சமையலறையில் உணவை வைப்பதற்கான சிறந்த வழிமுறைகள்

Spread the love

எத்தனை முறை முலாம்பழத்தின் வாடை அதனுடன் வைத்திருந்த மற்ற பொருட்களுக்கும் பரவியதைக் கவனித்துளீர்கள்? உங்களது வெங்காயமும் உருளைக்கிழங்கு நீங்கள் எதிர்பார்த்ததை விட அதி வேகமாக கேட்டு போவதைக் கவனித்துள்ளீர்களா? இதில் நீங்கள் மட்டும் தனித்து இல்லை. அனைவருக்கும் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வு தான் இது. இதை தவிர்க்க சிறந்த வழி, சமயலைறையில் உணவை வைப்பதற்கு சில சிறந்த வழிமுறைகளைக் கடைபிடிப்பதே ஆகும்.

 

பொதுவான சில வழிமுறைகள்-

 

 • சுத்தம் செய்ய பயன்படுத்தும் ரசாயனப் பொருள்களுடன் ஒரு போதும் உணவை வைக்காதீர்கள். ரசாயனப் பொருள்களில் இருந்து வரும் வாடை உணவில் நுழைந்து உணவும் ரசாயன வாடை அடிக்கும்.
 • சுத்தம் செய்ய உபயோகிக்கப்படுத்தும் பொருட்கள்போட்டு வைத்த டப்பாவில் உணவை வைக்காதீர்கள். அதில் உள்ள ரசாயனத்தின் மிச்சம் உணவைக் கெடுக்கும்.
 • உணவை நேரடியாக தரையில் வைப்பதைத் தவிர்க்கவும். அவ்வாறு வைத்தால் எலி மற்றும் பிற பூச்சிகளுக்கு கொண்டாட்டம் தான்.
 • கூடைகள் வாங்கி திறக்காத ஒத்தப் பொருட்களை போட்டு வைக்கவும். அவ்வாறு வைத்தால் ரொட்டி, பிஸ்கட், பாஸ்தா போன்ற பொருட்களைப் பிரித்து தனித் தனியாக போட்டு வைக்க உதவும்.
 • பிரித்தவுடன் பொருட்களை கண்ணாடி அல்லது நெகிழியால் ஆனா காற்று புகாத டப்பாக்களில் போட்டு வைக்கவும். அல்லது கிளிப் அல்லது நெளிவளையம் போட்டு காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

 • அணைத்து உணவுப் பொருட்களையும் மூடி வைக்கவும். அப்போது தான் உணவு கெடாமலும் வேறு ஏதும் உள்ளே விழாமலும் இருக்கும்.
 • உணவு வைக்கும் இடம் நல்ல காற்றோட்டத்துடன், ஈரமில்லாமல் அதிக வெப்பம் இல்லாமலும் இருத்தல் வேண்டும்.

 

குறிப்பிட்ட சிறந்த வழிமுறைகள்-

 • தானியம், பருப்பு வகைகள், மாவு, அரிசி மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களை தனி தனி கண்ணாடி அல்லது எஃகு பெட்டியில் கரண்டியுடன் வைக்கவும். தினம் தேவையான அளவை விரைவில் அளந்து எடுக்க இது உதவும்.  

 • வாசனை பொருட்களை எப்பொழுதும் தனி தனி காற்று புகாத கண்ணாடி அல்லது நெகிழி டப்பாவில் வைக்கவும். அப்பொழுது தான் ஒன்றின் வாசனை மற்றொண்டிற்குள் புகாமல் இருக்கும்.

 • அமிலத்தன்மை கொண்ட பொருட்களான தக்காளி, முட்டைக்கோஸ் மற்றும் மென்மையான பழங்களான ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி ஆகியவற்றை அலுமினியத் தகடு கொண்டு மூடி வைக்கக் கூடாது. தகடுடன் எதிர்வினையாற்றி உணவை விரைவாகக் கேட்டு போக வைத்து விடும்.
 • டப்பாக்களின் மூடிகளை அந்த அந்த டப்பாவின் மீது வைக்கவும்.

ஆரோக்கியமான, வாடையற்ற, சிக்கலற்ற சமையல் அனுபவத்திற்கு இந்த சிறந்த வழிமுறைகளை உங்களது தினந்தோர வாழ்க்கையில் ஒரு அங்கமாகக் கடைபிடியுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன