Home / Uncategorized / அதிகரித்த யூரிக் அமிலத்திற்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்
பொதுவாக, சிறுநீரகத்தால் சரிவர வெளியேற்ற முடியாத யூரிக் அமிலமானது ஒவ்வொருவரின் உடலிலும் படிமங்களாக தங்கி விடுகிறது. யூரிக் அமிலம் இரத்தத்தில் கரைந்து உடல் முழுவதும் செல்கிறது. அவை சிறுநீரகத்திற்கு வரும் பொழுது, அவற்றை இரத்தத்திலிருந்து பிரித்து சிறுநீர் மூலம் நம் சிறுநீரகம் வெளியேற்ற வேண்டும். யூரிக் அமிலம் என்பது ஒரு கழிவுப்பொருள். உடலில் டி.என்.ஏ. எனும் மரபணுச்சரடு உற்பத்திக்குப் பியூரின் என்ற மூலக்கூறுகள் தேவை. இவை நாம் சாப்பிடும் உணவிலும் இருக்கின்றன. குடலில் இவை உறிஞ்சப்பட்டு, உடல் செல்களில் வளர்சிதை மாற்றம் அடையும்போது, அதன் கடைசிப் பொருளாகவும் கழிவுப் பொருளாகவும் யூரிக் அமிலத்தை உற்பத்திசெய்கின்றன.
எப்படியாவது யூரிக் அமிலம் உடலில் இருந்து வெளியேறவில்லை என்றால், அது நம் உடலில் தங்கி , நம் உடலின் இயற்கை அமிலகாரத்தன்மையின் சம அளவை (pH) அளவை மாற்றி அமிலத் தன்மைய அதிகமாக்குகிறது. இதனால் சிறுநீரக கற்கள், கீல் வாதம், மூட்டு வாதம் போன்றவை உண்டாகும். இன்னும் சற்று தீவிர நிலைமையில் உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக செயலிழப்பு, இதய கோளாறு போன்றவையும் உண்டாகலாம். அதிக அளவிலான யூரிக் அமிலம் அல்லது ஹைப்பர்யூரிகேமியா என்பது உடலில் 6 mg/dL அளவுக்கு மேல் பெண்களுக்கும் 7 mg/dL அளவுக்கு மேல் ஆண்களுக்கும் இருக்கும் நிலை ஆகும்.
Table of Contents
கீமோதெரபி போன்ற தீவிர மருத்துவ சிகிச்சையின் விளைவாகவும் சில சமயங்களில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கச்செய்யும் என்றாலும் பொதுவாக கீழே கூறப் பட்டுள்ள காரணங்களாலும் யூரிக் அமிலம் அதிகரிக்கலாம்:
யூரிக் அமிலத்திற்கான அறிகுறிகளை மூன்று வகையாக பிரிக்கலாம். மூட்டு வகை, சிறுநீரக வகை மற்றும் சரும வகை ஆகும்.
உடலில் அதிக அளவிலான யூரிக் அமிலம் இருக்கும் பொழுது, அவை கற்கள்/ படிமங்களாக மாறி எலும்பு மூட்டுகளில் தங்கி, சேர்ந்து அதிக வலி, வீக்கம், மென்மையடைதல், சிவத்தல் போன்றவற்றை உண்டாக்குகிறது. சிலருக்கு மூட்டுகள் சூடாகி விடும். இந்த மாதிரி நிலைமைக்கு பெயர் கீல் வாதம் என்று பெயர். இது பெரும்பாலும் கால் கட்டை விரல் பகுதியை தான் பாதிக்கிறது. பின் அங்கிருந்து நகர்ந்து குதிகால், கணுக்கால், விரல்கள், மணிக்கட்டு, முழங்கை பகுதிகளை பாதிக்கிறது. இதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நிரந்தர பாதிப்பு உண்டாகும்.
சிறுநீர் பாதையில் படிந்துள்ள யூரிக் அமில படிமங்கள் சிறுநீரக கற்களாக வளர்ச்சியடைகின்றன. ஆண்களிடையே பொதுவாக காணப்படுகிறது இப்பிரச்சினை. சிறுநீரக கற்கள் பின்புறத்திலிருந்து வலி தொடங்கி முன்புறம் வரை வலியை தரும். மேலும் குமட்டல், காய்ச்சல், உடலில் குளிர்ந்த தன்மை, கீழ் இடுப்பு பகுதியில் வலி, சிறுநீரில் இரத்தப் போக்கு போன்றவற்றையும் உண்டாக்குகிறது.
உடலில் அதிக அளவான யூரிக் அமிலம் சேர்ந்து, கீல் வாத பாதிப்பு வெகு நாட்களுக்கு தொடர்ந்து இருக்கும் பொழுது, யூரிக் அமில படிமங்கள் சேர்ந்து சருமத்திற்கு அடியில் கட்டிகளாக உருவாகின்றன. டோஃபி எனப்படும் இக்கட்டிகளால் வலி உண்டாவதில்லை. இவை பொதுவாக முழங்கை, கை, விரல்கள், கால் விரல்களில் ஏற்படுகிறது.
ஹைப்பர்யூரிகேமியா என்னும் இந்த நோயை, உணவு முறையில் மாற்றம், தினமும் இரண்டு லிட்டர் நீர் அருந்துதல், மது அருந்துவதை குறைத்தல் போன்ற நம் வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் மூலம் சமாளிக்கலாம் என்றாலும் மருத்துவரை நாடி நோயை சரியான முறையில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை பெறுவதும் மிக அவசியம்.
Image sources: Wikimedia commons, Flickr and Pixabay
COMMENTS (0)