Home / Women Health Tips in Tamil / ஒவ்வொரு பெண்ணும் தெரிந்துக்கொள்ள வேண்டிய கருப்பை தசைக்கட்டிகளுக்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
பெரும்பாலானவர்கள் மியோமாஸ் என்று மருத்துவர்களால் சொல்லப்படும் கருப்பை தசைக்கட்டி/ பைப்ராய்ட்ஸ் தங்களுக்கு இருப்பதை அறியாமலேயே இருக்கிறார்கள். தசைகட்டிகள் / பைப்ராய்ட்ஸ் என்பது கருப்பையில் ஏற்படும் சிறு தசை வளர்ச்சியே ஆகும். அரிதாகத்தான் இது கருப்பை புற்றுநோயாக மாற்றமடைகிறது. பைப்ராய்ட்ஸ் பெரும்பாலும் கருப்பை சுவரிலோ அல்லது மேற்பரபிப்லோ உண்டாகிறது. அது இருக்கும் இடம்,அளவு,வடிவம் ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது. அதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும் வரை, பைப்ராய்ட்ஸ் இருப்பதை கண்டுப்பிடிப்பது மிக கடினம்.
Table of Contents
நீங்கள் கர்ப்பமடைந்திருக்கும்போது, ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் அளவுகள் அதிகரிப்பதால், தசைக்கட்டிகளின் அளவும் வேகமாக வளர்கிறது. மேலும் கர்ப்பத்தடை மாத்திரைகளை உண்ணும்போது, அவை புதிய தசைக்கட்டிகள் உருவாக வழி வகுக்கிறது.
உங்கள் தாய், சகோதரி, பாட்டி போன்ற எவருக்கேனும் உங்கள் குடும்பத்தில் தசைகட்டிகள் இருந்திருந்தால், உங்களுக்கும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
அதிகப்படியான தேநீர், காபி , மது அருந்துதல், சிவப்பு இறைச்சி அதிகமாக உண்ணுதல் போன்றவையும் தசைக்கட்டிகள் ஏற்பட காரணமாகும். அதிகளவில் பழங்கள், காய்கறிகள் உண்டால் இது வராமல் தடுக்கலாம்.
ஒவ்வொரு மாதவிடாயின் போதும் வெளிவரும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் கருப்பை அடுக்கை தடிமனாக்குகிறது. இதனால் தசைக்கட்டிகள் ஏற்பட வாய்ப்பு இருந்தாலும் அவை மெனோபாஸ் சமயத்தில் சுருங்கி விடுகின்றன.
அதிக உடல் எடையும், தசைகட்டிகள் ஏற்பட ஒரு காரணமாகும். வயிற்று பகுதியில் ஏற்படும் அதிகப்படியான கொழுப்பு, ஈஸ்ட்ரோஜன் அளவை கூட்டி தசைகட்டிகள் உருவாக காரணமாகிறது.
COMMENTS (0)