயன்படுத்த விரும்புவதாக ருஜுதா கூறுகிறார். இது ஒன்றும் மிக நல்ல பழக்கம் இல்லை. அதற்குப் பதிலாக, உங்கள் குழந்தைகளுடன் தரையில் அமர்ந்து பின் அவன்/ள்க்கு நீங்களாகவே ஊட்டி விடலாம். இந்த வகையில், உங்கள் குழந்தை உணவின் மீது அதிக ஆர்வம் காட்டுவார் மேலும் அது உங்கள் குழந்தையின் இடுப்பு எலும்பு சரியாக வளரவும்  உதவும். உயரமான நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது குழந்தைகளின் இடுப்பு எலும்பு வளர்ச்சிக்கு ஒரு தடையாகிவிடும்.

அது குழந்தைகள் வளரும்போது பிரச்சனை கொடுக்கும் மேலும் அவன்/ள்க்கு பின்முதுகில் வலியும் தண்டுவடத்தில் பிரச்சனையையும்  அனுபவிக்கச் செய்யும். நிறைய பெரியவர்கள் எந்நேரமும் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் அவர்களால் தரையில் அமர முடிவதில்லை, அதேசமயம் தரையில் அமரும் குழந்தைகளால் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருக்க எப்பொழும் பிரச்சனை ஏற்படாது என்று ருஜுதா கூறுகிறார்.

2) எந்த வகையான பாத்திரங்களில் குழந்தைகள் உண்ண வேண்டும்?

நீங்கள் எப்பொழுதும் உங்கள் குழந்தைகளுக்கு நெகிழியாலான  கிண்ணத்திலோ அல்லது ஒரு தட்டிலோ உணவு கொடுக்கக் கூடாது என்று ருஜுதா கூறுகிறார். நல்ல தரமான நெகிழிகூட பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என்பதால் எப்பொழுதும் பீங்கான், கண்ணாடி அல்லது எவர் சில்வர் பாத்திரங்களைப்  பயன்படுத்தலாம்.

3) ஒருபோதும் ஊட்டச்சத்துக்களை வகைப்படுத்தாதீர்கள்

ருஜுதா குழந்தைகள் முன்னிலையில் ஊட்டச்சத்துக்களை வகைப்படுத்தவும்  மேலும் அவற்றை வேறுபடுத்தவும் கூடாது என்று தாய்மார்களுக்கு அறிவுரை கூறுகிறார். ஒருவர், “பருப்புசாப்பிட வேண்டும் ஏன்னெனில் அது புரதச்சத்து கொடுக்கிறது ” அல்லது “பாலை குடி ஏனெனில் அது சுண்ணாம்பு சத்து கொடுக்கும்” போன்று ஒருபோதும் கூறக்கூடாது. புரதச்சத்தை உண்பதைவிட, உங்கள் குழந்தையால் அதை ஜீரணிக்கவும் உரிந்து கொள்ளும் திறனும் இருப்பது முக்கியம் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.  அதனால் உங்கள் குழந்தைகளுக்கு பருப்பை வலுக்கட்டாயமாக ஊட்ட வேண்டாம், அதற்குப்பதிலாக தேவையான ஊட்டச்சத்து வழங்க அவன்/ள்க்கு நெய் சாதம், கிச்சடி, தயிர் சாதம் மற்றும் உலர்ந்த பழங்களை கொடுக்கவும்.

4) குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்குவியுங்கள்

குழந்தைகளை வெளியில் விளையாட ஊக்குவியுங்கள் மற்றும் உடல் உழைப்பில் ஈடுபடுத்துங்கள். வளரும் குழந்தைக்கு குறைந்தது 90 நிமிடங்கள் விளையாட்டு அத்தியாவசியம் என்று அவர் கூறுகிறார். அவ்வாறு செய்வதால் குழந்தை உண்ணும் உணவில் இருந்து ஊட்டச்சத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது மேலும் அது எந்தவகையான குறைபாட்டையும் தவிர்க்க உதவுகிறது.

 

5) பால் குழந்தைகளுக்கு முக்கியமா?

பாலைப் பற்றி நிறைய கட்டுக்கதைகள்  இருக்கிறது. உங்கள் குழந்தைக்கு பால் பிடித்தால், அவன்/ள்க்கு அதைக் கொடுங்கள் என்று ருஜுதா கூறுகிறார். இயற்கை பசும்பால்தான் சிறந்தது ஆனால் உங்களுக்கு அது கிடைக்கவில்லையெனில், உங்கள் குழந்தைக்கு எருமைப் பால் கொடுக்கலாம். உங்கள் குழந்தைக்கு பால் பிடிக்கவில்லை என்றால், அவன்/ள்க்கு அதைக் கட்டாயப்படுத்திக் கொடுக்க வேண்டாம். உங்கள் குழந்தைக்கு பாதாம் பால் கொடுக்க வேண்டியதில்லை, ஏனெனில் அது குழந்தைகளுக்கு ஏற்றதல்ல. பாதாம் இயற்கைக்கு மாறான முறையில் தயாரித்து உருவாக்குவதால் இந்தப் பால் குழந்தைகளுக்கு நல்லதில்லை என்று அவர் கூறினார். ஒருபோதும் எந்த வகையான விளம்பர பொடிகளையம் பாலுடன் கலக்க வேண்டாம்; அதற்குப்பதில் நீங்கள் பாலுடன் ஜாதிக்காய், குங்குமப்பூ, மஞ்சள் அல்லது பொடித்த உலர்பழங்கள் கலக்கி அதை உங்கள் குழந்தைக்கு கொடுங்கள்.  

 

6) உணவு உட்கொள்ளும்போது தொலைபேசி வேண்டாம், தொலைக்காட்சி வேண்டாம்

உங்கள் குழந்தை உணவு உட்கொள்ளும்போது உங்கள் கைப்பேசிகளை தூரமாக வைக்கவும் மற்றும் தொலைக்காட்சியை அணைத்து விடவும். உங்கள் குழந்தை அவன்/ள் தொலைபேசி/தொலைக்காட்சி பார்த்துக்கொண்டுதான் உணவு உண்பேன் என்று பிடிவாதமாக இருந்தால், தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தை சிறிது நேரம் ஒதுக்கி வையுங்கள்.  அந்த ஒதுக்கி வைக்கப்பட்ட நேரம் முடிந்ததும், தொலைக்காட்சியை அணைத்துவிட்டு உங்கள் குழந்தைக்கு ஊட்டுங்கள், ஆனால் இது ஒரு பழக்கமாகிவிடக் கூடாது ஏன்னெனில் அது உங்கள் குழந்தையின் மன வளர்ச்சியை தடை செய்யும். குழந்தைகளின் வயதைப் பொறுத்து தொலைக்காட்சி பார்க்கும் நேரம் பத்து முதல் முப்பது நிமிடங்கள் வரை இருக்கலாம் அதற்கு மேல் கூடாது.  

 

7) உங்கள் குழந்தையை தினந்தோறும் ஒரே நேரத்தில் தூங்க வையுங்கள்

உங்கள் குழந்தை ஒவ்வொரு இரவும் பத்து மணிக்கு முன் படுக்கையில் இருக்க வீட்டில் ஒரு நடைமுறைப் படுத்துங்கள். பெரிய குழந்தைகள் 11 மணிக்கு தூங்கச் செய்யலாம் ஆனால் அதற்குப்பின் இல்லை. இந்த விதி வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் பின்பற்றினால்தான் இது சாத்தியமாகும். தாமதமாக விழித்திருப்பது உங்கள் குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியை மோசமாக பாதிக்கும் மேலும் செரிமான முறையில் பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். தவிர, உங்கள் குழந்தையின் அறையில் ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை நிச்சயமாக பொருத்தாதீர்கள்.

 

மேலும் தெரிந்து கொள்ள, கீழ்காணும் காணொளியைப் பாருங்கள்:

படத்தின் ஆதாரங்கள்: www. Public Domain Pictures.net, www.pixabay.com, www.wikipedia.org, www.maxpixel.net, www.naturalon.com, www.flikr.com

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன